பொடுகை விரட்ட உப்பை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

Posted By: Aashika Natesan
Subscribe to Boldsky

அவசர உலகில் ஆரோக்கியமான தலைமுடிக்கும், பொலிவான சருமத்திற்கும் நிறைய மெனக்கடல்களை எடுக்க முடிவதில்லை.உணவுகளில் முக்கியப் பங்காற்றும் உப்பு, நம் அழகுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பது தெரியுமா?

எல்லாருடைய வீட்டிலும் உப்பு நிச்சயமாக இருக்கும். அந்த உப்பை பயன்படுத்தி உங்களது சருமத்தையும் தலைமுடியையும் பேணிக்காக்க சில டிப்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி வளர்ச்சிக்கு உதவும் :

முடி வளர்ச்சிக்கு உதவும் :

முடிகொட்டும் பிரச்சனை இருப்பவர்கள் முதலில் ஷாம்பு போட்டு தலைக்குளித்து முடியை சுத்தமாக்கி கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு உப்பை தலையில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்து கழுவிட வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முடி கொட்டுவது குறையும்.

பொடுகுக்கு குட்பை :

பொடுகுக்கு குட்பை :

தலையில் உள்ள டெட் செல்களைத் தான் நாம் பொடுகு என்கிறோம். அது தலையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாததால் ஏற்படுகிறது. தலையில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி பொடுகை அழிப்பதில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

எண்ணைப் பசையை நீக்கும் :

எண்ணைப் பசையை நீக்கும் :

வெயில் காலங்களில் தலையில் வியர்த்து அதிக எண்ணைப்பசையுடன் காணப்படும். அந்நேரங்களில் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவில் ஒரு தேக்கரண்டி உப்பைக் கலந்து தலைக்குளித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

சிறந்த ஸ்க்ரப் :

சிறந்த ஸ்க்ரப் :

மூன்று தேக்கரண்டி உப்புடன் சிறிதளவு தேங்காய் கலந்து சருமத்தில் தேய்த்து நன்றாக கழுவினால் இது சிறந்த ஸ்க்ரப்பாக செயல்படும். உப்பில் இருக்கும் சில மின்ரல்ஸ்கள் சருமத்தில் உள்ள டெட் செல்களை நீக்குவதுடன் சருமத்தை மென்மையாய் வைத்திருக்க உதவும்.

அழுக்குகளை நீக்கும் :

அழுக்குகளை நீக்கும் :

சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி பருக்கள் வராமல் தடுக்கும். அதோடு சருமத்தில் சுரக்கும் எண்ணெயையும் கட்டுப்படுத்தும்.

மென்மையான சருமத்திற்கு :

மென்மையான சருமத்திற்கு :

நான்கு தேக்கரண்டி தேனுடன் இரண்டு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அதனை பேஸ் மாஸ்க் போல முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவிவிடுங்கள்.

உப்பு குளியல் :

உப்பு குளியல் :

குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து குளிக்கலாம். இதனால் சருமத்தில் ஒட்டியிருந்த அழுக்குகள்,நச்சுக்கள் அழிந்திடும். உப்பில் இருக்கும் மினரல்களால் சருமம் வறட்சியிலிருந்தும் மீட்கப்படும்.

வீங்கிய கண்களுக்கு :

வீங்கிய கண்களுக்கு :

நோய்த்தொற்று இன்றி அதிக தூக்கத்தினாலோ அல்லது குறைந்த தூக்கத்தினால் கண்கள் வீங்கியிருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் உப்புடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் பஞ்சை முக்கி அதனை கண்களில் பத்து நிமிடம் வைத்திருந்தால் வீக்கம் குறைந்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: hair care body care skin care
English summary

Simple Tricks Using Salt For Hair And Skin Care

Salt is known to be one of the most essential things in our kitchen. Here are ways on how you could use this ingredient for skin and hair care.