Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தோசை மாவு சேர்த்து செய்யப்படும் கையேந்தி பவன் சட்னி ரெசிபி..ட்ரை பண்ணுங்க..இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
தோசை மாவு இல்லாத தமிழ்நாடு வீடுகளே இருக்க முடியாது. பெரும்பாலான இந்திய வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக நிச்சயம் இட்டலி அல்லது தோசை இருக்கும். தோசை மாவு வைத்து இட்லி, தோசை, பணியாரம் செய்வோம். இன்னும் சிலர் போண்டா, தேன்மிட்டாய் என சில இனிப்பு கார வகைகளை செய்வோம்.
அதே மாதிரி இட்லி தோசைக்கு வித விதமா குழம்பு, சட்னி, சாம்பார், மற்றும் இட்லி பொடி கூட செய்வோம். சட்னின்னு சொன்னதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, புதினா சட்னி, அப்புறம் பூண்டு சட்னின்னு லிஸ்ட் போயிட்டே இருக்கும். ஆனா தோசை மாவு வைச்சே சட்னி செய்ய முடியும்ன்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா? ஆமா, முடியும் தான். எப்படி செய்யறதுன்னு இங்க பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு - 5 பல்
- தக்காளி - 2
- வரமிளகாய் - 3
- காஷ்மீர் மிளகாய் - 3
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- புளித்த மாவு - ½ கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - சிறிதளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் நீக்கி வைத்து கொள்ளவும்.
- நன்றாக பழுத்த இரண்டு தக்காளி பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், தோல் நீக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
- பின் அதனுடன் வரமிளகாய், காஷ்மீர் மிளகாய், நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து அரைக்கவும்.
- தேவைப்பட்டால் அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும், எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் ஒரு கொத்து பச்சை கருவேப்பிலையை சேர்க்கவும்.
- அதனுடன் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நான் அரைத்து வைத்த கலவையை இதனுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக கொதிக்க
விடவும்.
- ஒரு பாத்திரத்தில் அரை கரண்டி தோசை மாவை எடுத்து ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- பச்சை வாசம் போனதும் கரைத்த வைத்த மாவு கலவையை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான தோசை மாவு சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
