Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம்
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்..
Skin Care Tips In Tamil: சரும பிரச்சனைகளில் பெரும்பாலானோரின் முக அழகை கெடுக்கும் ஒரு பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பரு ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் வரலாம். முக்கியமாக சருமத்தில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருந்தால், அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளானால், போதுமான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், எண்ணெய் பலகாரங்களை அதிகம் உட்கொண்டால் ஒருவரது முகங்களில் பருக்கள் வரக்கூடும்.

இது தவிர குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டாலும் முகப்பரு வரும் என்பது தெரியுமா? என்ன நம்பமுடியவில்லையா? ஆம், என்ன தான் பழங்களில் உடலுக்கு வேண்டிய பல வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், க்ளுக்கோஸ் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் போன்றவை கிடைத்தாலும், சில பழங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை முகப்பருக்களை அதிகம் வரத் தூண்டுகின்றன. அதுமட்டுமின்றி, சில வகையான பழங்கள் உடலின் சூட்டை அதிகரித்து, முகப்பருக்களை வரவழைக்கும். இப்போது முக அழகை கெடுக்கும் முகப்பருக்களை வரத்தூண்டும் பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
1. வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதை அனைவரும் அறிவோம். அதே சமயம் நன்கு கனிந்த வாழைப்பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. அதாவது இது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும். இப்படி இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது, சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து, அதன் விளைவாக முகப்பரு பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். எனவே முகப்பரு சருமத்தைக் கொண்டவர்கள் வாழைப்பழத்தை தினமும் அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல.
2. மாம்பழம்
பழங்களின் ராஜாவான மாம்பழம் அனைவருக்குமே பிடிக்கும். ஆனால் இந்த மாம்பழத்தில் சர்க்கரை அதிகளவில் உள்ளன. இது தான் இந்த பழத்தை மிகவும் சுவையானதாக்குகிறது. இந்த மாம்பழத்தை அதிகமாக உட்கொண்டால், அது சிலருக்கு அழற்சி, உடல் சூடு போன்றவற்றை ஏற்படுத்துவதோடு, சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கலாம். அதுவும் ஒரு மாம்பழத்தை சாப்பிட்டால், இப்படி ஏற்படாது. மாறாக அதிகளவு மாம்பழத்தை உட்கொண்டாலேயே ஏற்படும். எனவே அளவாக சாப்பிடுங்கள்.
3. திராட்சை
திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. அதே வேளையில் இதில் சர்க்கரையும் அதிகளவில் நிறைந்துள்ளன. எனவே சர்க்கரையை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதுவும் நார்ச்சத்துள்ள உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளாத போது, இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்கும். எனவே திராட்சையை எப்போதும் ஜூஸ் வடிவில் எடுப்பதை தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அது முகப்பரு பிரச்சனையை அதிகரித்துவிடும்.
4. ஆரஞ்சு
ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்கள் நேரடியாக முகத்தில் பருக்களை உண்டாக்குவதில்லை. இருந்தாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அதில் உள்ள அமிலத்தன்மை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் அசிட்டிக் பழங்கள் பொதுவாக சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை பாதித்து, சிலருக்கு சருமத்தில் எரிச்சல் போன்ற சரும பிரச்சனைகளை தூண்டலாம். அதுவும் சென்சிடிவ் சருமத்தினர் அல்லது முகப்பரு சருமத்தினரிடமே இப்படியான சரும பிரச்சனைகள் காணப்படுகிறது. எந்த பழங்களையும் அளவாக உட்கொள்ளுங்கள்.
5. பலாப்பழம்
மாம்பழத்தைப் போன்று நல்ல நறுமணத்தையும் தித்திக்கும் சுவையையும் கொண்ட பழம் தான் பலாப்பழம். இந்த பலாப்பழத்தை அதிகளவில் உட்கொண்டால், அது முகப்பருவை உண்டாக்கக்கூடும். ஏனெனில் பலாப்பழத்தை அதிகளவில் உட்கொள்ளும் போது, அது உடல் சூட்டை அதிகரிக்கிறது. இதனால் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இப்பழத்தை உட்கொண்டால், திடீர் முகப்பரு மற்றும் வீக்கம் ஏற்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

