Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
சருமம் பளபளக்க வேண்டுமா? கண்ட கண்ட க்ரீம்களை விட்டுட்டு, யோகாவை முயற்சி செய்யுங்க...
இயற்கையான பொலிவுமிக்க சருமம் வேண்டுமா? நல்லது, எங்களிடம் அதற்கான பதில் உள்ளது - யோகா. யோகா உங்களுக்கு நல்ல மன நலத்தையும் உடல்நலத்தையும் தருகிறது. இதனால் தோல் பளபபளக்கும். பொலிவான சருமம் பெற உதவும் மேன்மையான 5 யோகாசன முறைகளை கீழ் வரும் பகுதியில் பார்க்கலாம்
ஆயுர்வேதத்தில் மருத்துவர்கள் ஒருவரது உடல் நலத்தை அவர்களின் தோலிலிருந்து கண்டறிய முடியும் என நம்பினார்கள். நல்ல இரத்த ஓட்டமும் கிடைத்தால், ஆக்சிஜன் நிறைந்த அளவில் உடலுக்கு கிடைத்து, உள்ளுறுப்புகளும் ஆரோக்கியமாக செயல்படத் துவங்குகின்றன. இந்த பகுதியில் யோகா நிலைகள் வழியாக, இரத்த ஓட்டத்தை அதிக அளவில் முகத்திற்கு கொண்டு வருவது பற்றியும், ஜீரணிக்கும் திறன்களை அதிக படுத்துவது பற்றியும் மற்றும் இரத்தத்தில் ஆக்சிஜன் அதிக கலப்பதற்கும் பற்றியும் டிப்ஸ்களை அளித்து, உங்களை எப்பொழுதும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் அழகாகவும் இருக்கச் செய்வது பற்றி பார்ப்போம்.

பக்சிமோத்தாசனம்
முன் பக்கமாக குனிந்து செய்யும் இந்த யோக நிலையில் இரத்த ஓட்டத்தை முகத்தின் பக்கம் அதிகமாக ஏற்படுத்த முடியும். மேலும், இது வயிற்றை நன்கு செயல்படவும் மற்றும் தொடை தசைகளை வலுப்படுத்தவும், முதுகையும் கைகளையும் ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லவும் உதவுகிறது.
மனதில் வைக்க வேண்டிய குறிப்புகள்: உங்களுக்கு எந்த வகையான இடுப்பு வலியோ அல்லது முதுகு தண்டு பிரச்னைகளோ இருந்தால் இதை செய்ய வேண்டாம். அதுமட்டுமல்லாமல் முதன்முறையிலேயே உங்கள் தலையை கொண்டு கால் முழங்காலை தொட முடியாது. ஆதலால் மெதுவாவும் சிரமம் இல்லாமலும் செய்வது நல்லது. இதனை தொடர்ந்து முயன்று வந்தால் உங்களுடைய நெகிழ்வுத்தன்மையை மீண்டும் பெற்று ஆசனத்தை சிறப்பாக செய்யத் தொடங்குவீர்கள்.

மட்ஸ்ய ஆசனா மட்சயாசனா
இந்த நிலை முகத்தின் தசைகளை இளைப்பாற செய்து, முதுகு மற்றும் கழுத்து பகுதியின் தசைகளை உறுதிபடுத்துகிறது. இந்த பயிற்சி கட்டுப்பாடான இரத்த ஓட்டத்தையும் அதிகப் படியான ஆக்சிஜனையும் முகத்திற்கு அளிக்கிறது.
மனதில் வைக்க வேண்டிய குறிப்புகள்: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தாலோ அல்லது முதுகு மற்றும் கழுத்து பகுதியில் வலியிருந்தாலோ இந்த பயிற்சியை செய்ய வேண்டாம்.

ஹலாசனம்
இந்த நிலை அதிக நேரம் அமர்ந்திருப்பாவ்கள் மற்றும் தவறான தோரணையில் அமர்வோருக்காகவும் மிகவும் தேவையான யோக நிலையாகும். இது தைராய்டு, பேரா-தைராய்டு சுரப்பிகளை தூண்டியும், நுரையீரல் மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் நல்ல இரத்த ஓட்டத்தை சீர்படுத்தியும் முகத்திற்கும் தலைக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, ஹார்மோன்களை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
மனதில் வைக்க வேண்டிய குறிப்புகள்: கல்லீரல் அல்லது மண்ணீரல் பிரச்சனைகளொ, உயர் இரத்த அழுத்தம், உதிர போக்கு, வயிற்றுப் பொக்கு அல்லது கழுத்து பிரச்னைகள் இருந்தால் இந்த பயிற்சியை தவிர்ப்பது நல்லது.

பிராணயாமம்
ஆழமாக சுவாசத்தை இழுக்கும் போதும் சுவாசத்தை வெளியேற்றும் போதும் ஆக்சிஜன் இரத்தத்தில் கலந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது மனதை அமைதிப் படுத்தி நரம்புகளை இளைப்பாற செய்கின்றது. இந்த ஆசனம் உங்களை மன அழுத்ததிலிருந்து விடுவித்து உங்கள் அழகை நிலைநிறுத்தும் பணியை செய்கிறது.

சவாசனம்
யோகா நித்ரா அல்லது சாவாசனா முறையில் முழு அமைதியை அனுபவிக்க முடியும். நீங்கள் சாதாரணமாக படுத்து உங்கள் கால் கைகளின மூட்டுகளை தளர்வான நிலையில் வைக்கவேண்டும். கண்களை முடி அவைற்ற நிலையில் படுத்திருக்க வேண்டும்.

சிரசாசனம்
சிரசாசனா சற்றே கடினமான முறையாக இருந்தாலும் ஆரோக்கியமான தோற்றமும் நீண்ட நாள் பொலிவும் பெற இந்த ஆசனத்தை கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் தலைகீழாக நிற்கும் போது, இரத்தம் மேலிருந்து கீழ் நோக்கி பாய்வதால் முகத்திற்கான இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. புவியீர்ப்பு சக்திக்கு எதிர் நிலையில் தலைகீழாக நிற்பதால், முகத்திற்கான இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தின் தோலில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஊட்டச்சத்துகளும், ஆக்ஸிஜனும் ஒருங்கே முகத்தை நோக்கி பாய்வதால் அவற்றின் உதவியால் உங்கள் முகம் பளபளக்கத் தொடங்கி பொலிவடைகிறது.



Click it and Unblock the Notifications











