For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு தூங்கும் போது இதையெல்லாம் செய்து விட்டு தூங்குங்க... அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..!

|

நாள் முழுக்க உழைத்து, இரவில் ஓய்வெடுக்கும் போது ஒரு சில முக்கியமான விஷியங்களை நாம் மறக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். நாம் தூங்கும் முன் சில செயல்களை செய்து வந்தால் அவை நமது ஆரோக்கியத்தையும் முக அழகையும் அதிகரிக்கும். இரவு தூக்கம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று இரவில் நாம் ஒரு சில விஷயங்களை கவனத்துடன் பார்த்து கொள்வதும் முக்கியம்.

இரவு தூங்கும் போது இதையெல்லாம் செய்து விட்டு தூங்குங்க... அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..!

இவற்றை மறப்பதால் பல வித பாதிப்புகள் நமக்கு ஏற்பட கூடும். இரவில் தூங்கும் தலையணை முதல் படுக்கும் முறை வரை எல்லாவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அப்படி என்னென்ன விஷயங்களை நாம் இரவு நேரத்தில் செய்ய வேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் பயன்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவசியமானதே..!

அவசியமானதே..!

இரவில் உறங்குவதற்கு முன் சில விஷயங்கள் சரியாக இருக்கிறதா..? என்பதை சோதித்து விட்டு படுக்க செல்வது சிறந்த பழக்கமாகும். இவை உங்களின் முக அழகை பலவித பிரச்சினைகளில் இருந்து காக்கும் திறன் கொண்டது. அத்துடன் முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

தலையணை எப்படி..?

தலையணை எப்படி..?

நீங்கள் தூங்க பயன்படுத்தும் தலையணை உறையை அடிக்கடி மாற்றுவது நல்லது. ஏனெனில், இவை உங்களின் சருமத்தில் சுருங்கங்களை ஏற்படுத்த கூடும். மேலும், பட்டு நூலினால் நெய்த தலையணையை பயன்படுத்துவது சிறந்தது. இது சருமத்தில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

குடித்து விட்டு தூங்குங்கள்..!

குடித்து விட்டு தூங்குங்கள்..!

இரவில் நல்ல உறக்கம் இருந்தால் நமது முகம் அழகாக இருக்கும். இந்த பலனை முழுமையாக அடைய தண்ணீர் நல்ல மருந்தாக இருக்கும். இரவில் தூங்குவதற்கு முன்னர் தண்ணீர் குடித்து விட்டு தூங்கினால் உடல்நலம் சீராக இருக்கும்.

இதை தவிர்க்காதீர்கள்..!

இதை தவிர்க்காதீர்கள்..!

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வெது வெதுப்பான நீரில் ஒரு குளியலை போட்டு விட்டு குளியுங்கள். இது நல்ல உறக்கத்தை தந்து, சரும பாதுகாப்பையும் தரும். இதனால் பருக்கள், முக வறட்சி போன்றவை ஏற்படாது.

MOST READ: 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..?

கண்களுக்கு தேவை..!

கண்களுக்கு தேவை..!

நீங்கள் உறங்குவதற்கு முன் இந்த விஷயத்தை மறந்து விடாதீர்கள். அதாவது, தூங்குவதற்கு முன் கண்களை கட்டி கொண்டு தூங்குங்கள். இது ஆழ்ந்த உறக்கத்தை தருவதோடு கண்ணில் கரு வளையம் ஏற்படுத்துவதையும் தடுக்குமாம். மேலும், முக சுருக்கங்களையும் இது குறைத்து விடும்.

மொபைல் தரும் பாதிப்பு..!

மொபைல் தரும் பாதிப்பு..!

தூங்க செல்லும் போது மொபைலை நோண்டி கொண்டே இருக்காதீர்கள். மேலும், உங்களின் அருகில் மொபைலை வைக்காமல், சற்று தூரமாக வைத்து தூங்கினால் நல்லது. தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை கணினி, மொபைல், தொலைக்காட்சி ஆகியவற்றை பார்ப்பதை தவிருங்கள்.

மேக்கப்..!

மேக்கப்..!

பல பெண்கள் வெளியே செல்லும் முன் மேக்கப் போடுவதை மறக்கவே மாட்டார்கள். ஆனால், வீட்டிற்கு வந்தவுடன் முகத்தில் இருக்க கூடிய மேக்கப்பை எடுக்க மறந்து விடுகின்றனர். முகத்தில் மேக்கப் உடனே தூங்கினால் சருமம் சார்ந்த பலவித பிரச்சினைகள் வர கூடும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமைதியான சூழ்நிலை

அமைதியான சூழ்நிலை

நாம் தூங்கும் சுற்றுப்புறம் மிகவும் அமைதியானதாக இருத்தல் வேண்டும். மனதிற்கு நிம்மதியை தர கூடிய சுற்றுப்புறத்தை அமைத்து கொள்வது சிறந்த முறையாகும்.

அத்துடன் வாசனை திரவியத்தை லேசாக உங்களின் படுக்கை அறையில் பயன்படுத்தினாலும் சிறந்த உறக்கத்தை தரும்.

MOST READ: ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Sleep Tips To Get Beautiful Skin

Beauty Sleep Tips To Get Beautiful Skin
Story first published: Friday, January 18, 2019, 17:45 [IST]
Desktop Bottom Promotion