புகைப்பழக்கத்தால் உண்டான பற்களின் கறையை போக்க இது மட்டும் போதும்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு புகைப்பிடிப்பது என்பது மிகவும் ஃபேஷனாகி விட்டது. திரையில் பார்ப்பதையும், இன்னொருவர் புகைப்பிடிக்கிறார் என்பதை பார்த்து ஏதோ ஒரு குறுகுறுப்பில் ஆரம்பித்து பின் அதை விட முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

விளையாட்டாய் ஆரம்பித்த விஷயம் உயிரையே பறித்து விடும் என்பதற்கு இந்த புகைப்பழக்கம் மிகச்சிறந்த உதராணமாய் அமைந்திடும். ஆம், புகைப்பிடிப்பதால் உங்களுக்கும் உங்களை சுற்றியிருப்போருக்கோம் பெரும் தீங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

Natural remedies to Whiten Teeth For Smokers

வழக்கமாக புகைப்பிடிப்பதால் அந்த நோய் வரும் அவ்வளவு பாதிப்புகள் இருக்கிறது தெரியுமா? என்று உங்களை எச்சரிக்கும் கட்டுரையல்ல இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்கள் :

பற்கள் :

நீண்ட நாட்களாக புகைப்புடிப்பவர்களின் பற்களில் பிரவுன் நிறத்தில் கரை படியும். நம் ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற பகுதிக்கு ‘எனா மல்' என்று பெயர். இதற்கு அடுத்த பகுதியாக இருப்பது ‘டென்டின்' (Dentin). ஒருவருக்கு டென்டின் எந்த நிறத்தில் அமைகிறதோ அந்த நிறம் தான் அவருடைய பற்களின் நிறம்.

நிறம் :

நிறம் :

எல்லாருக்கும் ஒரே மாதிரியாக வெள்ளையாக இருப்பது கிடையாது தான். இயற்கையாகவே பற்களுக்கு வெள்ளையை தவிர்த்து சில நிறங்கள் இருக்கிறது. தொடர்ந்து புகைப்படிப்பவர்களுக்கு அதிலிருக்கும் சில வகை கெமிக்கல்களால் பற்களின் நிறமே மாறி கரை படிந்திடும்.

ஏன் நிறமாறுகிறது? :

ஏன் நிறமாறுகிறது? :

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது பற்களின் நிறமாற்றத்துக்கு முக்கியக் காரணம். எனாமலில் பற்காரை படிவதால் பல்லின் நிறம் மாறுகிறது. புகைப்பழக்கம், வெற்றிலை, பாக்கு, புகையிலை போடுவது, பான்மசாலா/குட்காவைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு பற்களின் நிறம் காவி நிறத்துக்கு மாறும்.

காரணம், புகையிலையில் உள்ள நிகோடின் ரசாயனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக டென்டின் உறிஞ்சிக்கொண்டே இருக்கும். நாளடைவில் தன் இயல்பான நிறத்தை அது இழந்துவிடும்.

தண்ணீர் :

தண்ணீர் :

நாம் குடிக்கும் தண்ணீரிலும் பாலிலும் ஃபுளோரைடு அளவு அதிகமாக இருக்குமானால் ‘டென்டல் ஃபுளூரோசிஸ்' ( Dental Fluorosis ) எனும் பிரச்சினை வரும். அப்போது பற்கள் அடர் மஞ்சள், காவி நிறம் எனப் பல்வேறு நிறங்களில் காணப்படும். எனாமலில் மாநிறக்கோடுகள் அல்லது வெள்ளை நிறக்கோடுகள் பட்டை போட்டதுபோல் தெரியும்.

சிகிச்சை :

சிகிச்சை :

புகையிலை காரணமாக கறை படிந்த பற்கள் உள்ளவர்கள், டென்டல் ஃபுளூரோசிஸ் பிரச்சினை உள்ளவர்கள், மாத்திரை மருந்துகளால் பற்களின் நிறம் மாறியவர்கள் ஆகியோருக்குப் பற்களின் மஞ்சள் நிறத்தை மாற்றி வெள்ளை நிறத்துக்குக் கொண்டு வருவதற்கு ‘டூத் ஒயிட்டனிங்'( Tooth Whitening ) எனும் சிகிச்சைமுறை தற்போது செய்யப்படுகிறது.

இதை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பற்களின் நிறம் வெள்ளை நிறத்தில் நிலைத்து நிற்கும். அப்படிச் செய்யும்போது ஏற்படக்கூடிய மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் பற்கள் விரைவிலேயே சிதைந்து விடுவம் என்பது தான்.

வீட்டு மருத்துவம் :

வீட்டு மருத்துவம் :

மருத்துவ ரீதியாக சிகிச்சை எடுப்பதினால் பற்கள் சிதைந்து பற்களை எடுக்கும் சூழல் வந்துவிடுமோ அல்லது அதில் சேர்க்கப்படக்கூடிய கெமிக்கல்களால் ஏற்படும் மாற்றத்தினால் வேறு எதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்.

புகைப்பழக்கத்தை நிறுத்திய பிறகும் பற்களில் படிந்திருக்கும் கரையினால் தாழ்வுமனப்பான்மையில் சிக்கித் தவிப்போர் வீட்டிலேயே எளிய முறையில் பற்களின் கறையை போக்கிடலாம்.

ஆரஞ்சு பழத்தோல் :

ஆரஞ்சு பழத்தோல் :

புகைப்பிடிப்பவர்களின் பற்களில் படிந்திருக்கும் கறையை போக்குவதில் ஆரஞ்சு பழத்தோல் முக்கியப்பங்காற்றுகிறது.

ஆரஞ்சு பழத்தோலில் அதிகப்படியாக கால்சியம் மற்றும் விட்டமின் சி நிறைந்திருக்கிறது இவற்றில் இருக்கும் மைக்ரோ ஆர்கானிசம் பற்களில் படிந்திருக்கும் கறையை போக்கிடும். ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கச் செல்வதற்கு முன்னால் ஆரஞ்சுப் பழத்தோலைக் கொண்டு உங்கள் பற்களைத் தேய்த்திடுங்கள்.

ஹைட்ரஜன் பெராக்சைட் :

ஹைட்ரஜன் பெராக்சைட் :

இது பற்களில் இருக்கக்கூடிய பாக்டீரியாவை அழித்திடும். வெள்ளையாக்கூடிய எல்லா வகை ப்ராடெக்ட்களிலும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கப்பட்டிருக்கும். ஹைட்ரஜன் பெராக்சைடு பவுடர் ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும்.

கவனம் இந்த கெமிக்கல் கலந்த நீரை நீங்கள் குடித்து விடாதீர்கள். உங்களுக்கு சென்சிட்டிவ் பற்கள் என்றால் இதைப் பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் அதிகப்படியாக லாவ்ரிக் அமிலம் இருக்கிறது. இவை நம் பற்கள் மற்றும் வாய்ப்பகுதியில் இருக்கும் பாக்டீரியாவை அழிக்க வல்லது. தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்ப வேண்டும். நேரடியாக இப்படிச் செய்யலாம் அதற்கு பதிலாக ஒரு துணியில் தேங்காய் எண்ணெயை நனைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனைக் கொண்டு பற்களை துடைத்தெடுங்கள்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா :

சருமத்தில் ஏற்படக்கூடிய ஏராளமான பிரச்சனைகளை தீர்ப்பதில் பேக்கிங் சோடா முக்கியப் பங்காற்றுகிறது. இது பற்களையும் வெண்மையாக்க உதவிடுகிறது. இதிலிருக்கும் அல்கலைன் வாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாவை நீக்க வல்லது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் கூட பேக்கிங் சோடா இருக்கிறது. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரீ :

ஸ்ட்ராபெர்ரீ :

ஸ்ட்ராபெர்ரீயில் அதிகப்படியாக விட்டமின் சி இருக்கிறது இவை பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கிடும். இதிலிருக்கும் மாலிக் அமிலம் பாக்டீரியாவை அழிக்க வல்லது.

இரண்டு ஸ்ட்ராபெர்ரீ பழங்களை எடுத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அதனைக் கொண்டு பற்களை துடைக்கலாம்.

எலுமிச்சை :

எலுமிச்சை :

எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்திடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளித்து விடுங்கள்.

எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு சேர்த்து பற்களில் தேய்த்து அதன் பின்னர் வாயை கொப்பளித்து விடுங்கள். இதனை தினமும் செய்யலாம்.

வினிகர் :

வினிகர் :

இதிலிருக்கும் அமிலத்தன்மை பற்களின் கறையை நீக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து கொள்ளுங்கள். அதனைக் கொண்டு வாயை கொப்பளித்து துப்புங்கள்.

இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம். தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைத்திடும்.

ஆப்பிள் :

ஆப்பிள் :

ஆப்பிளை கடித்துச் சாப்பிட்டால் கூட பற்களின் கரையை போக்கிடலாம்.தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் நலனுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு.

இதிலிருக்கும் நார்ச்சத்து,மற்றும் அமிலத்தன்மை பற்களை பாதுகாக்கிறது.

வாழைப்பழத்தோல் :

வாழைப்பழத்தோல் :

வாழைப்பழத்தில் ஏராளமான நியூட்ரீசியன்கள் நிறைந்திருக்கிறது. இதிலிருக்கும் மக்னீசியம்,பொட்டாசியம் ஆகியவை பற்களை சுத்தப்படுத்தும். தினமும் இரண்டு நிமிடங்கள் வாழைப்பழத்தை கொண்டு தேய்த்தாலே போதுமானது.

இதனை காலை மற்றும் இரவு என இரண்டு வேலை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வாழைப்பழத்தோலைக் கொண்டு தேய்த்ததும் வாயை கொப்பளித்து விடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural remedies to Whiten Teeth For Smokers

Natural remedies to Whiten Teeth For Smokers