For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமுடிக்கு கட்டாயம் கண்டிஷ்னர் போடணுமா? எப்படி அப்ளை பண்றது கரெக்ட்?

ஏன் எதற்கான எப்படி கண்டிஷ்னர்களை தலைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட உள்ளோம். அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

|

ஹேர் கண்டிஷனர் என்பது இன்றைய நாட்களில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாக மாறியுள்ளது. ஆனால் கண்டிஷனர் ஏன் பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அதனைப் பற்றிய சந்தேகம் இன்றும் நம்மில் பலருக்கு உண்டு. தலைமுடி பராமரிப்பில் கண்டிஷ்னரின் தேவை குறித்து ஒரு புரிதல் வேண்டும். இதற்காக சில நிமிடம் ஒதுக்கி இந்த பதிவைப் படித்து தலைமுடிக்கான பராமரிப்பில் கண்டிஷ்னரின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.

Hair Conditioner

இன்றைய கால சூழலில், தலைமுடி தொடர்பான எண்ணற்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே தலைமுடியை கவனமாக பராமரிக்க கண்டிஷனர் மிகவும் அவசியம். தலைமுடியை மென்மையாக மாற்றி அதனை எளிதில் நிர்வகிக்கக் கூடிய வகையில் அமைத்துக் கொடுப்பது கண்டிஷனர் ஆகும். தலையில் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, கூந்தல் உடையாமல் பாதுகாக்க உதவுகிறது கண்டிஷனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைமுடி பராமரிப்பு

தலைமுடி பராமரிப்பு

சந்தையில் பலவிதமான ஹேர் கண்டிஷனர் கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் இயற்கையான முறையில் தலைமுடியை கண்டிஷன் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதற்கான இயற்கை மூலப்பொருட்களும் உள்ளன. உங்கள் வழக்கமான கூந்தல் பராமரிப்பு முயற்சியில் ஹேர் கண்டிஷ்னரின் முக்கியத்துவம் இருப்பதை மனதில் கொண்டு, இந்த பதிவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்து படித்து இதன் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.

MOST READ: ஓனர் திட்டினதால கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியபோன பூனை... என்ன கொண்டு வந்துச்சு தெரியுமா?

ஏன் பயன்படுத்த வேண்டும்?

ஏன் பயன்படுத்த வேண்டும்?

உண்மையில் கண்டிஷனர் என்பது என்ன? அதன் பெயரிலேயே அதன் விளக்கம் ஒளிந்துள்ளது. தலை முடியை கண்டிஷன் செய்வதற்கு பயன்படும் ஒரு பொருள் கண்டிஷனர். அதாவது முடியை ஈரப்பதத்துடன் சரியான நிலையில் வைக்க உதவி முடி வளர்ச்சிக்கு உதவுவது கண்டிஷனர் ஆகும். உங்கள் கூந்தல் எந்த வகையாக இருந்தாலும் கூந்தலுக்கு கண்டிஷனர் அவசியம் தேவை. உங்கள் சருமத்திற்கு மாயச்ச்சரைசர் பயன்படுத்துவதற்கான முக்கியத்துவம் என்ன என்பது அனவைருக்கும் தெரியும்.

இதே போல் உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை பூட்டி கூந்தலுக்கு புத்துணர்ச்சியைத் தருவது கண்டிஷனர் ஆகும். கண்டிஷனர் உங்கள் கூந்தலை சுத்தம் செய்யும் முயற்சியின் முடிவாக உள்ளது. சில நேரங்களில் ஷாம்பூ பயன்படுத்தும்போது, உங்கள் கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய்த்தன்மை குறைந்து, முடி சேதமடையும் வாய்ப்பு உண்டாகும். கண்டிஷனர் பயன்படுத்துவதால், முடியில் ஈரப்பதம் அதிகரித்து, முடி உடையும் வாய்ப்பு தடுக்கப்படும் .

சுருண்ட - வறண்ட கூந்தல்

சுருண்ட - வறண்ட கூந்தல்

இது மட்டுமில்லாமல், கண்டிஷனர் பயன்படுத்துவதால் உங்கள் கூந்தலின் தன்மை மற்றும் தோற்றத்தை அது மேம்படுத்துகிறது. சுருண்ட அல்லது வறண்ட தலைமுடியை எளிதாக நிர்வகிக்கும் வகையில் முடியை செம்மைப்படுத்துகிறது. தலைமுடியில் உள்ள சிக்கை எளிதில் போக்கி, கூந்தல் உடைவதைத் தடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தலைமுடியை எளிதாகவும் விரைவாகவும் அலங்கரிக்க உதவுகிறது.

MOST READ: ஜாக்கிரதையா வாங்குங்க... இறால்ல ஜெலட்டின் ஊசிபோட்டு விக்கறாங்களாம்...

தேர்ந்தெடுப்பது எப்படி?

தேர்ந்தெடுப்பது எப்படி?

பொதுவாக பெருமளவில், நீங்கள் பயன்படுத்தும் கண்டிஷனர் பற்றி அதிக அளவு சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், தேவைபட்டால் ஓரளவிற்கு அக்கறையுடன் அதனை தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு, உங்கள் தலை முடி மெலிதாக இருந்தால், கூந்தல் அடர்த்தியை உண்டாக்கும் கண்டிஷனர் தேர்வு செய்யலாம், எண்ணெய்த்தன்மை அதிகம் உள்ள தலைமுடி என்றால், எண்ணெய்யைக் கட்டுப்படுத்தும் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

அதிகமாக சேதமடையும் கூந்தல் உள்ளவர்கள், சேதங்களைக் கட்டுப்படுத்தும் கண்டிஷனர் பயன்படுத்தலாம். லீவ்-இன் கண்டிஷனர், வறண்ட கண்டிஷனர் என்று பல வகை கண்டிஷனர்கள் கிடைக்கின்றன. லீவ்-இன் கண்டிஷனர் என்பது, ஷாம்பூ கொண்டு தலையை அலசியவுடன் கூந்தலுக்கு இதனை பயன்படுத்தி அப்படியே விட்டுவிட வேண்டும். தலைமுடியை அலசக் கூடாது. வறண்ட கண்டிஷனர் அதாவது ட்ரை கண்டிஷனர் என்பது வறண்ட ஷாம்பூ போல் பயன்படுத்தப்படுவது.

உங்கள் கூந்தலை எளிதாக அலங்கரிக்க இது உதவுகிறது. தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்துவதற்கு முன்பு பயன்படுத்தக் கூடிய சில வகை கண்டிஷனரும் உண்டு. உங்களுக்கு விருப்பமான எந்த ஒரு தேர்வையும் நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். ஏற்கனவே உங்கள் கண்டிஷனர் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தால் அதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த கண்டிஷனர் தான் சிறப்பானது என்று எந்த ஒரு தீர்வும் இல்லை. மிகவும் விலையுயர்ந்த கண்டிஷனர் தான் சிறப்பாக வேலை புரியும் என்ற அர்த்தமும் இல்லை. எனவே உங்களுக்கு ஏற்ற கண்டிஷனரை நீங்கள் தேர்வு செய்து அதனைப் பயன்படுத்தலாம்.

எப்படி கண்டிஷன் செய்ய வேண்டும்?

எப்படி கண்டிஷன் செய்ய வேண்டும்?

தலைக்கு ஷாம்பூ போட்டு சுத்தம் செய்த பின் பயன்படுத்தும் கண்டிஷனர் மட்டுமே பெரும்பாலும் அதிக அளவில் பயன்பாட்டில் இருப்பதாகும். தலைக்கு ஷாம்பூ பயன்படுத்தியபின், ஒரு சிறு அளவு கண்டிஷனர் எடுத்து உங்கள் உள்ளங்கையில் ஊற்றி, உங்கள் கூந்தலின் மத்தியில் இருந்து நுனிவரை தடவவும். இரண்டு நிமிடங்கள் அப்படியே விட்டு, பிறகு தலைமுடியை அலசவும். கண்டிஷ்னரின் தாக்கம் பெரும்பாலும் உடனடியாகவே இருக்கும்.

எத்தனை முறை?

எத்தனை முறை?

பொதுவாக கண்டிஷனர் என்பது கூந்தலுக்கு ஷாம்பூ பயன்படுத்திய பிறகு பயன்படுத்துவதாகும். ஆகவே நீங்கள் எத்தனை முறை ஷாம்பூ பயன்படுத்தி தலையைச் சுத்தம் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து கண்டிஷனர் பயன்படுத்தும் எண்ணிக்கையும் மாறுபடும். பொதுவாக தினமும் முடிக்கு ஷாம்பூ பயன்படுத்துவது தலைமுடிக்கு நல்லதல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைமுடிக்கு கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

MOST READ: ஆக்டோபஸை உயிரோட சாப்பிட நெனச்சு அது மூஞ்ச கீறிவிட்ட கொடூரம்.. இதோ நீங்களே பாருங்க...

கவனத்தில் கொள்ள வேண்டியது:

கவனத்தில் கொள்ள வேண்டியது:

உங்கள் கூந்தல் சரியான முறையில் கண்டிஷன் செய்யப்பட்டு, மென்மையான , நிர்வகிக்கக் கூடிய அளவில் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும் என்றாலும், கண்டிஷனர் பயன்படுத்துவதால் சில அபாய விளைவுகள் இருக்கவே செய்கின்றன. சிலிக்கான் அடிப்படைக் கொண்ட கண்டிஷனரை அதிக அளவு பயன்படுத்துவதால் சில எதிர்மறை விளைவுகள் உண்டாகலாம். முடி உதிர்வு அதிகரித்து, கூந்தலில் சேதம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகலாம்.

ஆனால் இது குறித்து கவனமாக இருப்பது அவசியம். மற்றொரு விஷயத்தை கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும் . அது, ஒருபோதும் கண்டிஷனரை கூந்தலின் வேர்க் கால்களில் பயன்படுத்தக்கூடாது. இதனால் உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் சேதமடையலாம். இதனால் தலைமுடி சோர்வாக, வலுவிழந்து உடைய நேரலாம். எல்லா நேரத்திலும் கண்டிஷனர் பயன்படுத்தும்போது, கூந்தலின் மத்தியில் இருந்து நுனி வரைத் தடவ வேண்டும். இரண்டு நிமிடத்திற்கு மேல் கூந்தலில் கண்டிஷனர் இருக்கக் கூடாது.

மேலும், உங்கள் கூந்தலுக்கு கலரிங் பயன்படுத்தி இருந்தால், அதற்கேற்ற கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் கண்டிஷனர் பயன்படுத்தக் கூடாது. அவை நல்ல முடிவைத் தராது.

என்ன வாசகர்களே, இவ்வளவு தான் கண்டிஷனர் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. இதுவரை கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக இதனை வாங்கி பயன்படுத்தி, மென்மையான, மிருதுவான, புத்துணர்ச்சியுடன் கூடிய கூந்தலைப் பெற்றிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why And How To Use Hair Conditioner

A conditioner is a product many of us have been sceptical about. Although used by almost everybody today, let's take a minute to understand the importance of a conditioner in our haircare routine.
Story first published: Tuesday, May 14, 2019, 11:07 [IST]
Desktop Bottom Promotion