லிப்ஸ்டிக் இல்லாமலே உதடுகளுக்கு நிறமேற்ற முடியுமா?

Posted By: Aashika
Subscribe to Boldsky

லிப்ஸ்டிக் இல்லாமலே உதட்டின் வண்ணத்தை மாற்றலாம். லிப்ஸின் வண்ணங்கள் அழகை மட்டுமல்ல நம் உடலின் ஆரோக்கியத்தையும் அது பறைசாற்றுகிறது. ஆனால் சிலருக்கு உதடுகளில் டேன் வந்து பார்க்க கருப்பாக தெரியும்.

Are You Waiting For Rosy Lips?

சில எளிய முறைகளில் அதனை போக்க முடியும். நம் முகத்தை விட ஐந்து மடங்கு சென்சிட்டிவ்வான உதடுகளை நாம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். உதடுகளை ஆரோக்கியமாக பராமரிக்க சூப்பர் டிப்ஸ் இங்கே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் :

தேன் :

ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு கலந்து உதடுகளில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனை உதடுகளில் தடவும் போது லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

இதனால் உதட்டிற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம் உதடுகளில் உள்ள இறந்த செல்களை அகற்றிடும். தேன் உதட்டை பொலிவாக்கும். ஒரு நாளின் இரண்டு முறை இதனை செய்யலாம்.

 சர்க்கரை :

சர்க்கரை :

உதட்டின் இறந்த செல்களை அகற்றுவதில் சிறந்தது சர்க்கரை. அத்துடன் அது உதட்டிற்கு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். இரவு தூங்குவதற்கு முன்னால் சர்க்கரையை உதடுகளில் தேய்த்தால் காலையில் பிங்க் லிப்ஸ் கிடைத்திடும்.

அதிகப்படியான டேன் இருந்தால் இதனை தினமும் செய்தால் மட்டுமே பலனை எதிர்பார்க்க முடியும். மசாஜுக்கு கைக்கு பதிலாக பேபி பிரஸ் கூட பயன்படுத்தலாம்.

மாதுளம் பழம் :

மாதுளம் பழம் :

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த மாதுளம் பழத்தின் சாற்றை கூட இதற்கு பயன்படுத்தலாம். இது உடனடி நிவாரணம் கொடுத்திடும் .

ஒரு கைப்பிடியளவு சில மாதுளம் பழங்களை எடுத்துக்கொண்டு கைகளால் அழுத்த தேய்த்தாலே சாறு கிடைத்திடும் அதை அப்படியே உதடுகளில் தேய்க்கலாம். அப்படியில்லையினில் இதில் சிறிதளவு பால் கலந்தும் தேய்க்கலாம்.

ரோஜாப்பூ இதழ்கள் :

ரோஜாப்பூ இதழ்கள் :

ஒரு பவுலில் ரோஜா இதழ்களை போட்டு பாலில் ஊற வைத்திடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து அதில் வெஜிடபிள் க்ளிசரின், மற்றும் தேன் கலந்து உதடுகளில் தேய்த்து வர வேண்டும்.

ரோஜா இதழ்களை ஊற வைத்திடும் ஒரு மணி நேரம் இதனை ப்ரிட்ஜில் கூட வைக்கலாம். இதனை கழுவ வேண்டிய அவசியம் இல்லை அப்படியே விட்டுவிடலாம்.

உடனடியாக முடிவு தெரிய வேண்டும் என்றால் காட்டன் பஞ்சால் அந்த கலவை தொட்டு உதடுகளுக்கு லேசான மசாஜ் கொடுக்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கூட இதனைச் செய்யலாம்.

ரோஜாவில் ஆன்ட்டி ஏஜிங் சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இதனால் உதடுகளில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்த்திடலாம்.

பீட்ரூட் :

பீட்ரூட் :

பீட்ரூட் இயற்கையாகவே அடர் பிங்க் நிறத்தில் இருக்கும். சிறிய பீட்ரூட்டுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் வாஸ்லின் கலந்து ஒரு ஜாடியில் போட்டு ப்ரிட்ஜில் வைத்திடுங்கள்.

இரண்டு மணி நேரத்தில் பீட்ரூட் லிப் பால்ம் தயாராகிடும். இதனை தினமும் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

 சாக்லேட் :

சாக்லேட் :

சாக்லேட்டை சாப்பிட மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுத்தலாம். டார்க் சாக்லேட்டுடன் விட்டமின் ஈ கேப்சுயூலை சேர்த்து சூடாக்குங்கள்.

பின்னர் அது ஆறியதும் அதனை உதடுகளில் தேய்க்கலாம். உதடுகள் வறண்டு சுருக்கங்களுடன் இருந்தால் இதனால் நல்ல பலனை அடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: tips, beauty, lips
English summary

Are You Waiting For Rosy Lips?

Home Remedies to banish dark and chapped lips
Story first published: Wednesday, July 19, 2017, 10:21 [IST]
Subscribe Newsletter