For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலங்களில் ஆண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சில விதிமுறைகள்!!!

By Boopathi Lakshmanan
|

குளிர்காலத்தின் வருகை கொண்டு வரும் பல்வேறு புதிய சவால்களிலிருந்து ஆண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண்கள் அறியாமையில் இருக்கும் காலம் இனியும் தொடராமல் இருக்கவும், அனைத்து பருவநிலைகளையும் ஒன்று போல் கருதாமல் இருக்கவும் தயாராக இருக்க வேண்டும். காற்று மண்டலத்தில் மற்ற பருவங்களை விட அதிகமான மாற்றங்கள் குளிர்காலத்தில் நிகழ்வதால் உங்கள் தோல் மற்றும் முடியை மற்ற பருவநிலைகளிலிருந்து பாதுகாப்பதை விட, சற்றே அதிக கவனத்துடன் குளிர்காலத்தில் பாதுகாக்க வெண்டும். எனவே குளிருக்கான உடைகள் மற்றும் கையுறைகள் என்று மட்டுமல்லாமல், கடுங்குளிரின் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் முன்னெச்சரிக்கையுடன் நீங்கள் தயாராக இருப்பது நல்லது.

குளிர்காலத்தில் உங்களுடைய தோல் மற்றும் முடியை கடுங்குளிரிலிருந்தும் மற்றும் வறண்ட குளுமையான பருவநிலையிலிருந்தும் பாதுகாக்கக் கூடிய குளிர் பாதுகாப்பு பொருட்களை சேமித்து வைக்க வேண்டும். குளிர்காலத்தில் முடி மற்றும் தோலை ஈரப்பதமாக வைக்க சாதாரண பருவங்களை விட, மாறுபட்ட பல்வேறு வகையான மாய்ஸ்ட்ரைஸர்ஸ் தேவைப்படுகின்றன. குளிர்காலத்தில் தோல் வறண்டு போவதால், இயற்கையாகவே உற்பத்தியாகும் தோல் எண்ணையின் அளவு குறைவாக இருக்கும். உங்கள் மண்டைத்தோலில் வழக்கத்திற்கும் அதிகமான பொடுகுகள், உதடுகளில் வெடிப்புகள் ஆகியவற்றை பார்ப்பது தினசரி காட்சிகளாக இருக்கும். உங்களுடைய தோல் வறண்ட, சொரசொரப்பான தோலாக மாறிக் கொண்டிருக்கும்.

Winter Grooming Rules For Men

குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கான முதல் விதிமுறை நீங்கள் எப்பொழுதும் உடலின் ஈரப்பதத்தையும் மற்றும் உடலுக்கு நல்ல அளவிலான தண்ணீரையும் கொடுத்து பராமரிக்க வேண்டும் என்பது தான். இதனால் நீங்கள் அதிக முறை சிறுநீர் கழிக்க நேர்ந்தாலும் தண்ணீரின் அளவை குறையாமல் பார்த்துக் கொள்ளவும். நீங்கள் தலைக்கு குளித்த பின்னர், முடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கும் நல்ல மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவது அவசியம் ஈரப்பதம் உங்கள் முகம் மற்றும் முடிக்கு மட்டும் என்று கருதாமல், உங்கள் உடலில் உள்ள பிற வறண்ட பகுதிகளிலும் கூட மாய்ஸ்ட்ரைஸர் கிரீம்கள் அல்லது லோஷன்களை தடவவும். குளிர்காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு இடமாக உங்கள் உதடுகள் உள்ளன.

இங்கே ஆண்கள் குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான சில தகவல்கள் தரப்பட்டுள்ளன.

* தரமான மாய்ஸ்சுரைசிங் கிரீம் அல்லது லோஷன் பயன்படுத்தி முகத்தின் ஈரப்பதத்தை காத்திடவும். இயற்கையான அல்லது மூலிகைகளால் ஆன மாய்ஸ்ட்ரைஸர்களை பயன்படுத்தினால் நல்ல விளைவுகளும், பக்க விளைவுகள் வராமலும் இருக்கும். குளிர்காலத்தில் குறிப்பாக காற்று வறண்டு காணப்படுவதால், நல்ல தரமான மாய்ஸ்ட்ரைஸர்களை தேர்ந்தெடுக்கவும்.

* பருவநிலை குளிராகவும், வறட்சியாகவும் இருப்பதால், நீங்கள் தினசரி முகம் கழுவும் போது மாய்ஸ்ட்ரைஸர் பயன்படுத்துவதை உறுதி செய்யவும். நல்ல தரமான மாய்ஸ்ட்ரைஸர் கொண்டு முகத்தை கழுவும் போது அது தோலின் துளைகளை சுத்தப்படுத்தி, ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ளும். சாதாரணமாக முகத்தை கழுவி வந்தால் உங்கள் தோலுக்கு அவசியமாக கிடைக்கும் எண்ணையின் அளவு குறைந்து ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும்.

* தினசரி குளியல் சோப்பிற்கு பதிலாக கிரீம் சோப் அல்லது ஈரப்பதத்தை உருவாக்கும் குளியலுக்கு மாறி விடவும். உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும் வேளையில், உடலின் பிற பகுதிகள் வறண்டு விடவும், சொரசொரப்பாக இருக்குமாறும் விட்டு விடத் தேவையில்லை. கிரீம் சோப்கள் அதிகமான ஈரப்பதத்தை தோலில் நிலை நிறுத்த உதவுவதால், சாதாரண சோப்பிற்கு பதிலாக இவற்றை பயன்படுத்துவது உத்தமம்.

* உங்கள் உடலை மாய்ஸ்சுரைசிங் குளியல் செய்து குஷிப்படுத்திய பின்னர், நீங்கள் எந்த வகையான குளியல் சோப்பு பயன்படுத்தி இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவிலான ஈரப்பதம் உங்கள் உடலிலிருந்து குறைந்திருக்கும். எனவே, உங்கள் உடலின் ஈரப்பத அளவை புதுப்பிக்கும் பொருட்டாக மாய்ஸ்சுரைசிங் லோஷன்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். நல்ல தரமான லோஷன்களை பயன்படுத்தினால் தான் தோலில் ஈரப்பதம் மிஞ்சியிருக்கும்.

* எப்பொழுதும் லிப்-பாமை கையில் வைத்திருக்கவும். அது எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லவும், பயன்படுத்த எளிமையானதாகவும் இருக்கும். உங்கள் உதட்டின் தோல் மென்மையானதாகவும் மற்றும் வெளியில் நிலவும் பருவநிலையால் எளிதில் பாதிக்கப்படுவதாகவும் இருக்கும். அது குளிர்காலத்தில் வேகமாக வறண்டு விடக்கூடும் என்பதால், போதுமான அளவிற்கு லிப்-பாம் உதடுகளில் தடவுவதன் மூலம் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். ஆண்களுக்காக தயாரிக்கப்பட்ட பிரத்யோகமான லிப்-பாம்களை வாங்கி பயன்படுத்தவும்.

* குளிர்காலத்தில் தலைமுடி பராமரிப்பு சவலானதாக இருப்பதால் நல்ல, தரமான பொடுகு எதிர்ப்பு கன்டிஷனர்களை பயன்படுத்தவும். உங்கள் மண்டைத்தோல் எளிதில் வறண்டு, செதில்களாக உறிந்து வருவதால் பொடுகுகள் அதிவேகமாக பரவி வரும். எனவே உங்கள் மண்டைத்தோலை குளிர்காலத்தில் பொடுகுகளிலிடம் இருந்து பாதுகாக்கும் பொடுகு எதிர்ப்பு கன்டிஷனர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

* குளிரின் காரணமாக குடிக்கும் தண்ணீரின் அளவை குறைத்து விடுவதால், உடலில் போதுமான தண்ணீர் இருப்பதில்லை. தேவைக்கும் குறைவான அளவு தண்ணீர் குடிப்பதன் காரணமாக குளிர்காலங்களில் தோலில் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் உடலின் ஈரப்பதம் குறைந்து, உங்களுக்கு பொடுகுகள், முடி உதிர்தல், முடி உடைதல் மற்றும் சிக்கலான முடி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

English summary

Winter Grooming Rules For Men

Winter requires different kind of moisturising to hair and skin compared to moisturising required during summer. During winter, your skin and hair produce less oil naturally resulting in dryness. Here is some winter grooming rules for men.
Story first published: Friday, November 29, 2013, 19:20 [IST]
Desktop Bottom Promotion