Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சருமத்தை மென்மையாக்கும் "நேச்சுரல் பட்டர்ஸ்"!!!

ஷியா பட்டர்
* முதலில் அரை கப் ஷியா பட்டரை எடுத்துக் கொண்டு, அதில் 5-6 துளிகள் ஆமணக்கெண்ணெயை விட்டு கலந்து. அதனை உடல் முழுவதும் தடவினால், சருமத்திற்கு ஒருவித உற்சாகம் கிடைத்த மாதிரியான உணர்வை உணரலாம்.
* வேண்டுமென்றால் அரை கப் கற்றாழை ஜெல் மற்றும் ஷியா பட்டரை எடுத்து கலந்து உடலுக்கு தடவினால், சருமமானது நன்கு மென்மையாக இருக்கும்.
* முகத்தில் வெடிப்புகள் இருப்பவர்கள், 7-8 துளிகள் தேங்காய் எண்ணெய், 5-6 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் அரை கப் ஷியா பட்டரை எடுத்துக் கொண்டு நன்கு கலந்து, உடலில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
* ஒரு நல்ல வாசனையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், 7-8 துளிகள் லாவண்டர் எண்ணெயை, பட்டருடன் விட்டு, உடலுக்கு தேய்க்கலாம். இதனால் அந்த நாள் முழுவதும் ஒரு நல்ல மணம் இருக்கும்.
கொக்கோ பட்டர்
* ஒரு அரை கப் கொக்கோ பட்டருடன் 10 துளிகள் ஆலிவ் ஆயிலை விட்டு கலந்து உடலுக்கு தடவி வந்தால், சருமமானது மென்மையாவதோடு, வறண்ட சருமமானது போய்விடும்.
* மற்றொரு சிறந்த வறட்சியை போக்கும் முறை என்னவென்றால், 6-7 துளிகள் திராட்சை விதையால் ஆன எண்ணெய், 7-8 துளிகள் ஆப்ரிகாட் கர்னல் எண்ணெய் மற்றும் அரை கப் கொக்கோ பட்டரை கலந்து, தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமமானது பொலிவுடன் காணப்படும்.
* இல்லையென்றால் அரை கப் கொக்கோ பட்டருடன், 10 துளிகள் ரோஸ் வாட்டர் மற்றும் 6 துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து தடவலாம்.
மேற்கூறியவாறெல்லாம் பயன்படுத்தினால் சருமமானது அழகாக மின்னுவதோடு, மென்மையாகவும் மாறும். மேலே சொன்ன அனைத்து விதமான பட்டர்களும், காஸ்மெட்டிக் கடைகளில் கிடைக்கும். மேலும் மேலே சொன்ன கலவையை நீண்ட நாட்கள் சேமிக்கவும் முடியும்.



Click it and Unblock the Notifications