For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறிய கண்களை பெரிதாக வெளிப்படுத்த.. கண்களுக்கான மேக் அப் டிப்ஸ்...

By Super
|

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. இது உண்மையாக இருந்தாலும் நமது முகத்தை பராமரிக்க சில ஒப்பனைப் பொருட்கள் தேவைப்படத்தான் செய்கின்றது. எனவே, நமது சருமத்திற்கு ஏற்ற ஒப்பனை பொருட்களை தேர்ந்தெடுத்து அளவாக பயன்படுத்த வேண்டும். இதனால் நமது இயல்பான முக அழகு கெடாமல் பாதுகாக்க முடியும்.

நமது முகத்தில் கண்கள் தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாகமாகும். நீங்கள் மனதில் நினைப்பதை உங்கள் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். நமது உணர்ச்சிகள் நல்லவையாக இருந்தாலும் சரி, கெட்டவையாக இருந்தாலும் சரி, நமது கண்கள் அதனை வெளிப்படுத்தும். எல்லோருக்கும் பொதுவாக பெரிய கண்களை தான் மிகவும் பிடிக்கும். அழகிய மீன் போன்ற பெரிய கண்களை உடைய பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். சிறிது மையும் மஸ்காராவும் போட்டால், மேலும் அழகாக காட்சியளிப்பார்கள்.

Eye Makeup Tips For Small Eyes

ஆனால், சிறிய கண்களை உடைய பெண்கள் நிலை என்ன? சி லசமயங்களில் அவர்களின் சிறிய கண்கள் அவர்களது கன்னங்களை பெரிதாகக் காட்டும். ஆகவே, சிறிய கண்களுக்கு சரியான ஒப்பனை செய்யவில்லையென்றால் இன்னும் சிறிதாகக் காட்சியளிக்கும். சிறிய கண்களை பெரிதாக காட்டுவதற்கான சில கண் ஒப்பனை டிப்ஸ்களை இப்பொழுது பார்க்கலாம்.

மஸ்காரா

மஸ்காராவை பயன்படுத்தி சிறிய கண்களை அழகாக மாற்றலாம். பொதுவாக, சிறிய கண்களின் கண் ஒப்பனைக்கு திக் மஸ்காரவை பயன்படுத்தவேண்டும். இந்த மஸ்காரா இமைமயிர்களை தடித்து காட்டி கண்களுக்கு மேலும் அழகு சேர்க்கும். கண் மஸ்காராவை மேல் மற்றும் கீழ் இமைமயிர்களுக்கும் பயன்படுத்தவேண்டும். எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகின்றோமோ நமது கண்களை அவ்வளவு அழகாக வெளிக்காட்டும். மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன் நமது இமைமயிர்களை கர்லர் கொண்டு வடிவமைக்கவேண்டும்.

ஐ லைனர்

சிறிய கண்களுக்கான ஒப்பனைகளில் ஒன்று இந்த ஐ லைனர். நமது கண்களை திருத்தி சீரான வடிவத்தை கொடுக்கும். மென்வண்ணம் அல்லது வெள்ளை ஐ லைனர்களை பயன்படுத்தினால் கண் மஸ்காராவை மேலும் எடுத்துக்காட்டும். அடர் வண்ண ஐ லைனரையும் பயன்படுத்தலாம். இரண்டையும் முயற்சி செய்து உங்கள் கண்களுக்கு எது பொருத்தமாக இருகின்றதோ அதை பயன்படுத்துங்கள்.

ஷேடோ

ஐ ஷேடோ நமது கண்களை மிகவும் அழகாகக் காட்டும் கண் ஒப்பனைகளில் ஒன்றாகும். மாலை வேளைகளில் அடர் நிறங்களான கிரே, கருப்பு, ஊதா போன்றவற்றையும் மதிய வேளைகளில் ரோஸ், பழுப்பு மற்றும் மரூன் நிறங்களையும் பயன்படுத்தவேண்டும். இளம் பெண்களுக்கு அடர் நிற ஐ ஷேடோக்கள் அழகாக இருக்கும். நாம் அணிந்திருக்கும் உடைக்கும் ஆபரணங்களுக்கும் பொருத்தமான ஷேடோக்களையே பயன்படுத்தவேண்டும்.

ப்ரைமர் மற்றும் ஃபௌண்டேஷன்

இதுவே முதன்மையான கண் ஒப்பனைகளில் ஒன்றாகும். ஃபௌண்டேஷன் அல்லது ஐ ஷேடோ பயன்படுத்துவதற்கு முன்பு ப்ரைமர் பயன்படுத்த வேண்டும். அது நமது ஒப்பனை வெகு நேரம் வரை கலையாமல் இருப்பதற்கு உதவும். ஃபௌண்டேஷன் மற்றும் கன்சீலர்கள் நமது கண்ணின் கருவளையங்கள் மற்றும் பல குறைபாடுகளையும் குறைக்கச் செய்யும்.

ஷிம்மர்

ஷிம்மர் பவுடர் சிறிய கண்ககளை பளிச்சிடச் செய்யும் ஒப்பனைகளில் ஒன்றாகும். இவை சிறிய கண்களால் கன்னங்கள் பெரிதாகக்காட்டுவதைத் தடுக்கும். இவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும் ஏன்னெனில் அதிகமாக பயன்படுத்தினால் உங்கள் முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். கண்களின் கீழ்பகுதியிலும் கண்மடல் பகுதிகளில் மட்டுமே ஷிம்மர் பௌடரை பயன்படுத்தவேண்டும்.

இவை அனைத்தும் சிறிய கண்களுக்கான ஒப்பனை டிப்ஸ்களாகும். இரவு படுக்கச் செல்லும் முன்பு கண்டிப்பாக கண் ஒப்பனையை கலைக்க வேண்டும். நல்ல தரமான ஒப்பனை பொருட்களையே பயன்படுத்தவேண்டும். கண்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆதலால் அதனை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

English summary

Eye Makeup Tips For Small Eyes

If appropriate make up is not applied on smaller eyes, they tend to look much more smaller. There are many eye make up tips available for smaller eyes that make them look bigger and better.
Story first published: Friday, November 22, 2013, 16:14 [IST]
Desktop Bottom Promotion