Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப அன்னாசிப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
Skin Care Tips In Tamil: மாம்பழத்திற்கு அடுத்தப்படியான மணத்தாலும், சுவையாலும் ஆளை மயக்கக்கூடிய பழம் தான் அன்னாசி. இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாகும். இப்படிப்பட்ட சுவையான பழம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது.

ஏனெனில் இதில் பி வைட்டமின்கள் , வைட்டமின் சி , மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம், பீட்டா-கரோட்டின், ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகளவில் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த அன்னாசிப்பழம் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்கக்கூடியது. இதனால் தான் பல ஃபேஸ் பேக்குகளில் அன்னாசிப்பழம் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இப்படி கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அன்னாசிப்பழ ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அந்த அன்னாசிப்பழத்தைக் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகளை தயாரித்து பயன்படுத்தி வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும் அல்லவா? அதுவும் இந்த அன்னாசிப்பழமானது முகப்பரு, சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், சரும கருமை போன்றவற்றை போக்குவதில் வல்லது. இப்போது அன்னாசிப்பழத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்குகளைப் போடலாம் என்பதைக் காண்போம்.
1. முதுமை தோற்றத்தை தடுக்கும் அன்னாசி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பிளெண்டரில் சிறிது அன்னாசிப்பழ துண்டுகளை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
2. பொலிவான சருமத்திற்கான அன்னாசி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் அன்னாசிப்பழ விழுதை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பினு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* சிறந்த பலனைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
3. முகப்பருவை தடுக்கும் அன்னாசி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் சிறிது அன்னாசிப்பழ கூழை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் க்ரீன் டீ மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
* பிறகு 15-20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகப்பரு வருவதைத் தடுக்கும். சிறந்த பலனைப் பெற வாரத்திற்கு 2-3 முறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
4. சரும கருமையைப் போக்கும் அன்னாசி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 4 டீஸ்பூன் அன்னாசி மற்றும் பப்பாளி பழக்கூழை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
5. சரும துளைகளை சுருக்கும் அன்னாசி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அன்னாசிப் பழ விழுதை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஓட்ஸ் பவுடரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சருமத் துளைகள் சுருங்குவதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

