Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
பொலிவான சருமத்திற்கு க்ரீன் டீ ஃபேஸ் பேக் போடுங்க...
க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. அதிலும் சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது. மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளான முகப்பரு, பழுப்பு நிற சருமம், சரும புற்றுநோய் போன்றவைகளையும் தடுக்கும். ஏனெனில் க்ரீன் டீயில் டானிக் ஆசிட் நிறைந்திருக்கிறது.
எனவே முகத்தை அழகாக வைத்துக் கொள்ள ஆசைப்படுபவர்கள், க்ரீன் டீயை கொண்டு சருமத்தை பராமரித்து வந்தால், பொலிவான சருமத்தோடு, பிரச்சனையில்லாத ஆரோக்கியமான சருமத்தையும் பெறலாம். அதற்கு க்ரீன் குடித்தாலும் சரி அல்லது அதனை சருமத்திற்கு ஃபேஸ் பேக்காக போட்டாலும் சரி, அழகான முகத்தைப் பெறுவது உறுதி. சரி, இப்போது அந்த க்ரீன் டீயை வைத்து எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போமா!!!

உடனடியாக முகம் பிரகாசிக்க...
மூன்று டேபிள் ஸ்பூன் க்ரீன் டீயில், கொக்கோ பவுடர் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உடனே பொலிவைக் காணலாம்.

புத்துணர்ச்சியான சருமத்திற்கு...
பப்பாளியை அரைத்து, அதில் சிறிது க்ரீன் டீ சேர்த்து கலந்து கொள் வேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி, லேசாக துடைத்து, பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் நன்கு புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.

பொலிவான சருமத்திற்கு...
க்ரீன் டீயில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கி, முகமானது பொலிவோடும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

சுருக்கத்தை போக்க...
சருமத்தில் முதுமை தோற்றத்தை தரும் சுருக்கத்தைப் போக்குவதற்கு, 3 ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் சுருக்கமின்றி இளமையுடன் காணப்படும்.

பளிச்சென்ற சருமத்திற்கு...
கொதிக்கும் நீரில் 3 க்ரீன் டீ பேக்குகளை போட்டு, சிறிது இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி, சருமத்தில் தடவினால் முகப்பருக்கள் நீங்கிவிடும். வேண்டுமெனில் இத்துடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்தும் சருமத்திற்கு போடலாம். இதனால் சருமத்தில் உள்ள பழுப்பு நிறம் மற்றும் தழும்புகள் மறையும்.

பிரகாசமான சருமத்திற்கு...
1 டீஸ்பூன் தேனில், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் க்ரீன் டீ பவுடரை சேர்த்து கலந்து, லேசாக சூடேற்றி, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.

குறிப்பு
தினமும் முகத்திற்கு க்ரீன் டீ கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், முகம் புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும், பிரகாரசமாகவும் இருக்கும். எனவே அழகாக ஜொலிக்க க்ரீன் டீயை சருமத்திற்கு பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications