Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
அழகான சருமம் வேண்டுமா? இதை சாப்பிடலாமே!!!
இன்றைய காலத்தில் அழகை விரும்பாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். மேலும் அழகை மேம்படுத்த முயற்சி எடுக்காதவர்கள் என்று எவரும் இருக்கமாட்டார்கள். அதிலும் அந்த அழகை மேம்படுத்த நிறைய பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் செல்வதை விட, இயற்கையான முறையிலேயே அழகை மேம்படுத்தலாம். இத்தகைய இயற்கை அழகு அழிவதற்கு பல காரணங்கள இருக்கின்றன.
அவற்றில் சருமம் பொலிவிழந்து, அழகின்றி காணப்படுவதற்கு முக்கியமான காரணம் தான் சுற்றுச்சூழல் மாசுபாடு. மேலும் சருமத்திற்கு ஏற்ற தேவையான ஊட்டச்சத்துக்களும் போதிய அளவில் கிடைப்பதில்லை. அதிலும் இன்றைய வாழ்க்கை முறையில் உணவுப் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், சருமம் எந்த ஒரு அழகுமின்றி காணப்படுகிறது.
ஆகவே அத்தகைய சரும அழகை மேம்படுத்த, ஒருசில உணவுகளை சாப்பிட்டால், சருமம் எந்த ஒரு காரணத்தினாலும் பொலிவிழக்காமல், அழகோடு காணப்படும். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆகவே இதை சாப்பிடுவதால், சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தால், சருமம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். மேலும் இது சருமத்தை சுருக்கமின்றி இளமையுடன் வைத்திருக்க உதவும். எனவே ஒரு நாளைக்கு ஒரு ஆரஞ்சு பழம் போதுமானது.

பப்பாளி
கலோரி குறைவாக உள்ள பப்பாளியில், வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் வறட்சியால் ஏற்படும் கோடுகள் வராமல் தடுத்து, சருமத்தை சுருக்கமின்றி அழகாக வைத்திருக்கும். மேலும் இதில் உள்ள கரோட்டினாய்டு, உடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

தானியங்கள்
தானியங்களில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும் புதிய பழுதடைந்து செல்கள் புதுப்பித்து வலுவடைவதோடு, புதிய செல்களும் உருவாகும். மேலும் தானியங்களில் உள்ள நியாசின் இரத்தத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை சரும செல்கள் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் அதிக அளவில் சருமத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இதை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை நன்கு செயல்பட்டு, சருமம் வறட்சி இல்லாமல் பொலிவோடு காணப்படும்.

கிரீன் டீ
கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சூரியக்கதிர்களினால் சருமம் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தை நன்கு இளமையோடு வைக்கும். ஆனால் இந்த டீயை குடிக்கும் போது இத்துடன் பாலை சேர்த்து குடிக்கக்கூடாது. ஏனெனில் அதன் சக்தி முற்றிலும் போய்விடும்.



Click it and Unblock the Notifications
