For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரிய முகத்தையும் ஒல்லியா காட்டணும்னா என்ன செய்யணும் தெரியுமா?... இத ட்ரை பண்ணுங்க...

மேக்கப் என்பது நம்மை அழகாக காட்ட மட்டுமல்ல. நமது முகத்தை கச்சிதமாக மாற்றவும் உதவுகிறது. கண்கள், மூக்கு என்று அதன் தோரணையை துணிப்பாக எடுத்துக் காட்டவும் மேக்கப் அவசியம்

|

மேக்கப் என்பது நம்மை அழகாக காட்ட மட்டுமல்ல. நமது முகத்தை கச்சிதமாக மாற்றவும் உதவுகிறது. கண்கள், மூக்கு என்று அதன் தோரணையை துணிப்பாக எடுத்துக் காட்டவும் மேக்கப் அவசியம். மேக்கப்பை கொண்டே உங்கள் கண்களை பெரிதாகவும் சிறியதாகவும் கூட காட்டலாம். ஏனெனில் மேக்கப் அதன் வடிவம், வளைவு, நெளிவு எல்லாவற்றையும் ஏற்றாற்போல் மாற்றும் ஒரு நுட்பமான செயலும் கூட. அப்படிப்பட்ட மேக்கப்பை கொண்டு உங்கள் முகத்தை நீங்கள் ஒல்லியாக கூட காட்டலாம். அதைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரைமர்

ப்ரைமர்

மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் முகத்தை பிரகாசமாக்க ப்ரைமரை பயன்படுத்தி கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை இறுகச் செய்து ஊதிய சதையை ஒட்டினார் போல் காட்டும். பெரிய சரும துளைகள், வறண்ட சருமம் போன்றவற்றை இதன் மூலம் பை பை சொல்லிடலாம்.

காண்டூரிங் மற்றும் ஹைலைட்டிங்

காண்டூரிங் மற்றும் ஹைலைட்டிங்

சில பேருக்கு காண்டூரை எங்கே அப்ளே செய்வது எங்கே ஹைலைட்டிங் செய்வது இது போன்று தெரியாது. இதற்கு ஓரே பிராண்டில் மூன்று விதமான பவுண்டேஷனை வாங்கி கொள்ளுங்கள். ஒரு பவுண்டேஷன் உங்கள் சரும நிறத்திற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். மற்ற இரண்டு நிறங்களும் உங்கள் சரும நிறத்தை விட குறைவாக அல்லது அடர்த்தியான நிறத்தில் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். முகப் பகுதியில் அடர்த்தியான நிறத்தை கொண்டு லேசாக காண்டூர் செய்து பிறகு லேசான லைட் நிற பவுண்டேஷனையை கொண்டு அந்த இடத்தில் ஹைலைட் செய்து விடுங்கள்.

புருவம்

புருவம்

உங்கள் முகத்தை ஒல்லியாக காட்டுவதில் உங்கள் புருவம் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் புருவம் பார்ப்பதற்கு கெட்டியாக, அடர்த்தியான முடிகளுடன் நடுப்பகுதியில் அம்பு மாதிரி வளைந்து செல்ல வேண்டும். அம்பு போன்ற வளைந்த புருவம் உங்கள் முகழகை உயர்த்தி ஒல்லியாக எடுப்பாக காட்டும். இயற்கையான புருவ நிறத்தை விட கொஞ்சம் அடர்த்தியாக புருவத்திற்கு பென்சில் இட்டு கொள்ளுங்கள்.

கருவளையம்

கருவளையம்

கண்ணைச் சுற்றியுள்ள கருவளையத்தை கண்டிப்பாக கவர் செய்ய வேண்டும். கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை கண்சீலர் கொண்டு கவர் செய்யுங்கள். அப்படியே இமை வரைக்கும் பரப்பி விட வேண்டும். வெள்ளை நிற ஐ ஷேடேவை கொண்டு கண்களின் உள்ளே மற்றும் வெளியே உள்ள ஓரப்பகுதிகளில் அப்ளே செய்யுங்கள். கருவளையம் இல்லாமல் பார்க்கும் போது உங்கள் முகம் மிகவும் நேர்த்தியாக ஒல்லியாக காணப்படும்.

ஸ்ம்மர்

ஸ்ம்மர்

கழுத்தில் உள்ள காலர் எலும்புகள் மற்றும் கன்னெலும்புகளை ஹைலைட் செய்ய வேண்டும். இந்த லேசான ஹைலைட்டிங் மேக்கப் எலும்புகளை துணிப்பாக காட்டி உங்கள் முகத்தை ஒல்லியாக காட்டும்.

கண்கள்

கண்கள்

கண்களில் போடப்படும் மேக்கப் தான் உங்கள் முகழகை நிர்ணயிக்கும். எனவே கண்களுக்கு அதிகம் கவனம் செலுத்துங்கள். ஐ லைனர் மற்றும் மஸ்காரா உங்கள் கண்களை பெரிதாக்க பயன்படுகிறது. அதே நேரத்தில் ஐ ஷேடேவை உங்கள் சரும நிறம் மற்றும் கண்களின் நிறத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். நீல நிறக் கண்களுக்கு கோல்டு அல்லது பிங்க் நிற ஷேடோ நன்றாக இருக்கும். பச்சை நிறகண்களுக்கு காப்பர் அல்லது ப்ளெம் நிற ஷேடோ பொருத்தமாக அமையும். ப்ரவுன் நிறத்திற்கு நீல நிறம், பர்பி ள் நிற காம்பினேஷன் நன்றாக இருக்கும். இந்த மாதிரி உங்கள் கண்களுக்கு ஏற்ற நிறத்தை தேர்ந்தெடுங்கள்.

கூந்தல்

கூந்தல்

உங்கள் கூந்தலுக்கு நீங்கள் கலரிங் செய்ய நினைத்தால் உங்கள் முகத்தை ஒட்டியுள்ள முடிகளுக்கு அடர்ந்த நிறமும், மற்ற பகுதிகளுக்கு லேசான நிறத்தை கொண்டு ஹைலைட் செய்தாலே போதும் உங்கள் முகம் ஒல்லியாக காட்சியளிக்கும்.

ப்ரைட்டனிங்

ப்ரைட்டனிங்

ஸ்ஷீர் ஹைலைட்டிங் பவுடர் கொண்டு உங்கள் கண்களுக்கு கீழே உள்ள பகுதி மற்றும் மூக்குக்கு கீழே உள்ள பகுதிகளை காண்டூர் செய்து விடுங்கள். இது ஒரு நல்ல பளீச்சென்ற லுக்கை கொடுக்கும். இது உங்கள் முகத்தில் உள்ள நெளிவு சுளிவை காட்டி ஒல்லியாக பிரதிபலிக்கும்.

ப்ரோன்ஸர்

ப்ரோன்ஸர்

உங்கள் முகத்தை ஒல்லியாக காட்ட இறுதியாக ப்ரோன்ஸரை சரியாக பயன்படுத்த வேண்டும். லைட்டான ப்ரோன்ஸரை உங்கள் தாடை பகுதியை துணிப்பாக காட்ட அப்ளே செய்யுங்கள். அப்படியே லேசாக திட்டுக்கள் இல்லாமல் பரப்பி விட வேண்டும்.

பிங்க் நிற இதழ்கள்

பிங்க் நிற இதழ்கள்

அடர்ந்த லிப்ஸ்டிக் உங்கள் முகத்தை குண்டாக காட்டும். எனவே லேசான பிங்க் நிற லிப்ஸ்டிக் உங்களுக்கு ஏற்றது. நியூடு கலர்ஸ் போன்றவை முகத்தை ஒல்லியாக காட்ட சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Makeup Techniques To Make Your Face Look Slim

makeup canbe powerful tool for helping you look slim. just look at any celebrity . most do not like they do on their own.
Story first published: Wednesday, July 11, 2018, 16:51 [IST]
Desktop Bottom Promotion