கீறல் இல்லாம ஷேவ் பண்ண தெரியலையா?... அப்போ உங்களுக்குதான் இந்த டிப்ஸ்

Posted By: vijaya kumar
Subscribe to Boldsky

நீங்கள் தினமும் ஷேவிங் செய்யும் பழக்கம் கொண்டவரா?... அப்படி நீங்கள் ஷேவிங் செய்யும் போது கீறல்கள், வெட்டுக்காயங்கள் இல்லாமல் ஷேவ் செய்வது என்பது முடியாத காரியம் தான். எப்படியாவது வெட்டுக்காயம் ஏற்பட்டுவிடும்.

beauty

ஏற்படும் வெட்டுக்காயங்கள் மற்றும் அதன்மூலம் ஏற்படுகிற இரத்தப்போக்கை நிறுத்த என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருப்போம். அப்படி கீறல் இல்லாம ஷேவ் பண்ண தெரியலையா?... அப்போ நமது சமையல் அறையிலேயை உள்ள பொருட்களை கொண்டு இரத்தப்போக்கை நிறுத்தவாவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா?...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷேவிங் ரத்தப்போக்கு

ஷேவிங் ரத்தப்போக்கு

ஷேவிங் செய்யும் போது கீறல்கள், வெட்டுக்காயங்கள் இல்லாமல் ஷேவ் செய்வது என்பது முடியாத காரியம் தான். எப்படியாவது வெட்டுக்காயம் ஏற்பட்டுவிடும். ஏற்படும் வெட்டுக்காயங்கள் மற்றும் அதன்மூலம் ஏற்படுகிற இரத்தப்போக்கை நிறுத்த என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருப்போம். அப்படி உண்டாகும் ரத்தப்போக்கை விட்டிலுள்ள சில எளிய பொருள்களைக் கொண்டு உடனடியாக நிறுத்திவிட முடியும். அவை என்னவென்று பார்ப்போம்.

ஆஃப்டர் ஷேவ் லோஷன்

ஆஃப்டர் ஷேவ் லோஷன்

ஆஃப்டர் ஷேவ் லோஷன் பயன்படுத்துபவரா நீங்கள்?? ஆம் என்றல் உண்மயிலேயே நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். ஆஃப்டர் ஷேவ் லோஷனில் ஆல்கஹால் கலந்திருக்கிறது. ஆல்கஹால் கட்டுக்கடங்காமல் ரத்தத்தை பாய்ச்சும் இயல்புடைய இரத்த நாளங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆல்கஹால் இரத்தக் குழாயை சிறியதாக்கும் தன்மையுடையது. இரத்தக்குழாய் சிறிதாவதால் இரத்தப்போக்கு தடுத்து நிறுத்தப்படுகிறது. அதோடு, ஷேவ்

செய்யும்போது ஏற்படும் வெட்டுக்காயம் திறந்த நிலையில் உள்ள காயத்தை போன்றதுதான். இதன் வழியாக பாக்டீரியா நாம் உடலில் நூழைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். அதையுமு் கூட இந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.

DEODORANT

DEODORANT

டியோடரண்டில் அலுமினியம் குளோரைடு உள்ளது. இது வியர்வை சுரப்பிகளை சுருக்கி உங்கள் வியர்வையைக் குறைக்கிறது. அதோடு இரத்த நாளங்களை மட்டுப்படுத்தி, உராய்வு மற்றும் கடுமையான இரத்தப்போக்கிலிருந்து காக்கிறது.

லிப் பாம்

லிப் பாம்

லிப் பாம்கள் தற்போது ஏராளமான பிளேவர்களில் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆண்களுக்குப் பிடித்தமான பப்புல்கம், ஸ்ட்ராபெரியின் பிளேவர்களிலும் கிடைக்கிறது. அதை வெட்டுக்காயங்களின் மேல் எடுத்து தடவினால் வெட்டுக்காயமும் ஆறிடும். ரத்தப்போக்கும் உடனே நிற்கும். அந்த பிளேவர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதற்குபதிலாக, சாப்ஸ்டிக்ஸ், அல்லது நல்ல பெட்ரோலியம் ஜெல்லி கூட பயன்படுத்தலாம். இதை பிளேடு வெட்டில் இருந்து வரும் இரத்தத்தை உறையவைத்து இரத்தப்போக்கை நிறுத்துகிறது.

காட்டன் பஞ்சில் சாப்ஸ்டிக்ஸ் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து வெட்டு ஏற்பட்ட இடத்தில் தடவி பயன்படுத்தவும்

காபி அல்லது டீ

காபி அல்லது டீ

காபி அல்லது காஃபினேன் தேநீர் ஒரு வகையில் ரத்தக்குழல் சுருக்கியாக வேலை செய்கிறது. இது குறிப்பாக கண்களை சுற்றி ஏற்படுகின்ற சோர்வையும் எரிச்சலையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது. அதனால்தான் பல ஐ கிரீம்கள் மற்றும் சீரம்களில் கபீன் முதன்மையான மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. காபி மண்டி அல்லது குளிர்ந்த தேநீர் பையை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெட்டுக்காயத்தின் மீது சிறிது நேரம் வைத்திருந்தால், ரத்தப்போக்கு நின்றுவிடும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

முகச்சவரம் செய்யும் போது வெட்டுக்காயம் ஏற்பட்டவுடன் துடைப்பதற்கு சாதாரண தண்ணீர் பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு ஐஸ் கட்டியை எடுத்து வெட்டுக்காயம் ஏற்பட்ட இடத்தில் அழுத்தம் கொடுக்கவும். ஐஸ் கட்டி இரத்தக் குழாய்களைக் கட்டுப்படுத்தி, இரத்தத்தை உறைய வைக்க உதவுகிறது

செப்டிக் பென்சில் அல்லது பேனா

செப்டிக் பென்சில் அல்லது பேனா

ஷேவிங் செய்யும் போது உண்டாகிற வெட்டுக்காயத்தையம் அதிலிருந்து வெளியேறுகிற ரத்தப்போக்கையும் நிறுத்த மிகச்சிறந்த வழி செப்டிக் பென்சில் பயன்படுத்துவது தான். இதில் அலுமினியம் சல்பேட் இருப்பதால், மிகச்சிறந்த தீர்வைத் தரும். இது ரத்தக் குழாய்களைச் சுருக்கி, ரத்தப்போக்கை கட்டக்குள் வைக்கிறது.

ஷேவிங் பாதிப்புகள்

ஷேவிங் பாதிப்புகள்

ஷேவிங் செய்யும் போது சிறிய வெட்டுக்காயங்கள் ஏற்படும் , அப்போது வழியும் இரத்தம் உடனடியாக காய்ந்துவிடும். ஆனால் வெட்டு ஏற்பட்டு தொடர்ந்து இரத்தம் நிற்காமல் வந்தால் வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளது என்று நாம் உணர்ந்து கொள்ளலாம்

அறிகுறிகள்

அறிகுறிகள்

நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள், உங்கள் இரத்த சிவப்பணுக்களை பாதிக்கிறது. ஆஸ்பிரின் மற்றும் திடீர் அழற்சி, எதிர்ப்பு அழற்சி மருந்துகள் உங்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கின் நேரத்தை நீடிக்கிறது. மேலும் உங்களுக்கு ஈறுகளில் இரத்தம் வடிதல் , மூக்கடைப்பு, அல்லது உங்கள் சரும ஒடுங்கியோடு சேர்த்து எளிதில் சிராய்ப்பு செய்வது போன்ற மற்ற பக்க விளைவுகளை சந்திக்க நேர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Fast Ways to Stop Your Shaving Cut From Bleeding

When you shave on a regular basis, nicks and cuts are pretty much impossible to avoid.
Story first published: Wednesday, April 11, 2018, 12:00 [IST]