முகப்பருக்கள் வருவதற்கு காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

முகத்தில் பருக்கள் வருவதற்கு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், வேறு சில காரணங்களும் உள்ளன. அத்தகைய காரணங்களை தெரிந்து கொண்டு அவற்றில் இருந்து சற்று கவனமாக இருந்தால், பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஏனெனில் பருக்கள் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களின் மூலமும் தான் வருகிறது. அந்த பழக்கவழக்கங்களைத் தவிர்த்தால், நிச்சயம் முகத்தில் பருக்கள் வருவதைத் தவிர்ப்பதோடு, பருக்கள் முகத்தில் பரவுவதையும் தடுக்கலாம். சரி, இப்போது பருக்கள் வருவதற்கு காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும பராமரிப்பு பொருட்கள்

சரும பராமரிப்பு பொருட்கள்

கடைகளில் விற்கப்படும் சரும பராமரிப்பு பொருட்கள் அனைவருக்குமே சிறந்ததாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அந்த பொருட்களே சரும துளைகளை அடைத்து பருக்களை ஏற்படுத்தும். அதிலும் எண்ணெய் பசை அதிகம் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தினால், அவை பருக்களை தொடர்ச்சியாக வரவழைப்பதோடு, கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தும். எனவே எந்த ஒரு சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தும் முன்னரும் அதனை பரிசோதித்து பின் உபயோகிக்க வேண்டும்.

இரவில் சருமத்தை சுத்தப்படுத்தாமல் இருப்பது

இரவில் சருமத்தை சுத்தப்படுத்தாமல் இருப்பது

இரவில் தூங்கும் போது கிளின்சர் பயன்படுத்தி முகத்தை நன்கு நீரில் கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவிக் கொண்டு தூங்க வேண்டும். தூங்கும் போது முகத்தை கழுவாமல் தூங்கினால், சருமத்துளைகளை அடைத்துள்ள தூசிகள் சருமத்தில் அப்படியே தங்கி, அவை பருக்களை ஏற்படுத்துவதுடன், முகத்தை பொலிவற்றதாக வெளிக்காட்டும்.

அளவுக்கு அதிகமான மேக்கப்

அளவுக்கு அதிகமான மேக்கப்

மேக்கப் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தாலும், பருக்கள் வர ஆரம்பிக்கும். அதிலும் ஒருசில மேக்கப் சாதனங்களில் செயற்கையான நிறங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்த்திருப்பதால், அவை சருமத்தில் அரிப்பை ஏற்படுத்துவதோடு, பருக்களையும் வரவழைக்கும். ஆகவே மேக்கப் சாதனங்களை பயன்படுத்தும் முன்னும் சோதித்துப் பார்க்க வேண்டும்.

அளவுக்கு அதிகமான வறட்சி

அளவுக்கு அதிகமான வறட்சி

எண்ணெய் பசை தான் சருமத்தில் பருக்களை வரவழைக்கிறது என்று நினைத்து, பலர் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைப் போக்க கெமிக்கல் அதிகம் இருக்கும் கிளின்சர், ஆல்கஹால் அடிப்படையாகக் கொண்ட டோனர் ஆகியவற்றை தெரியாமல் வாங்கிப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் எண்ணெய் பசையின் உற்பத்தி தான் அதிகரிக்கும். எனவே எப்போதும் சருமத்தை சரியான கிளின்சர் மற்றும் டோனர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

அசுத்தமான தலையணை உறை

அசுத்தமான தலையணை உறை

உங்கள் தலையணை உறையை துவைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதா? அப்படியெனில் அதன் காரணமாகவும் முகத்தில் பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் தலையணையை துவைக்காமல் இருந்தால், அதில் உள்ள அழுக்குகளால் சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு பருக்கள் வரும். தலையணை உறை மட்டுமின்றி, முகத்தை துடைக்கப் பயன்படுத்தும் டவல் அசுத்தமாக இருந்தாலும் பருக்கள் வரும்.

கூந்தல் பராமரிப்பு பொருட்கள்

கூந்தல் பராமரிப்பு பொருட்கள்

பெண்களுக்கு பருக்கள் அதிகம் வருவதற்கு காரணம், அவர்களின் கூந்தல் முகத்தில் படுவதால் தான் என்றும் சொல்லலாம். அதிலும் கூந்தலுக்கு எண்ணெய் பயன்படுத்துவதுடன், கூந்தலைப் பராமரிக்க பயன்படுத்தும் ஷாம்பு, கண்டிஷனர் போன்றவற்றில் சிலிகான்கள் இருப்பதால், கூந்தல் முகத்தில் அதிகம் படும் போது பருக்கள் வர ஆரம்பிக்கின்றன.

டயட்

டயட்

சிலர் சாக்லெட், பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிட்டால் மட்டும் பருக்கள் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் ஆரோக்கியமற்ற டயட்டைப் பின்பற்றினால், எந்த ஒரு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும் பருக்கள் வர ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ditch Habits That Cause Acne

To find out about some simple habits that could lead to acne and how to deal with it...
Story first published: Tuesday, December 23, 2014, 10:38 [IST]