இந்த டூத் பேஸ்ட் ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் எனத் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

வாய் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே ஒவ்வொருவரும் தங்களது வாய் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும்.

மேலும் ஆய்வுகள் பற்களில் உள்ள பற்காறைகள் இதய நோய்கள் வரும் அபாயத்தை அதிகரிப்பதாக கூறுகின்றன.

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த டூத் பேஸ்ட்டால் தினமும் இருமுறை பற்களைத் துலக்கினால் மட்டும் வாயின் ஆரோக்கியம் அதிகரிக்காது.

Reverse Gum Disease & Whiten Teeth With This Homemade Toothpaste!

சரி வேறு எந்த டூத் பேஸ்ட் தான் சிறந்தது? எதைக் கொண்டு பற்களைத் துலக்குவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்டை தயாரிக்கலாம். இது முழுமையாக இயற்கை பொருட்களைக் கொண்டு செய்யக்கூடியவை. சரி, இப்போது அந்த டூத் பேஸ்ட் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

புதினா எண்ணெய் - 1-2 துளிகள்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. ஆகவே இதனை டூத் பேஸ்ட் தயாரிப்பில் பயன்படுத்தும் போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது ஈறுகளில் உள்ள நோய்களை எளிதில் குணப்படுத்த உதவும்.

 தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் மற்றும் புதினா எண்ணெய்களை ஒன்றாக கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் எப்போதும் போன்று இதைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.

 குறிப்பு

குறிப்பு

இந்த பேஸ்ட்டைக் கொண்டு பற்களைத் துலக்கும் போது, நுரை ஏதும் வராது. அதற்காக இதைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம். மேலும் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்திய பின், அது எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reverse Gum Disease & Whiten Teeth With This Homemade Toothpaste!

Here is one natural homemade toothpaste to reverse gum disease and whiten teeth.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter