For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரியா பொண்ணுங்க எப்பவும் இளமையாவே இருக்காங்களே எப்படி? இதுதான் சீக்ரெட்டாம்

நீண்ட காலம் கொரியன்கள் மட்டும் அழகாகவும் இளமையாகவும் இருக்கக் காரணங்கள் என்பதை தான் இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. அமு பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

|

அழகு என்றால் அதற்கு கொரியன் பெண்களைக் கூறலாம். காரணம் அவர்களுக்கு எவ்வளவு வயதாகியும் அவர்களின் சருமம் மினுமினுப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். இந்த ஆரோக்கியமான சருமம் கிடைக்க அவர்கள் நிறைய மெனக்கெடல்களை எல்லாம் செய்வதில்லை. தினமும் சில அழகு பராமரிப்பு முறைகளை மட்டும் செய்து வருகிறார்கள்.

Korean Skin

இந்த 10 அழகு பராமரிப்பு முறைகள் உங்கள் கையில் இருந்தால் போதும் நீங்களும் கொரியன் பெண்கள் போல் இளமையாக ஜொலிக்கலாம். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயில் க்ளீன்சர்

ஆயில் க்ளீன்சர்

கொரியன் பெண்கள் தினமு‌ம் தங்கள் முகத்தை சுத்தம் செய்ய ஆயில் க்ளீன்சர் பயன்படுத்துகின்றனர். இந்த ஆயில் க்ளீன்சர் நமது முகத்தில் தேங்கியுள்ள எண்ணெய் பசையை போக்கி சருமத்தை பொலிவாக்கும். அதுமட்டுமல்லாமல் முகத்தில் உள்ள ஆயில் மேக்கப், சன்ஸ்க்ரீன், மஸ்காரா போன்றவற்றையும் இதைக் கொண்டு எளிதாக நீக்கி விடலாம். எனவே உங்கள் மேக்கப்பை ரிமூவ் செய்ய இது உதவியாக இருக்கும்.

ஃபோர்ம் க்ளீன்சர்

ஃபோர்ம் க்ளீன்சர்

அடுத்ததாக அவர்கள் இன்னொரு முறை முகத்தை சுத்தம் செய்கிறார்கள். ஏனெனில் வியர்வை, தூசிகள், அழுக்குகள் போன்றவை இன்னமும் முகத்தில் தேங்கியிருக்கும். இதனால் அதற்கு ஃப்பார்ம் க்ளீன்சர் பயன்படுத்துகின்றனர். இதை அவர்கள் ஒரு நாளும் விடாமல் தினந்தோறும் செய்கிறார்கள்.

MOST READ: இந்த இலை தெரியுமா? இதுல டீ போட்டு குடிச்சா நடக்கற அற்புதம் தெரியுமா?

இறந்த செல்களை நீக்குதல்

இறந்த செல்களை நீக்குதல்

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குதல் என்பது கொரியன் பெண்களின் முக்கியமான பராமரிப்பு. இப்படி நமது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கும் போது சருமம் புதுப்பிக்கும். ஆனால் இதை தினமு‌ம் செய்யக் கூடாது. சென்ஸ்டிவ் சருமம் உடையவர்கள் இதை வாரத்திற்கு 1-2 தடவை செய்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். கடினமான சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி செய்து கொள்ளலாம்.

டோனர்

டோனர்

கொரியன் பெண்கள் சருமத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு சருமத்தை மாய்ஸ்சரைசர் செய்கிறார்கள். இதற்கு டோனர் பயன்படுத்தி சருமத்திற்கு போஷாக்கு அளிக்கிறார்கள். கொரியன் பெண்கள் பயன்படுத்தும் டோனர் நாம் பயன்படுத்தும் அஸ்ட்ரிஜெண்ட் டோனர் கிடையாது. மாறாக இது சருமத்திற்கு நல்ல தக்காளி பழத்தை போன்ற சிகப்பழகை தரக் கூடியது.

எஸன்ஸ்

எஸன்ஸ்

டோனருக்கு அடுத்தபடியாக அவர்கள் எஸன்ஸ் பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு நல்ல முகப்பொலிவை தருகிறது. இந்த எஸன்ஸை கைகளில் ஊற்றி மெதுவாக முகத்தில் அப்ளே செய்து வரலாம்.

MOST READ: வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?

சீரம்

சீரம்

இப்பொழுது அவர்கள் சருமத்தில் உள்ள முகச் சுருக்கங்கள், சரும நிறத்திட்டுகள், பருக்கள் போன்றவை போக சீரம் பயன்படுத்துகின்றனர். இந்த சீரத்தை எடுத்து சருமத்தில் அப்ளே செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சருமமும் அதை உறிஞ்சி பலனளிக்கும். உங்களுக்கு சருமத்தில் ப்ரவுன் புள்ளிகள் இல்லாவிட்டால் இதை நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

சீட் மாஸ்க்

சீட் மாஸ்க்

இந்த சீட் மாஸ்க்கை வாரத்தில் இரண்டு தடவை அல்லது 7 தடவையும் பயன்படுத்தி வரலாம். இந்த மாஸ்க்கை நீங்கள் 15 நிமிடங்கள் போட்டு இருந்தாலே போதும் இளமை ஜொலி ஜொலிக்கும். 15 நிமிடத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டாம். ஏனெனில் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

ஐ க்ரீம்

ஐ க்ரீம்

ஐ க்ரீம் கண்களைச் சுற்றியுள்ள கோடுகளையும் கருவளையத்தையும் போக்குகிறது. எனவே கருவளையம், கோடுகள் போக இதை அப்ளே செய்யலாம். இந்த ஐ க்ரீம் நத்தையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் எலாஸ்டின், புரோட்டீன் மற்றும் ஹையலுரானிக் அமிலம் போன்றவை அடங்கி உள்ளன. எனவே உங்கள் கண்ணழகிற்கு இது சிறந்தது.

பேஸ் க்ரீம்

பேஸ் க்ரீம்

கொரியன் பெண்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கின்றனர். உங்கள் சருமம் இளமையாக இருக்க மாய்ஸ்சரைசர் ரொம்ப முக்கியம். எனவே இந்த பேஸ் க்ரீமை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் அப்ளே செய்து விட்டு காலையில் கழுவுங்கள். உங்கள் முகம் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும்.

MOST READ: வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க

சன்ஸ் க்ரீன்

சன்ஸ் க்ரீன்

சூரிய ஒளியில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பது முக்கியம். எனவே உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து காக்க சன்ஸ் க்ரீன் அப்ளே செய்ய வேண்டும். இதை கொரியன் பெண்கள் தினமும் செய்து வருகிறார்கள்.

மேற்கண்ட 10 பராமரிப்பு முறைகள் தான் தங்கள் இளமைக்கு காரணம் என்று கொரியன் பெண்கள் கூறியுள்ளனர். என்னங்க நீங்களும் இளமையாக இருக்க ரெடியா?.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Step Korean Skin Care Guide to Make You Look Younger

Everyone who has been to South Korea at least once has noticed the amazing ability Asian women have to stay younger for longer than European women can. Of course, genes play a huge role here but the most important factor is everyday care. Korean women have a lot of different skin care systems
Story first published: Monday, May 13, 2019, 10:51 [IST]
Desktop Bottom Promotion