For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபேஷியல் செய்த பின் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்கும் பொருட்கள்!

By Maha
|

ஃபேஷியல் செய்தால் சருமத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறதா? இதனால் ஃபேஷியல் செய்ய பயப்படுகிறீர்களா? அப்படியானால், ஃபேஷியல் செய்த பின் ஒருசிலவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்புக்களை தடுக்கலாம்.

பொதுவாக ஃபேஷியல் செய்த பின் சருமம் வறட்சி அடைவதற்கு காரணம், ஃபேஷயல் செய்யும் போது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையானது முற்றிலும் வெளியேற்றப்படுவதால், சருமத்தில் எண்ணெய் பசையானது சிறிதும் இல்லாமல் வறட்சி ஏற்பட்டு, அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

இதுப்போன்று வேறு: சருமத்தின் அழகை அதிகரிக்க தக்காளி ஜூஸ் யூஸ் பண்ணுங்க...

அதுமட்டுமின்றி, சில பார்லர்களில் ஃபேஷியல் செய்யும் போது, அனைத்து சருமத்திற்கும் ஒரே மாதிரியான ஃபேஷியல் கலவைகளைப் பயன்படுத்துவதாலும், சரும வறட்சி ஏற்படுகிறது. இதனால் பலர் வீட்டிலேயே ஃபேஷியல் செய்கிறார்கள். இப்படி வீட்டில் செய்தால் மட்டும் சரும வறட்சி ஏற்படாமல் இருக்கப் போவதில்லை.

எனவே சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு, ஃபேஷியல் செய்த பின்னர், சருமத்தை ஒருசில பொருட்களைக் கொண்டு பராமரித்தால், சரும வறட்சியை தடுத்து, அழகான சருமத்தைப் பெறலாம்.

இப்போது ஃபேஷியல் செய்த பின்னர் எந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

தேன் ஒரு மிகச்சிறந்த சரும வறட்சியைப் போக்கும் பொருள். அதற்கு ஃபேஷியல் செய்த பின்னர் ஒரு பௌலில் தேன் ஊற்றி, காட்டன் கொண்டு சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இந்த முறையை ஃபேஷியல் செய்த உடனேயே செய்ய வேண்டும். இதனால் சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

வறட்சியைத் தடுக்கும் லோசன்கள்

வறட்சியைத் தடுக்கும் லோசன்கள்

வீட்டிலேயே ஃபேஷியல் செய்தாலும் சரும வறட்சி ஏற்படும். எனவே ஃபேஷியல் செய்த பின்னர், வறட்சியைத் தடுக்கக்கூடிய லோசன்களைக் கொண்டு சருமத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமம் மென்மையாகவும், பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமலும் இருக்கும்.

பால்

பால்

சிறிது காட்டனை எடுத்துக் கொண்டு, அதனை பாலில் நனைத்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான துணி கொண்டு துடைத்து எடுத்தாலும், சரும வறட்சி நீங்கும். வேண்டுமானால், பாலில் பாதாமை பொடி செய்து போட்டு, அதனை சருமத்திற்கு பயன்படுத்தினாலும், ஃபேஷியல் செய்த பின் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

தண்ணீர்

தண்ணீர்

தினமும் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இப்படி குடித்தால், ஃபேஷியல் குடித்த பின்னர் சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மேலும் தண்ணீர் குடிப்பதால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமமும் பொலிவோடு இருக்கும்.

அவகேடோ எண்ணெய்

அவகேடோ எண்ணெய்

அவகேடோ எண்ணெயில் எண்ணெய் பசை மற்றும் சருமத்தை புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் இருப்பதால், இதனை ஃபேஷியல் செய்த பின்னர் பயன்படுத்தினால், சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம். மேலும் அவகேடோ எண்ணெய் கரும்புள்ளிகளையும் நீக்கிவிடும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஃபேஷியலுக்கு பின்னர் ஏற்படும் வறட்சியைத் தடுக்க வேண்டுமானால், ஓட்ஸ் உள்ள லோசன்களை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஓட்ஸை பொடி செய்து பால் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை சருமத்திற்கு தடவினாலும், சரும வறட்சியைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dry Skin After Facial: Remedies

Dry skin after facial can be due to absence of products in that facial that nourishes your skin. Here are some ways and techniques which if you follow can help you combat with dry skin issues.
Desktop Bottom Promotion