For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இதுலா ஏதாவது ஒன்ன தொடர்ந்து செய்தாலே போதும்!

|

உடலில் அளவுக்கு அதிகமாக கூட கூடிய கொழுப்பை குறைப்பதே ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதுவும் முகத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் அதனால் பலவித பாதிப்புகள் முகத்திற்கு ஏற்படும். பெரும்பாலும் இதை குறைப்பது மிக கடினமான ஒன்றாக பலருக்கும் உள்ளது. ஆனால், இதை மிக எளிதான முறையில் நம்மால் குறைக்க முடியும்.

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இதுலா ஏதாவது ஒன்ன தொடர்ந்து செய்தாலே போதும்!

ஒரு சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தாலே இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு முடிவை கட்டி விடலாம். இந்த பதிவில் கூறும் 6 வழிகளில் ஏதேனும் ஒரு வழியை தொடர்ந்து செய்து வந்தால் 2 வாரத்தில் நல்ல மாற்றத்தை உங்களால் அடைய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயிற்சி #1

பயிற்சி #1

முக பகுதியில் உள்ள கொழுப்பை விரைவாக குறைக்க முதல் வழி வாயின் கீழ் பகுதியை முன்னும் பின்னுமாக அசை போடுவது தான்.

முன்னும் பின்னுமாக தாடையை அசைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இவற்றில் உள்ள கொழுப்புகள் குறைய தொடங்கும். தினமும் இந்த பயிற்சியை 8 முதல் 10 முறை செய்து வரலாம்.

பயிற்சி #2

பயிற்சி #2

இது நாம் சிறிய வயதில் விளையாடிய விளையாட்டு போலவே இருக்கும். அவ்வப்போது நாக்கால் மூக்கை தொடுவது போல செய்து வந்தால் இந்த கொழுப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இந்த பயிற்சியை விளையாட்டாக 5 முறை செய்து வரலாம்.

MOST READ: எலுமிச்சை சாறில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்?

பயிற்சி #3

பயிற்சி #3

உங்களது கழுத்தை இடது புறமாக திருப்பி வாயின் கீழ் தாடையை முன்னும் பின்னுமாக அசைத்து வரவும். இவ்வாறு செய்வதால் முக பகுதியில் உள்ள கொழுப்புகள் குறையும். அத்துடன் தசைகளும் இறுக்கமாக மாறும். இதை தினமும் 5 முறை செய்து வரலாம்.

பயிற்சி #4

பயிற்சி #4

இந்த நான்காம் பயிற்சி மிக சுலபமானது. உங்களை விட உயரமாக இருக்கும் ஒருவருக்கு மேல் நோக்கிய படி முத்தம் கொடுப்பது போல தொடர்ந்து 5 முறை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறையும் 5 முதல் 8 நொடிகள் அதே நிலையில் இருத்தல் வேண்டும். இது சிறந்த பலனை தரும்.

பயிற்சி #5

பயிற்சி #5

உங்களது வாயை குவித்து வைப்பது போல செய்து வந்தால் அருமையான பலனை தரும். அதாவது, தொடர்ந்து 5 நொடிகள் உங்களது வாயை குவித்து வைக்க வேண்டும். இதை தொடர்ந்து 6 முறை ஒரு நாளைக்கு செய்து வரவும்.

பயிற்சி #6

பயிற்சி #6

வாயை நன்றாக திறந்து சிரிக்க வேண்டும். இது தான் ஆறாவது பயிற்சி முறை. இவ்வாறு சிரித்த படி 3 நொடிகள் இருந்தால் போதும். இந்த பயிற்சியை 5-8 முறை செய்து வருவது சிறந்த பலனை தரும்.

MOST READ: இந்த 9 அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவ பரிசோதிக்க எடுக்க வேண்டும்..!

பயிற்சி #7

பயிற்சி #7

கன்னத்து பகுதியை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்ற வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்து வரலாம். இதுவும் முகத்தில் உள்ள கொழுப்பு பகுதிகளை குறைக்க கூடிய எளிமையான பயிற்சி முறையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Exercises That Helps To Reduce Double Chin

Here we listed some of the exercises that helps to reduce double chin.
Story first published: Monday, April 1, 2019, 17:37 [IST]
Desktop Bottom Promotion