Just In
- 2 hrs ago
தவா மஸ்ரூம்
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- 15 hrs ago
வீட்டிலேயே ஈஸியாக செய்யும் இந்த ஹேர் மாஸ்க்குகள் உங்க முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் மாற்றுமாம்!
- 15 hrs ago
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Don't Miss
- Movies
பாக்கியலட்சுமி தொடர்ல அடுத்த மூணு வாரம் இப்படித்தான் இருக்கப்போகுது.. நவரசங்களை பார்க்க தயாராகுங்க!
- News
கிளாஸ்ரூமிலேயே.. டீச்சருடன் அரை நிர்வாண கோலத்தில்.. நெருக்கமா தொட்டு தொட்டு.. 2 ஆசிரியருடன் ஒரே பெண்
- Sports
மரத்தடியில் மருத்துவரை பார்க்கும் தோனி.. சிகிச்சைக்கு வெறும் ரூ.40 மட்டுமே.. அப்படி என்ன ஸ்பெஷல்
- Technology
7GB RAM, 50MP கேமரா.. இந்த கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!
- Finance
பிளாஸ்டிக் தடை எதிரொலி... அமேசான் - டாடா மோட்டார்ஸ் வேற லெவல் ஒப்பந்தம்!
- Automobiles
விநோத தோற்றத்தில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அட! டூத்பேஸ்ட்ட சருமத்தில பயன்படுத்தினா இது போய்டுமாம். என்னனு பாருங்க.
நம் வீட்டில் உபயோகிக்கும் அன்றாட பொருள்களில் ஒன்று தான் டூத்பேஸ்ட். நம் டூத்பேஸ்ட்டை பல் துலக்கவும் வாய் வாசனையுடன் இருப்பதற்காகத் தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதில் இருக்கும் உட்பொருட்களுக்குக் கருமை நிறப் புள்ளிகளை அதாவது பிளாக்ஹெட்ஸ்களை நீக்கும் பண்பு உள்ளது. இது உங்கள் முகங்கள் மற்றும் மூக்கின் மேல் உள்ள கருமை நிறப் புள்ளிகளை நீக்க உதவுகிறது.
பிளாக்ஹெட்ஸ் என்பது அழுக்கு மற்றும் தூசிகள் நிறைந்த ஒன்றாகும். சரும செல்களில் இருந்து வெளிவரும் கெரட்டின் என்னும் அடைப்பு காரணமாகத் தான் பிளாக்ஹெட்ஸ் ஏற்படுகிறது. இது ஆக்ஸிஜனேற்றப்பட்டு காற்று படும்போது கருப்பு நிறமாக மாறுகிறது. இவை பாக்டீரியா மற்றும் எண்ணெய் சேர்ந்த கலவையாகும். இது சருமத்தில் உள்ள துளைகளை அடைக்கிறது.

டூத் பேஸ்ட்கள்
டூத் பேஸ்ட்கள் பிளாக்ஹெட்ஸ்க்கு சிறந்த சிகிச்சை அழிக்க உதவுகிறது. டூத் பேஸ்ட்களில் பல்வேறு இரசாயனங்கள் மற்றும் இயற்கை மூலப்பொருட்கள் உள்ளன. இவை, பிளாக்ஹெட்ஸை சரி செய்து அவற்றை நீக்குகிறது. டூத் பேஸ்ட்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு, பேக்கிங் சோடா, ட்ரைக்ளோசன், மெந்தோல், ஆல்கஹால், புதினா, உப்பு மற்றும் கிராம்பு போன்றவை உள்ளன. ட்ரைக்ளோசன், இது பல சரும பராமரிப்பு தயாரிப்புகளில் காணப்படும் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மூலப்பொருள் ஆகும்.
இந்த ட்ரைக்ளோசன் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்றி சருமத்தை சுத்தமாக வைக்க உதவுகிறது. சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்றுவது மட்டுமல்லாமல், சரும துளைகளில் இருக்கும் தேவையற்ற அழுக்கு மற்றும் தூசிகளை நீக்குகிறது. சருமத்திலிருந்து பிளாக்ஹெட்ஸை நீக்க நீங்கள் மூலிகைகள் அல்லது வெள்ளை நிற டூத் பேஸ்ட்களை பயன்படுத்தலாம். இவை கண்டிப்பாக உங்கள் மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்ற உதவும்.
MOST READ:வெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.

ஜெல் டூத்பேஸ்ட்
டூத்பேஸ்ட் என்றவுடன் நீங்கள் ஏதாவது ஒரு டூத்பேஸ்ட்டை பயன்படுத்தக் கூடாது. கண்டிப்பான முறையில் ஜெல் டூத்பேஸ்ட் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது உங்கள் பிளாக்ஹெட்ஸ்யை அகற்றாது. மேலும் இந்த ஜெல் டூத்பேஸ்ட் உங்கள் சருமத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கி சிவப்பு நிறத்தில் மாற்றும். அப்படித் தெரியாமல் உபயோகித்து விட்டால் உடனே தண்ணீரில் கழுவி விடுங்கள்.
டூத்பேஸ்ட்டை உங்கள் சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு சிறிதளவு எடுத்து உங்கள் கைகளில் தேய்த்து சோதனை செய்து பாருங்கள். உங்களுக்கு ஏதேனும் சரும பிரச்சனைகள் ஏற்படவில்லையெனில் அதனை முகத்தில் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் இடத்தில் தடவலாம். மேலும் சில டூத்பேஸ்ட்கள் சருமத்தை வறண்டு போகச் செய்யும். எனவே டூத்பேஸ்ட்டை பயன்படுத்திய பின்பு மாய்ஸ்சரைசர் உபயோகிப்பது நல்லது.

சரியான டூத்பேஸ்ட்
நீங்கள் தேர்வு செய்யும் டூத்பேஸ்ட் வெள்ளை நிறம் மற்றும் மூலிகை கலந்த டூத் பேஸ்ட்டாக இருக்க வேண்டும். ஏனெனில் வெள்ளை நிற டூத்பேஸ்ட்களில் மட்டும் தான் பிளாக்ஹெட்ஸை அகற்றத் தேவையான உட்பொருட்கள் உள்ளன. வேறு எந்த டூத் பேஸ்ட்களையும் தேர்வு செய்ய வேண்டாம்.
MOST READ:வெள்ளரிக்கா, புதினா சேர்த்து யூஸ் பண்ணுங்க முகம் பளபளக்குமாம்.

மூலிகை டூத்பேஸ்ட்
மூலிகை டூத்பேஸ்ட் சிறந்த மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். மேலும் இவை சருமத்திற்கு எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. நீங்கள் புதினா கலந்த டூத்பேஸ்ட்களையும் தேர்வு செய்யலாம். இந்த புதினா டூத்பேஸ்ட்கள் சருமத்திலிருந்து எண்ணெயை அகற்றி சருமத்தை பளபளக்கச் செய்யும். உங்களுக்கு தேவையான அளவு டூத்பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பிளாக்ஹெட்ஸால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் சருமம் மிகவும் வறண்டு காணப்பட்டால் உடனடியாக மாய்ஸ்சரைசரை உபயோகிங்கள்.

முகம்
நீங்கள் டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் முகத்தை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு முகத்தை நன்றாகத் துடைத்துவிட்டு டூத்பேஸ்ட்டை பிளாக்ஹெட்ஸ் உள்ள இடத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். முழுவதுமாக டூத்பேஸ்ட் காய்ந்த பிறகு ஒரு ஈரமான துணியைக் கொண்டு துடைத்து எடுங்கள்.

உப்பு
நீங்கள் பிளாக்ஹெட்ஸ்களில் இருந்து விரைவில் விடுபட நினைத்தால் டூத்பேஸ்ட்டுடன் உப்பு சேர்த்துப் பயன்படுத்தலாம். முதலில் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். உப்பு மற்றும் டூத்பஸ்டே இரண்டையும் ஒன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் அதில் இரண்டு அல்லது மூன்று சொட்டு தண்ணீர் சேர்த்துக் கலக்குங்கள். இப்போது பிளாக்ஹெட்ஸ் மேல் தடவி 8 முதல் 10 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு, பின்னர் தண்ணீரில் கழுவுங்கள். கழுவிய பின்பு உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, வறண்டு இருந்தால் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். சருமத்தில் உள்ள துளைகளைச் சரி செய்யவும், பாக்டீரியா தாக்குவதைத் தடுக்கவும் ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம்.

சாலிசிலிக் அமிலம்
உங்கள் சருமம் பிளாக்ஹெட்ஸால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால் நீங்கள் சாலிசிலிக் அமிலம் கொண்ட டூத்பேஸ்ட்களை பயன்படுத்தலாம். இது பாக்டீரியாவை அகற்றி சருமத் துளைகளைச் சுத்தப்படுத்துகிறது. சாலிசிலிக் அமிலம் கலந்த டூத்பேஸ்ட்டை சருமத்தில் தேய்த்து காயவிட்டு பின்னர் நீரில் கழுவுங்கள்.