For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பெண்களே! இதோ உங்களுக்கான கண்ணழகு குறிப்புகள்!

By Boopathi Lakshmanan
|

ஒவ்வொரு பெண்ணும் சிறப்பு வாய்ந்தவள் மற்றும் அவள் அழகாக இருக்க வேண்டியவள்! இயற்கையாகவே போற்றத்தக்கவளாக இருக்கும் பெண்ணானவள், மேலும் சற்று அழகாகவும், போற்றத்தக்கவளாகவும் இருக்க சிறிதளவு மேக்கப் இருப்பது நல்லது. உள்ளத்தின் உணர்வை உள்ளபடி உரைப்பதில் கண்களுக்கு நிகர் வேறெதுவும் இல்லை, இந்த கண்ணை அழகுபடுத்தி, இந்தியப் பெண்களை 'கண்'கவர் பதுமைகளாக வலம் வரச் செய்ய இந்த குறிப்புகளை மேற்கொண்டு படியுங்கள்.

மங்கலான நிறம் கொண்ட இந்தியப் பெண்களை அழகுபடுத்துவது சற்றே ஆர்வமான விஷயம் என்று புகழ் பெற்ற மேக்கப் கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேக்கப் போடப்பட்ட இந்த மங்கலான தோல் நிறமுடைய பெண்கள், அழகாகவும், பளிச்சென்றும் இருப்பார்கள். கவனமுடன் மேக்கப் போட்டால் உங்கள் கண்களும் பளிச் என கவி பாடும். நீங்கள் எப்படி செய்கிறீர்கள் மற்றும் எதை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுடைய மேக்கப்-ன் வெற்றி-தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நீங்கள் உண்மையிலேயே நன்றாக ஒப்பனை செய்ய விரும்பினால், உங்களுக்கு தரமான குறிப்புகள் தேவை. பளிச்சிடும் கண்கள் எப்பொழுதும் முக்கியமான அம்சமாகவும் மற்றும் சுடர் விட்டு ஒளிர்வதாகவும் இருக்கும்.

Eye Makeup Tips For Indian Women

நீங்கள் ஒப்பனை செய்ய தேர்ந்தெடுக்கும் பொருள், உங்களுடைய வெளி ஆடையலங்காரங்களுக்கு ஏற்றவாறு இருப்பதை கவனமுடன் பின்பற்றவும். நீங்கள் பாரம்பரியமாக அல்லது நவீனமான உடை அணிபவர் என எந்த வகையினராக இருந்தாலும், உங்களுடைய கண்களுக்கு செய்யும் ஒப்பனை உங்களை தனித்து காட்டும். இந்தியப் பெண்கள் இவ்வகையில் கண்களுக்கு செய்யும் ஒப்பனை குறித்த குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்.

'பிரைமர்' - கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டிய விஷயம்

குண்களுக்கு ஒப்பனை செய்யும் பிரைமர்களை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரைமர் உங்களுடைய தோல் மற்றும் நிறத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். மாநிறமுடைய இந்தியப் பெண்கள் அவர்களுக்கு ஏற்ற வகையிலான பிரைமர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவதாக, இவற்றை மெல்லிய கோடுகளாகவே தடவி பயன்படுத்த வேண்டும். உங்களுடைய ஒப்பனை நெடுநேரம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால், பிரைமர்களை பயன்படுத்துங்கள். இந்தியப் பெண்கள் கண்களை அழகுபடுத்த நினைக்கும் போது, கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்றாக இது உள்ளது.

அழகின் அர்த்தம் ஐ-ஷேடோ

உங்களுடைய ஒப்பனைக்கு அர்த்தம் கொடுக்கும் விஷயம் ஐ-ஷேடோ ஆகும். கண்களை அழகுபடுத்தும் போது இதனை நன்றாக கவனிக்க வேண்டும். இந்தியப் பெண்கள் கண்களை அழகுபடுத்தும் போது, அவர்களின் உடல் நிறத்திற்கேற்ற ஐ-ஷேடோவை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில் வெளிர்-நிற ஐ-ஷேடோவை பயன்படுத்துங்கள். இது நவநாகரீகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களை முடிவு செய்வதில் கவனமாக இருக்கவும். ஏனெனில், தோலின் நிறத்திற்கு ஏற்ற ஒப்பனை இல்லாததால் தான், இந்தியப் பெண்களின் கண்ணழகின் கவர்ச்சி குறைந்துள்ளது.

மஸ்காரா

நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக கண்ணிமையின் முடிகளும் உள்ளது என்பது புகழ் பெற்ற ஒப்பனைக் கலைகஞர்களின் முதன்மையான கருத்தாகும். நுட்பமாக கண்களை அழகுபடுத்த விரும்பும் இந்தியப் பெண்கள் மஸ்காராவை துணைக்கு வைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே பெரிதாக இருக்கும் இந்தியப் பெண்களின் கண்களை சுடர் விட்டு ஒளிரச் செய்ய மஸ்காரா உதவுகிறது. கருமை நிறத்திலிருந்து புகை போன்ற நிறங்கள் என இந்தியப் பெண்களின் கண்கள் இருந்தாலும், இன்றைய பெண்கள் மிகவம் விரும்புவது புகை போன்ற நிற கண்களையே! இந்த வகை கண்ணழகை மஸ்காரா மேக்கப் தேடிக் கொணர்ந்து விடும்.

ஐ-லைனர்கள்

பெண்கள் ஒப்பனை செய்து கொள்ளும் போது பயன்படுத்தும் முதன்மையான சாதனங்களாக ஐ-லைனர்கள் மற்றும் காஜல்கள் உள்ளன. கண்கள் அகலமாக தோற்றமளிக்கச் செய்ய விரும்பினால், ஐ-லைனர்களை பயன்படுத்துங்கள். இதைக் கொண்டு கீழேயும் கோடிட மறந்து விட வேண்டாம். இது அழகை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கண்களை அழகுபடுத்த எண்ணற்ற குறிப்புகள் இருந்தாலும், நீங்கள் எவ்வளவு கவனமாக மற்றும் எதனை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதே அழகின் வெற்றியை உறுதிப்படுத்தும். புகை போன்ற கண்கள் அல்லது பளீர் என சுடர் விடும் கண்கள் என இந்தியப் பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஒப்பனைகள் மனம் மயங்கச் செய்யும். இந்த கண்ணழகு குறிப்புகள் எளிமையாக இருந்தாலும், உறுதியாக அழகின் அலைகளை பரவச் செய்யும்.

English summary

Eye Makeup Tips For Indian Women

When you choose a makeup, be careful that you choose something that suits your outfits. You may be a person who go with traditional or modern outfit, but it is your eye makeup , that will make you stand out. Here are a few eye makeup tips for Indian women.
Story first published: Monday, December 23, 2013, 18:52 [IST]
Desktop Bottom Promotion