For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கலருக்கு எந்த கலருல லென்ஸ் வச்ச கவர்ச்சியா இருப்பீங்கனு தெரியுமா?

காண்டாக்ட் லென்ஸ் இப்போது அனைவராலும் விரும்பி அணிந்து வரும் ஒரு டிரெண்ட் ஆக மாறி விட்டது. இதை சிலர் கண் கண்ணாடிகளுக்குப் பதிலாக அணிகிறார்கள் மற்றும் சிலர் டிரெண்ட்டிற்காக அணிகிறார்கள்.

|

காண்டாக்ட் லென்ஸ் இப்போது அனைவராலும் விரும்பி அணிந்து வரும் ஒரு டிரெண்ட் ஆக மாறி விட்டது. இதை சிலர் கண் கண்ணாடிகளுக்குப் பதிலாக அணிகிறார்கள் மற்றும் சிலர் டிரெண்ட்டிற்காக அணிகிறார்கள். இந்த காண்டாக்ட் லென்ஸ்கள் பல வண்ணங்களில் கிடைப்பதால் அதனை உங்கள் கண்களில் அணிந்த உடன் உங்களின் தோற்றத்தைச் சற்று வித்தியாசமாக மாற்றிக் காட்டுகிறது.

Tips To Choose The Right Coloured Contacts For Your Skin Tone

எதுவாக இருந்தாலும் உங்களின் முடியின் நிறத்தைப் பொருத்தும் , தோற்றத்திற்கும் மற்றும் சருமத்திற்கும் ஏற்ற சரியான நிறத்திலான காண்டாக்ட் லென்ஸ்ஷினை தேர்வு செய்வது அவசியம். எப்படி நீங்கள் கண் கண்ணாடி வாங்கச் செல்லும் போது உங்கள் முகத்திற்கு ஏற்ற ஒரு ஃபிரேமினை தேர்வு செய்கிறீர்களோ அதே போலத் தான் காண்டாக்ட் லென்சுகளையும் உங்கள் முகத்திற்கு ஏற்ற ஒன்றாகத் தேர்வு செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமம்

சருமம்

முதலில் உங்களது சருமம் என்ன நிறத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். வெள்ளை நிற சருமம், மா நிற சருமம் மற்றும் கருமை நிற சருமம் கொண்டவர்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்றவாறு லென்சுகளின் வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே உங்கள் சருமத்திற்கு எது சரியாகப் பொருந்துமோ அவற்றைத் தேர்வு செய்து பயன்படுத்துவதே சிறந்தது.

வெள்ளை நிற சருமம்

வெள்ளை நிற சருமம்

வெள்ளை நிற சருமம் கொண்டவர்கள் எந்த வண்ணங்களை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அதிலும் குறிப்பாக க்ரே, ப்ளூ மற்றும் பழுப்பு நிற லென்ஸ்களை தேர்வு செய்யும் போது உங்களுக்கு ஸ்டைலான மற்றும் அழகான ஈர்க்கும் கண்களைக் கொடுக்கும். மற்றவர்களிலிருந்து நீங்கள் தனியாகத் தெரிய விரும்பினால் டர்க்கைஸ், அக்வா மற்றும் ஊதா நிறங்களை செலக்ட் செய்யுங்கள். மேலும் உங்கள் கண்களுக்கு மேக்கப் செய்யும் போது இந்த நிற லென்சுகள் உங்களை இன்னும் கவர்ச்சியாக காட்சியளிக்க வைக்கும்.

மா நிற சருமம்

மா நிற சருமம்

மா நிற சருமம் கொண்டவர்கள் பிரகாசமான நிறங்களைத் தேர்வு செய்யலாம். அதாவது ஹனி, க்ரே மற்றும் டார்க் ப்ளூ போன்ற லென்சுகள் உங்கள் கண்களை இயற்கையான வண்ணங்களைப் போலப் பிரகாசிக்க வைக்கும். நீங்கள் இயற்கையாகவே வண்ண நிற கண்களை கொண்டிருந்தால் இந்த லென்சுகளை உபயோகிக்கும் போது உங்கள் கண்களின் வண்ணங்கள் லேசான ஒன்றாக அல்லது டார்க்கான வண்ணத்தில் மாறும்.

கருமை நிற சருமம்

கருமை நிற சருமம்

உங்கள் சருமம் சற்று கருமை நிறம் அல்லது ஆழமான கருமை நிறம் கொண்டிருந்தால் நீங்கள் தேர்வு செய்ய நிற வண்ணங்கள் உள்ளன. ஹேசல், பிரவுன் அல்லது டூ-டன் வயலட் போன்ற சிறந்த வண்ணங்கள் இயற்கையாகவே கவர்ச்சியான மற்றும் ஈர்க்கும் தோற்றத்தினை உங்களுக்குத் தரும். அல்லது எல்லோர்களின் கவனத்தையும் உங்கள் பக்கம் திருப்ப விரும்பினால் க்ரே, லைட் க்ரீன், அல்லது பழுப்பு நிறங்களைத் தேர்வு செய்யுங்கள். ஆனால் பிரகாசமான நிறங்களாகிய அக்வா மற்றும் இளஞ்சிவப்பு போன்ற நிறங்கள் உங்களின் சருமத்திற்கு ஈடு செய்யாது, எனவே அவற்றைத் தேர்வு செய்யாமல் இருப்பதே சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Choose The Right Coloured Contacts For Your Skin Tone

Contact lens wearers will know that coloured contacts are an easy and fun way to change your appearance completely. However, choosing the correct colour is important or you may end up looking like a vampire. Other than your skin tone you also have to consider the colour of your hair while selecting coloured contacts. Just like all glass frames and colours don’t suit everyone the same goes for colour contact lenses. Let us help you out in selecting the best shades that will work for you.
Story first published: Thursday, September 26, 2019, 16:02 [IST]
Desktop Bottom Promotion