For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களிடம் கட்டாயமாக இருக்க வேண்டிய 10 அழகு சாதனப் பொருட்கள்!!!

By Super
|

தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? ஆம்! அழகு என்றால் பெண். பெண் என்றால் அழகு என்ற பழமொழி இப்பொழுது இல்லை. இன்றைய ஆண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். சினிமாக்களிலும். டிவியிலும் வரும் ஆண்கள் அனைவரும் அழகுப் பொருட்கள் உபயோகிக்கிறார்கள். அதனை தொடர்ந்து. இப்பொழுது பெண்களைப் போலவே அழகு நிலையங்கள் ஆண்களுக்கும் உண்டு. குறிப்பாக திருமண சமயங்களில் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது, ஆண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள, அத்தகைய அழகு நிலையங்களுக்கு செல்லுகிறார்கள்

அதனால், நாம் நம்மை அழகுப்படுத்திக் கொள்வதற்கு, பெண்கள் ஆண்கள் என்ற பாகுப்பாடு இல்லை. நிறைய ஆண்கள் தங்களின் அழகை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வம் இருந்தும் எப்படி என்பது தெரியாமல் இருகிறார்கள். ஆகவே அத்தகைய ஆண்களின் பிரச்சனைக்கான தீர்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர் எதற்காக பயன்படுத்துகிறார்கள், ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று பெண்களிடம் கேட்டால் ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதுவார்கள். ஆனால் அதற்கான ஒரே விடை, மாய்ஸ்சுரைசர் சருமத்திற்கு நீர்ச்சத்து மற்றும் இயல்பான ஒளிர்வை பராமரிக்கும் என்பது தான். ஏன் என்று உங்களுக்கு கேள்வி எழும்? இப்படி பாருங்கள் - உங்கள் சருமம் ஒரு மெல்லிய பேப்பர் போல. நாள்பட பேப்பர் வறண்டு, காய்ந்து போய்விடும். ஆகவே சருமத்திற்கு தொடர்ந்து நீர்ச்சத்து கிடைக்கும் பொருட்டு அவை வறண்டு, தோய்ந்து போகாமல் இருக்கும். எனவே சருமத்திற்கு ஏற்ப நீர்ம அடிப்படையிலான அல்லது எண்ணெய் அடிப்படையிலான மாய்ஸ்சுரைசர் உபயோகித்து குழந்தையின் மேனியை போல் மென்மையாக மாற்றிடுங்கள்.

ஸ்கரப்

ஸ்கரப்

தினசரி சரும பராமரிப்பில் நீர்ச்சத்து தேவைப்படுவது போலவே, ஸ்கரப்பிங் செய்வதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது சருமத் துவாரங்கள் டீ வடிக்கட்டி போன்றவை. சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு, பரு மற்றும் சரும பிரச்சனைகள் வந்துவிடும். மேலும் ஸ்கரப் என்பது மென்மையான தேய்ப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, பாக்டீரியாக்களைக் கொள்ளும் மருந்துகளை உடைய, தூய்மையான கலவை ஆகும். இதனை சருமத்தின் மேல் மென்மையாக தேய்ப்பதன் மூலமாக அழுக்கு, எண்ணெய் பசை மற்றும் மாசுப்படுத்திகள் நீங்கி எரிச்சலைக் குறைக்கும். எனவே சருமத்திற்கு ஏற்ற, மிதமான கலவையை கொண்டுள்ள ஒரு நல்ல பிராண்ட்டை தேர்வு செய்யுங்கள். வாரம் இருமுறை ஸ்க்ரப் செய்து, சருமத்தை சுத்தமாக வைத்திருங்கள்.

ஆப்டர் ஷேவ்

ஆப்டர் ஷேவ்

ஆப்டர் ஷேவ் உபயோகிப்பதால் ஆணுக்குண்டான வலிமை குறைந்துவிடுமோ என்ற எண்ணம் பல ஆண்களிடையே இருக்கிறது. அது கண்டிப்பாக இல்லை. ஆப்டர் ஷேவ் சரும எரிச்சலை தணித்து, துவாரங்களின் அளவை குறைத்து, பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் அல்கஹாலை அடிப்படையாக கொண்டுள்ள ஆப்டர் ஷேவ் லோஷனை பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், அல்கஹால் முகத்தை வறண்டு போகச் செய்யும் தன்மையுடையது.

லிப் பாம்

லிப் பாம்

லிப் பாமின் எல்லாப் பயன்களையும் பெண்கள் அடையும் போது, நாம் அதன் அடிப்படை பயன்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். வெடித்த உதடுகள் கவர்ச்சிகரமாக இருப்பதில்லை. அதனை பார்க்கவே நாட்டம் ஏற்படாத போது, அந்த உதடுகளிடம் பெண்கள் முத்தம் எல்லாம் எப்படி எதிர்பார்ப்பார்கள்? இந்த உலகத்தில் உள்ள முத்தம் தரக்கூடிய அனைத்து உதடுகளுமே வருங்கால பயன்பாட்டிற்கு லிப்-பாமை கண்டிப்பாக தன் அழகு சாதன பெட்டியில் வைத்திருக்கும். லிப் பாமில் உள்ள எண்ணெய், அடிப்படையில் மருத்துவ தன்மைகளை உடைய மூலிகை கலவை. அதனால் அது உதடுகளை வறட்சியின்றி பாதுகாக்கிறது. ஆண்கள் நிறமற்ற லிப் பாமையே தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும். லிப் பாம் தேர்வு செய்வதில் குழப்பம் இருந்தால், சிறிது வேஸ்லின் போதும். அது உதடுகளை மேலும் கவர்ச்சியாக்கும்.

சன் ஸ்க்ரீன் லோஷன்

சன் ஸ்க்ரீன் லோஷன்

சன் ஸ்க்ரீன் லோஷன் முக்கியத்துவத்தை பெரிதாக வலியுறுத்த முடியாது. இந்தியர்களின் சருமங்கள் வேனிற்கட்டிகளுக்கு பெரிதும் உட்பட்டது. இதன் ஒரே தீர்வு நம்மை பாதுகாத்துக் கொள்ள, வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும். ஆனால், நம்முடைய தொழில் முயற்சிகள், இதனை அனுமதிக்க முடியாததால், நாம் சன் ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்தி, வெயிலில் இருந்து பாதுக்காத்துக் கொள்ளலாம். குறிப்பாக சன் ஸ்க்ரன் லோஷனை சூரிய ஒளி படும் இடங்களில் தடவி வந்தால், வேனிற்கட்டிகள் போயே போய்விடும்.

ஷாம்பு

ஷாம்பு

வறண்ட முடி எப்பொழுதுமே அழகில்லை. ஆனால் இன்றைய ஆண்கள் ஷாம்புவின் மோகத்தால், அவர்களுடைய நுண்குமிழ் நலனை புறக்கணிக்கிறார்கள். மென்மையான ஷாம்பு உபயோகித்தால், அது அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை சுத்தம் செய்து, மயிர்கால்களுக்கு புத்துயிர் அளித்து, முடி வளர்வதற்கு உதவும். இருப்பினும் அதனை அதிகமாக உபயோகித்தால் நுண்குமிழ்கள் அதன் எண்ணெய் தன்மையை இழந்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஆகவே மென்மையான மூலிகை ஷாம்புவை தேர்வு செய்யுங்கள் மற்றும் வாரம் இருமுறைக்கு மேல் அதனை உபயோகிக்காதீர்கள்.

கண்டிஷனர்

கண்டிஷனர்

கண்டிஷனர் என்பது பெண்களின் சமாச்சாரம் என்று எண்ணி, ஆண்களுக்கு கண்டிஷனர் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் கூட, மென்மையான தலைமுடி அவ்வளவு சுலபமாக வந்துவிடாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஷாம்புவால் ஏற்பட்டுள்ள கொடிய இரசாயன தாக்கத்தை சரிசெய்து, எண்ணெய் பசை கலவையால் நுண்குமிழ்களுக்கு நீர்ச்சத்தை சேர்க்கிறது கண்டிஷனர். ஆகவே தலைமுடிக்கு ஏற்ப கண்டிஷனரை தேர்வு செய்தால், தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

எண்ணெய்

எண்ணெய்

தலைக்கு எண்ணெய் என்றாலே அது தன்னை பாதிக்கும் என்று நினைத்து ஓடும் ஆண்களே!! கொஞ்சம் நில்லுங்கள்!! மாய்ஸ்சுரைசர் சருமத்திற்கு எப்படியோ, அப்படித் தான் எண்ணெய் தலைமுடிக்கு. சருமத்திற்கு எப்படி ஊட்டச்சத்து அவசியமோ, அப்படித் தான் தலைமுடிக்கும் ஊட்டச்சத்து தேவை. அவை இல்லை என்றால், முடி உதிர்வு ஏற்படும். ஆனால் ஆண்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து தராத எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். ஆனால் முடிக்கு ஆலிவ், பாதாம் மற்றும் நல்லெண்ணெய்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உபயோகித்தால் சிறந்த ஆரோக்கியமான முடியைப் பெறலாம்.

கன்சீலர்

கன்சீலர்

ஆமாம் இது பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லா ஆண்களுமே பெண்களின் மென்மையான சருமத்தைப் பார்த்து வியந்து, நமக்கும் இந்த மாதிரி இருக்காதா என்று நினைப்பார்கள். அதன் ரகசியம் அழகுப் பொருட்கள் தான். கரும்புள்ளிகள், பருக்கள், வெடிப்பு மற்றும் கருவளையங்கள் போன்றவற்றை மறைக்க கன்சீலர்கள் உதவுகிறது. எனவே சரும நிறத்திற்கு ஏற்ப கன்சீலரை தேர்வு செய்து ஜொலியுங்கள்.

ஹைலைட்டர்

ஹைலைட்டர்

நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரிகிறது. இது கடைகளில் கிடைக்கும் நோட்புக் ஹைலைட்டர் அல்ல. ஹைலைடர் என்பது ஒருவரது முகத்தில் உள்ள ஹை பாயிண்ட் பகுதிகளை எடுத்துக்காட்டும் அழகுப்பொருள். குழப்பமாக உள்ளதா? ஹை பாயிண்ட் எனப்படுவது ஒருவரது முகத்தில் உள்ள தாடை எலும்பு, புருவ எலும்பு, நோஸ் பிரிட்ஜ் மற்றும் மேலுதட்டிற்கு மேல் உள்ள பகுதி. இந்த இடங்களில் சிறிது தடவி வந்தால், நீங்க தான் சூப்பர் மேன்.

மேற்கூறிய பொருட்களை எல்லாம் சரிவர உபயோகித்தால், நீங்கள் தான் எப்பவும் ஹீரோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Must Have Cosmetics for Men

When it comes to personal hygiene, grooming is not confined to women anymore. Many men are growing increasingly conscious of their vanity, without knowing what to use in order to keep them looking sharp. Here is the answer to all their problems.
Desktop Bottom Promotion