Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
சருமம் மினுமினுன்னு ஜொலிக்கணுமா? கடுகு வெச்சு ஃபேஷியல் பண்ணுங்க...

* ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு பொடியை எடுத்துக் கொண்டு, 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி, நன்கு மென்மையாக 3-4 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.
* கடுகை வைத்து ஃபேஷியல் செய்வதில், மிகவும் சிறந்தது என்றால், அது இந்த முறை தான். இந்த முறையால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும். இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு பொடி, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சற்று நேரம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.
* கடுகு மற்றும் கற்றாழையை கலந்து செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைப்பதோடு, முகத்தில் உள்ள பிம்பிள், சரும துளைகளில் உள்ள தூசிகள் போன்றவை போய்விடும். இந்த ஸ்கரப் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் கடுகு பொடி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இது ஒரு மிகவும் சிறப்பான இயற்கை ஸ்கரப். இந்த முறையால், கடுகு நிச்சயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும்.
* ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு பொடி சேர்த்து, முகத்திற்கு தடவி, 3-4 நிமிடம் தொடர்ந்து தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் பொலிவோடு காணப்படுவதோடு, ஸ்கரப்பிற்குப் பின் சருமத்தின் நிறம் சற்று கூடும்.
* முகம் நன்கு மினுமினுப்போடு காணப்பட, ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு பொடி, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளார் சேர்த்து, நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 2-3 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், விரைவில் முகம் பொலிவாவதை தெரிந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
