For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..? அப்போ இதை பயன்படுத்துங்க

|

யாராக இருந்தாலும் மிகவும் பொலிவான, பளீச்சென்ற அழகை பெற அதிகம் விரும்புவார்கள். முகத்தை அழகாக வைத்து கொள்ள வேதி பொருட்கள் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தவர். இந்த கிரீம்கள் அனைத்துமே உங்களின் முக அழகை சற்று நேரம் அழகாக காட்டுவது போன்ற பிம்பத்தை காட்டி விட்டு, பிறகு முழு அழகையும் கெடுத்து விடும்.

விழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..? அப்போ இதை பயன்படுத்துங்க

இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் இயற்கையான முறையை செய்து இரட்டிப்பு பலனை பெறலாம். குறிப்பாக நாம் விழா காலங்களில் ஏராளமான முக பூச்சுகளை வாங்கி அடுக்கி வைத்து கொள்வோம். அதற்கு பதிலாக இந்த பதிவில் கூறும் எளிமையான குறிப்புகள் உங்களை பிறரை கவர கூடிய அழகை பெற்று தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகோ அழகு...!

அழகோ அழகு...!

அழகு என்பது ஆண் பெண் என இருவருக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால், பெண்களை காட்டிலும் ஆண்கள் தங்களை அழகு செய்து கொள்ள மிகவும் கூச்சப்படுகின்றனர். சில ஆண்களுக்கு தன்னை அழகாக காட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், மற்றவர் ஏதாவது சொல்வார்களோ என்ற எண்ணத்திலே அழகு செய்ய தவிர்த்து விடுவார்கள்.

அத்திப்பழ அழகு தெரியுமா..?

அத்திப்பழ அழகு தெரியுமா..?

முகத்தை இரு மடங்கு அழகாக்க இந்த அத்திப்பழம் பெரிதும் பயன்படுமாம். மேலும், இதில் உள்ள பல வகையான வைட்டமின்களும், தாது பொருட்களும் நம் அழகை பெருக்க கூடியதாகும். இதனை பெற...

தேவையானவை :-

அத்திப்பழம் 6

முல்தானி மட்டி 2 ஸ்பூன்

ரோஸ் நீர் 1 ஸ்பூன்

யோகர்ட் 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் அத்திப்பழத்தை நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் முல்தானி மட்டி, ரோஸ் நீர், யோகவர்ட் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் தடவினால் முகம் பளீச்சென்ற அழகை பெறும். மேலும், முகத்தின் வறட்சியையும் இது குறைக்கும்.

இளமையான சருமம் பெற...

இளமையான சருமம் பெற...

விழா நேரங்களில் நம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, 10 வயது குறைந்தது போன்று இருக்கணுமா..? அப்போ கண்டிப்பாக இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை :-

ரோஜா இதழ் பேஸ்ட் 3 ஸ்பூன்

வெள்ளை முட்டை கரு 1

அவகோடா எண்ணெய் 1 ஸ்பூன்

அரிசி மாவு 1 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

MOST READ: விந்தணு குறைபாடா..? அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்..!

செய்முறை :-

செய்முறை :-

ரோஜா இதழை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் நன்றாக அடித்து கொண்டு, அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். கடைசியாக இந்த கலவையை முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் இளமையாகும்.

கருமை நீங்க...

கருமை நீங்க...

முகத்தில் உள்ள கருமை நீங்க இந்த குறிப்பு பயன்படும். மேலும், முகத்தை வெண்மையாகவும் இது மாற்றும்.

தேவையானவை :-

பாதாம் பொடி 2 ஸ்பூன்

வால்நட் பொடி 2 ஸ்பூன்

ஓட்ஸ் 2 ஸ்பூன்

பால் தேவைக்கேற்ப

செய்முறை :-

செய்முறை :-

முதலில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் வால்நட் பொடி, பாதாம் பொடி, பால் ஆகிவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் கருமை நீங்கி விடும்.

முடியின் போஷாக்கிற்கு...

முடியின் போஷாக்கிற்கு...

முடி மிகவும் அழகாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டுமென்றால், இந்த அழகு குறிப்பு பெரிதும் பயன்படும்.

தேவையானவை :-

கற்றாழை சாறு 3 ஸ்பூன்

சாமந்தி 1

பாதாம் எண்ணெய் 2 ஸ்பூன்

ரோஸ்மேரி பேஸ்ட் 2 ஸ்பூன்

MOST READ: நீங்கள் தூங்கும் நிலை, உங்களுக்கு என்னென்ன பலன்கள் தருகிறதுனு தெரியுமா..?

செய்முறை :-

செய்முறை :-

முதலில் சாமந்தி மற்றும் ரோஸ்மேரியை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் பாதாம் எண்ணெய், கற்றாழையை சேர்த்து கலந்து கொண்டு தலையில் தடவவும். 20 நிமிடம் கழித்து சிறிது ஷாம்பு அல்லது சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளித்தால் முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Festive Glow During Festivals

Follow these easy and simple beauty tips for skin and hair to get festive glow.
Desktop Bottom Promotion