For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொளுத்தும் வெயிலிலும் அழகாய் தெரிய டிப்ஸ்

By Mayura Akilan
|

Beauty Tips
கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெயிலுக்கு பயந்து கொண்டு வெளியில் செல்லாமல் இருக்கமுடியாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப்போய்விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

தயிர் கலவை

வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.

கருமை மறையும்

வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக

பாசிப் பருப்பு, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளரி விதை, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சைசாறு , தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.

உருளைக் கிழங்கு பவுடர்

தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றிவிடும்.

பச்சைக் காய்கறிகள்

உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.

இரவில் படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம், கோல்டு க்ரீம் ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும். காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்பம் தாக்காதிருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ளவேண்டும்.

இயற்கை சிகைக்காய் பவுடர்

தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இதற்கு சிகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூலாங்கிழங்கு, புங்கங்கொட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை தக்கவைப்ப தோடு, கருமையும் மறைய தொடங்கும்.

வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். புருவங்களை சீர்படுத்தி, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்துக் கொள்ள அதிகம் செலவாகாது. மாதமொரு முறை இவற்றைச் செய்து கொள்வது முகத்தின் அழகைப் பாதுகாக்க விரும்பும் வசதி படைத்தவர்கள் கோல்ட் பேஷியல் கினாட் பேஸியல் செய்து கொள்ளலாம்.

மேக் அப் கவனம்

வெயிலும், நெரிசலும் அதிகமாக இருப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப்-ஐ முகத்தில் தேய்த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க பவுடர் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க வேண்டும். அவரவர் நிறத்துக் கேற்றாற் போல் பவுடரை தேர்ந்து எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங்கும்.

English summary

Summer Beauty Tips | கொளுத்தும் வெயிலிலும் அழகாய் தெரிய டிப்ஸ்

Summer is one of those times when less is best. Trying to enhance your natural looks with minimal embellishment will work best under the unforgiving sun. A matte powder over foundation with SPF is better than heavy foundation lotions and creams that will look patchy once you sweat a little.
Story first published: Tuesday, February 21, 2012, 12:58 [IST]
Desktop Bottom Promotion