For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘கண்ணுக்கு மை அழகு!’ கண்ணிற்கு மையிடுவதால் ஏற்படுற நன்மைகளை தெரிஞ்சுக்க இத படிங்க!

கண்மை அழகு பொருளாக மட்டும் இல்லாமல், ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பொருளாகவும் விளங்குகிறது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்மை கற்பூரம், காய்கறி எண்ணெய், நெய் போன்றவற்றை கலந்து தயாரிக்கப்பட்டது. ஆ

|

கண் மை - அதாவது இந்த காலத்தில் காஜல் என்று அழைக்கப்படும் அழகுப்பொருள், கண்ணிற்கு அழகு சேர்க்க பெரும்பாலான பெண்களால் பயன்படுத்தப்படுகிறது. உலகத்தில் முதன் முதலாக பெண்களால் பயன்படுத்தப்பட்ட, முதல் அழகுப்பொருள் கண் மை தான்; தங்கள் அழகிய கண்களை மேலும் அழகாக்க பெண்கள் ஆதி காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தி வரும் முக்கிய அழகு சாதனம் காஜல். இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், 5000 ஆண்டுகள் முன்னர் தோன்றிய கண்மை, இன்று வரை அதே முக்கியத்துவத்துடன் இருந்து வருகிறது.

How to make Kajal-kanmai in home in tamil

கண்மை அழகு பொருளாக மட்டும் இல்லாமல், ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பொருளாகவும் விளங்குகிறது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்மை கற்பூரம், காய்கறி எண்ணெய், நெய் போன்றவற்றை கலந்து தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றைய கால காஜலோ பல வேதி மற்றும் இரசாயன பொருட்கள் கலந்து தயாரித்து, சந்தைகளில் விற்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கலந்த காஜல் உங்கள் கண்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த பதிப்பில், இயற்கை - ஆர்கானிக் மற்றும் ஆயுர்வேதிக் காஜல்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் எது சிறந்தது? கண் மையின் பயன்கள் போன்றவை குறித்து படித்தறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கை காஜல் - ஆயுர்வேதிக் காஜல்

இயற்கை காஜல் - ஆயுர்வேதிக் காஜல்

ஆர்கானிக் காஜல் 100 சதவிகிதம் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது; ஆயுர்வேதிக் கண்மையும் இயற்கை பொருட்களை மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்டதே!

ஆயுர்வேதிக் காஜல் காஸ்டார் எண்ணெய், நெய், காப்பர் பாத்திரம், கற்பூரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பாதாம் பருப்புகளும் காஜல் தயாரிப்பில் பயன்படுத்தப்படலாம்.

ஆயுர்வேதிக் காஜல் கண்களை பாதுகாக்க பயன்படுகின்றன; மேலும் ஆர்கானிக் காஜலோ கண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

ஏன் கண்மை பயன்படுத்த வேண்டும்?

ஏன் கண்மை பயன்படுத்த வேண்டும்?

கண்ணிற்கு கண்மை பயன்படுத்துவதால், தூசி மற்றும் துரும்புகள் கண்ணில் படுவதை தடுக்கலாம்; மேலும் கண் மை கண்ணிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. கண்கள் ஒருவித ஒளியுடன் திகழ இந்த கண் மை பெரிதும் துணை புரிகிறது; கண்ணின் தசைகளை பலப்படுத்த உதவுகிறது. கண்ணில் தோன்றும் கண்ணீரை உடனடியாக மறையச் செய்கிறது. கண்மையில் அஸ்டரிங்கென்ட் குணங்கள் இருப்பதால், அது கண்ணில் ஏற்படும் இரத்தக் குழாய்களை மறைத்து, கருவிழி மற்றும் வெள்ளை விழிகளை மட்டும் வெளிப்பட செய்கிறது. கண்மை கண்ணிற்கு தரும் பயன்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Rich in Vitamin E - வைட்டமின் E:

Rich in Vitamin E - வைட்டமின் E:

காஸ்டார் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் கண்மை கண்ணிற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது; இந்த எண்ணெயில் வைட்டமின் இ நிறைந்திருப்பதால், அது கண்ணின் இமைகளை அடர்தியானதாகவும், கருமையானதாகவும் மாற்ற உதவுகிறது. கண்மை கண்ணில் ஏற்படும் அழுத்தங்களை மற்றும் சோர்வை குறைத்து, கண்ணை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

Anti-Bacterial - ஆண்டி பாக்டீரியா:

Anti-Bacterial - ஆண்டி பாக்டீரியா:

கண்மை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் காப்பர் எனும் தாமிரம், ஒரு தலைசிறந்த சுத்தப்படுத்தி மற்றும் இதற்கு அதிக குணப்படுத்தும் தன்மை உண்டு. காப்பர் கண்களை மேக்கப்பில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் தாக்காமல் தடுத்து காக்கிறது. கண்ணின் லென்ஸ்களை, கண் தசைகளை பலப்படுத்தி, ஓய்வாக இருக்க உதவுகிறது. பார்க்கும் திறனை அதிகப்படுத்துவதில், காப்பர் பெரும்பங்கு வகிக்கிறது.

Relaxes Irritated Eyes - ஓய்வு:

Relaxes Irritated Eyes - ஓய்வு:

காப்பர் மற்றும் சில்வர் சேர்த்து தயாரிக்கப்படும் கண்மை கண்ணின் அழுத்தங்களை, தொந்தரவுகளை குறைத்து ஓய்வை அளிக்கிறது. கண்ணில் ஏதேனும் ஒவ்வாமைகள் ஏற்பட்டால், அவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது; கண்கள் வீக்கமடைந்திருந்தால், அதை வற்ற செய்து கண்ணின் நலனை மேம்படுத்த உதவுகிறது.

Cool Eyes - குளிர்ச்சியான கண்கள்:

Cool Eyes - குளிர்ச்சியான கண்கள்:

கண்மை தயாரிப்பில் சேர்க்கப்படும் கற்பூரம் கண்ணை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது; மேலும் இது கண்ணில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க பேருதவி புரிகிறது. கற்பூரம் கண்களில் ஏற்படும் மைனர் குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி, நீண்ட நாட்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்கிறது.

Keeps Dark Circles Away - கருவளையம்:

Keeps Dark Circles Away - கருவளையம்:

கண்மை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் கண்ணைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இது கண்ணீரால் கண்ணில் தாங்கும் உப்பு மூலக்கூறுகள், மேக்கப்பால் கண்ணின் மேல் மற்றும் கீழ் இமைகளை அடையும் சிறு துகள்கள், தூசிகள் போன்றவற்றை நீக்கி, கண்ணை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இது கண்ணில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது.

எனவே, காஜல் எனும் இந்த காலத்து கருமத்தை பயன்படுத்துவதை விடுத்து, நம் பாரம்பரிய கண்மையை பயன்படுத்த முயலுங்கள்! முடிந்த வரை கண் மையை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துங்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to make Kajal-kanmai in home and benefits of kajal-kanmai in tamil

How to make Kajal-kanmai in home and benefits of kajal-kanmai in tamil
Story first published: Wednesday, July 25, 2018, 16:34 [IST]
Desktop Bottom Promotion