Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ஃபேஸ் பேக்குகளை யூஸ் பண்ணிதான்... கீர்த்தி சுரேஷ் ஜொலிக்கும் பளபளப்பான சருமத்தை பெற்றிருக்காராம்!
2000ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இன்று தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார்கள். தன் அசாதாரண நடிப்பாலும், அழகாலும் பெரும்பலான இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
2013ஆம் ஆண்டு கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தொடங்கிய அவரது பயணம் இன்று வரை சிறப்பாக செல்கிறது. ஜொலிக்கும் சருமத்தை கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு நாடு ழுமுவதும் ஏராளாமான ரசிகர்கள் இருக்கிறார்கள். வசீகரிக்கும் உடலமைப்பிறகும் அழகிற்கும் அவரது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை காரணம் என்கிறார், கீர்த்தி.

இது உடற்தகுதி மட்டுமல்லாது, பயனுள்ள தோல் பராமரிப்பு முறையையும் உள்ளடக்கியது. அடிக்கடி அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது தோலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இருப்பினும், கீர்த்தி சுரேஷ் தனது தோல் பராமரிப்பு முறையைப் பின்பற்றும்போது அதை இயற்கையாகவே வைத்திருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷ், சிறுவயது முதலே இயற்கையான தோல் பராமரிப்பு சடங்குகளை கடைப்பிடித்து வந்தார். மேலும் பிஸியான கால அட்டவணையை கொண்டிருக்கும் போதிலும், அவற்றைப் பின்பற்றுவதற்கு தனியாக நேரத்தை ஒதுக்குகிறார். இக்கட்டுரையில் வசீகரிக்கும் அழகை கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் அழகு ரகசியங்கள் பற்றி காணலாம்.
நீரேற்றம் முக்கியமானது
திரைத்துறையைச் சேர்ந்த எந்தவொரு அழகான நடிகையிடம், அவர்களின் ஆரோக்கியமான சருமத்தின் பின்னணியில் உள்ள ரகசியத்தைப் பற்றிக் கேட்டால், "நான் போதுமான தண்ணீர் குடிக்கிறேன்" என்றுதான் கூறுவார்கள். தண்ணீர் குடிப்பது சருமத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என நாம் அனைவரும் அறிவோம். கீர்த்தி சுரேஷும் தன்னை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தண்ணீர் அதிகம் குடிக்கிறார்.
தண்ணீர் குடிப்பது சருமத்தை பளபளப்பாக பிரகாசிக்க உதவுகிறது. நீரிழப்புடன் இருப்பது நம் உடலிலும் சருமத்திலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, சருமத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்து நீரேற்றம் செய்வது ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கான ஒரு அற்புதமான வழி. கீர்த்தியும் இந்த வழியைதான் பின்பற்றுகிறார்.
உடலின் தோலைப் புறக்கணிக்காதீர்கள்
நாம் அனைவரும் நமது சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்தினாலும், பெரும்பாலான நேரங்களில், சருமப் பராமரிப்பு என்பது முகம் மற்றும் கழுத்து பகுதியில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். தோல் என்பது மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, அதை நாம் மறந்துவிடுகிறோம்.
முகத்தின் தோலைப் பராமரிப்பது போல, உடலின் சருமத்தைப் பராமரிப்பதும் மிகவும் அவசியம். கீர்த்தி ரோஜா உட்செலுத்தப்பட்ட ஈரப்பதமூட்டும் எண்ணெய்களை சருமம் மற்றும் உடலில் பயன்படுத்துகிறார். இது சருமத்தை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்ல, சருமத்தை ஆற்றவும் மிருதுவாகவும் உதவுகிறது.
இயற்கையான ஃபேஸ் பேக்குகள்
கேரளாவைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷ், இயற்கை மற்றும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதை மட்டுமே விரும்புகிறார். இதன் மூலம் ஜொலிக்கும் பளபளப்பான சருமத்தை பெறுகிறார். அவர் அடிக்கடி ஆரஞ்சு தோல் ஃபேஸ் பேக்கை பயன்படுத்துகிறார். இது சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் பண்புகளைக் கொடுக்கிறது. அழகான நடிகையான கீர்த்தி சுரேஷ், தனது சருமத்தை மெருகூட்ட, மஞ்சள் போன்ற பொருட்களால் உட்செலுத்தப்பட்ட ஃபேஸ் மாஸ்க்குகளையும் பயன்படுத்துகிறார்.
உரித்தல் கரிம பொருட்கள்
உரித்தல் ஒரு நல்ல தோல் பராமரிப்பு முறையின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த செயல்முறை இறந்த சருமத்தை அகற்ற உதவுகிறது, மேலும் கடுமையான இரசாயன உரித்தல் தோலுரிப்புகளுக்குப் பதிலாக, கீர்த்தி ஸ்க்ரப்களை விரும்புகிறார். ரோஸ்-பாதாம் ஸ்க்ரப்கள் முதல் ஓட்மீல் ஸ்க்ரப்கள் வரை பயன்படுத்துவதால், இறந்த சரும செல்களை அகற்றி, எப்போதும் ஜொலிக்கும் சருமத்தை பெறுகிறார்.
முக எண்ணெய்கள் மற்றும் உடல் எண்ணெய்கள்
முக எண்ணெய்கள் அல்லது உடல் எண்ணெய்களின் செயல்திறன் குறித்து பெரும்பாலும் கலவையான கருத்துக்கள் உள்ளன. கீர்த்தி சுரேஷ், குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்துகொள்கிறார்.
ஜோஜோபா எண்ணெய், தேங்காய் எண்ணெய், தேயிலை மர எண்ணெய் மற்றும் ஆர்கான் எண்ணெய் போன்ற சில இயற்கை எண்ணெய்களை அவர் தனது தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்கிறார். இவை எல்லாம் கீர்த்தியின் அழகான பொலிவான சருமத்திற்கான ரகசியங்கள். இந்த அழகு குறிப்புகளை நீங்களும் பின்பற்றி பிரகாசிக்கும் சருமத்தை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications

