அரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகளா? இனிமே கீழே ஊற்றாதீர்கள்!

Posted By: Aashika
Subscribe to Boldsky

நம்முடைய உணவுகளில் மிக முக்கியமானது அரிசி. தினமும் சமைக்கும் போது அதனை கழுவிய நீரை பயன்படுத்தாமல் வீணாக்கிவிடுவார்கள்.

ஆனால் அந்த அரிசி கழுவிய நீரில் ஏராளமான விட்டமின்ஸ், மினரல்ஸ், அமினோ ஆசிட் நிறைந்திருக்கிறது. அது நம் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு பெரிதும் துணை நிற்கும்.

Hereafter Dont waste Rice Water

இனி அரிசி கழுவிய நீரை முகம் கழுவவோ தலைக்குளிக்கவோ ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்க்கான சில காரணங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமம் :

சருமம் :

அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன் பருக்கள்

ஏற்படாமலும் தடுத்திடும். தளர்ந்திருக்கும் சருமத்தை டைட் செய்திடும்.

பேஷியல் :

பேஷியல் :

இதனை தினமும் பேஷியல் க்ளன்சராக பயன்படுத்தலாம். சிறிய துணியிலோ அல்லது காட்டனை அரிசி கழுவிய நீரில்

முக்கியெடுத்து முகத்தை துடைத்திடுங்கள்.சிறிது நேரத்தில் தானாக காய்ந்திடும். கழுவ வேண்டாம். அரிசி கழுவிய நீரில்

உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் விணை புரியும்.

வயதான தோற்றம் :

வயதான தோற்றம் :

வெயிலில் அதிகப்படியாக இருப்பவர்களுக்கு ஆக்னி ஏற்படும் அத்துடன் சருமம் வறண்டு விரைவிலேயே வயதான

தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவலாம்.

ஆரோக்கியமான கூந்தல் :

ஆரோக்கியமான கூந்தல் :

சைனாவில் உள்ள யாவோ என்ற ஊரின் சிறப்பே அந்த ஊரில் உள்ள பெண்கள் அனைவருக்கும் நீளமான முடி

இருக்கும். இச்சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அவர்களிடம் காரணத்தை கேட்ட

போது, அவர்கள் சொன்னது, நாங்கள் தினமும் அரிசி கழுவிய நீரில் தலைக்குளிக்கிறோம் என்பது தான். ஷாம்பு,

சீயக்காய் என்று எதைத்தேய்த்து தலைக்கு குளித்தாலும் கடைசியாக அரிசி கழுவிய நீரை தலைக்கு ஊற்றிக்கொண்டால் கூட போதும்.

குழந்தைகளுக்கு :

குழந்தைகளுக்கு :

அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: body care, hair care, beauty, skin care
English summary

Hereafter Dont waste Rice Water

Beauty tips using rice water
Subscribe Newsletter