For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா? வீட்ல மருந்திருக்கு!

By Mayura Akilan
|

Elbows and Knees
நல்ல சிவந்த நிறத்தை உடையவர்களுக்குக் கூட முழங்கை, முழங்கால், கணுக்கால், கழுத்தின் பின்புறம் கருமை படர்ந்து இருந்திருக்கும். எத்தனையோ சிகிச்சை எடுத்தும் எளிதாக நிறம் மாறாது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த கருமையான இடங்களை நிறம் மாறச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

எலுமிச்சை, வினிகர்

எலுமிச்சையை சரிபாதியாக நறுக்கி சருமத்தில் கருமை படர்ந்துள்ள இடங்களில் தேய்த்து ஊறவைத்து கழுவலாம்.

எலுமிச்சை சாறுடன் பாலாடை, வெள்ளரிக்காய் சாறு அல்லது மஞ்சள்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து ஊறவைத்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள், வினிகர் கலந்து கணுக்கால் பகுதியில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் எலுமிச்சையால் தேய்த்து கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒருமாதத்திற்கு தொடர்ந்து இதனை செய்யவேண்டும்.

யோகர்டு பேஸ்ட்

3 ஸ்பூன் யோகர்டுடன் சில துளிகள் வினிகர் சேர்த்து கலந்து கால் முட்டியில் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து ஊறவைக்கவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

கடலைமாவு 2 ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, பால் 2 ஸ்பூன் கலந்து பேஸ்ட் போல கலக்கவும். இதனை முட்டிப் பகுதிகளில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும். குளிர்ந்த நீரில் கழுவ கறுமை மறையும். வறண்ட தோல் மென்மையாகும்.

பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் நன்றாக அரைத்து கை, கால் முட்டிப் பகுதிகளில் தேய்க்கவும். கருமை மறையும்.

பசும் மஞ்சள், தயிர்

பசும் மஞ்சள் நல்ல மணத்தைத் தரும். எல்லா வயதினரும் எந்த வகை சருமத்தினரும் உபயோகிக்க உகந்தது. பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும்.அந்த கருமையான பகுதிகளில் இந்த விழுதை தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, பிறகு குளிக்கவும். இப்படியே செய்து வந்தால் கருமை மறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.வறண்ட சருமத்திற்கு மிகச் சிறந்த சிகிச்சை இது.

பசும் மஞ்சளைக் அதன் இலையோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அதோடு பாசிப் பயறு மாவைக் கலந்து பசைப் போல குழைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை தினமும் பூசிக் குளித்தால் தோலில் கருமை உள்ள பகுதிகள் படிப்படியாக மறையும். பசு‌ம் ம‌ஞ்சளை அரை‌த்து உட‌லி‌ல் தட‌வி‌‌க் கு‌ளி‌த்தா‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌பிற‌க்கு‌ம்.

வைட்டமின் இ

வைட்டமின் இ எண்ணெய் மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த எண்ணெயை கருமை உள்ள பகுதிகளில் பூசி ஊறவைத்து வெந்நீரில் குளிக்கலாம். கற்றாழைச் செடியை புதிதாக பறித்து அதை முட்டிக்கால், கணுக்கால் பகுதிகளில் கருமை உள்ள இடங்களில் தேய்த்து குளிக்கலாம்.

English summary

Home remedies of dark skin at the elbows and knees | முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா? வீட்ல மருந்திருக்கு!

Excessively dark skin at the elbows or knees is usually because of friction and dryness. There are several home remedies that you can try, but at the same time you should try to minimise friction at your elbows and also try to keep them moist and clean. Vitamin E and aloe are beneficial for most skin problems, so you should try applying them.
Story first published: Friday, April 6, 2012, 10:30 [IST]
Desktop Bottom Promotion