Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
Exclusive: மழைக்காலத்தில் பாதங்களைப் பாதுகாக்க சில வீட்டுக் குறிப்புகள்.. என்ன சொல்கிறார் அழகு கலை நிபுணர்?
நமது ஆரோக்கியம், தோல் மற்றும் முடி போன்றவற்றில் கவனம் செலுத்தாத ஆளே கிடையாது.. ஆனால் கால்களைப் பற்றி யாரும் கவனத்தில் கொள்வது இல்லை.. குறிப்பாக பெண்கள். அதற்கு காரணம் நேரமின்மை.. அதிக வேலையாகும்.. எனவே, சந்தையில் கிடைக்கும் சில பிரத்யேக கிரீம்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
உண்மையில் மழைக்காலத்தில் சாலைகளில் சேறும் சகதியுமாக இருக்கும். இதனை தவிர்க்க முடியாது. இதனால் நம் கால்கள் தொற்று மற்றும் ஒவ்வாமைக்கு ஆளாகின்றன. கால்கள் உடலின் மிக முக்கியமான பகுதியாகும், எனவே அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சென்னையில் உள்ள சாரா பியூட்டி ஸ்டுடியோவின் அழகு கலை நிபுணரான பியூட்டிசன் தேவிபாலா இது குறித்து கூறுகையில், "மழையில் நடப்பது நம் அனைவருக்கும் பிடிக்கும்.. அது கொஞ்சம் ஜாலியாகவே இருக்கும்.. ஆனால் அதன் பிறகு நமது கால் விரல்களில் அரிப்பு ஏற்படும். அதில் பூஞ்சைகள் உருவாகி சேற்று புண்கள் ஏற்படும் வய்ப்புகள் அதிகம்.. மழைக்காலத்தில் கால் விரல் இடுக்குகளில் உண்டாகும் மிக முக்கியப் பிரச்னையாக இந்த சேற்றுப் புண்களை கூறலாம். மழைக்காலம் மட்டுமல்ல... எப்போதும் ஈரத்திலேயே புழங்குபவர்களுக்கும் சேற்றுப் புண்கள் உண்டாகலாம். அத்துடன் பித்த வெடிப்பு, கால் ஆணி, நகச்சுற்று ஆகிய தொற்றுகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
அதனால் மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது அவசியம் என்கிறார் பியூட்டிசன் தேவிபாலா.. பாதங்களை எளிமையாக பராமரிக்க சில வீட்டு வைத்திய குறிப்புகள் பற்றி இந்த பதிவில் என்னென்ன கூறியுள்ளார் என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
மழைக்காலத்தில் கால் தொற்றுகளை தடுப்பது எப்படி? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ” வெறுங்காலுடன் நடக்காதீர்கள் என்றார். ஒரு போதும் கால்களில் செருப்பு இல்லாமல் நடக்காதீர்கள். அது தொற்றுக்கு வழி வகுக்கும்.. அதிலும் மழைகாலத்தில் கண்டிப்பாக தொற்று வந்து பாதங்களை தாக்கும்.. அத்துடன் உங்கள் கால்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்” என்றார்..
அதனைத் தொடர்ந்து பேசியவர், ”உங்கள் கால்கள் அழுக்காகும் போதெல்லாம், அவற்றை சரியாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பாக்டீரியா மற்றும் அழுக்குகளை அகற்ற லேசான சோப்பைப் பயன்படுத்தவும். மேலும் நல்ல தரமான பாத பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தவும். உங்கள் சருமம் வறண்டதாக உணர்ந்தால், பியூமிஸ் ஸ்டோன் கொண்டு ஸ்க்ரப் செய்யலாம்” என்றார் பியூட்டிசன்.
மேலும்,”உங்கள் கால்களை உலர வைக்க வேண்டும் என்றார்.. நீங்கள் தொற்றுநோயைத் தவிர்க்க விரும்பினால், மழைக்காலத்தில் உங்கள் கால்களை உலர வைப்பது உங்கள் முதன்மையான வேலையாக இருக்க வேண்டும். அதிக ஈரப்பதமாக இருக்க கூடாது..நகங்களை சுத்தமாகவும் குறுகியதாகவும் வைத்திருப்பது நல்லது. அத்துடன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் பருவமழைக்கு ஏற்ற காலணிகளை அணிவதுதான்” என்று கூறினார்.
சரி, கால்களில் தொற்று ஏற்பட்ட பிறகு அதனை குணப்படுத்த சிம்பிள் வீட்டு வைத்தியம் இருக்கா? என்று பியூட்டிசனிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர், தொற்றுகளால் பாதிக்கப்ப்பட்ட உங்களின் பாதங்களை குணப்படுத்த எளிமையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
அவைகள் குறித்து அவர் கூறியதாவது,
1. மருதாணி
எந்நேரமும் தண்ணீரிலியே புழங்கும் பெரும்பாலான மக்களின் கால் விரல் இடுக்குகளில், ஒரு வகையான பூஞ்சைத் தொற்று காரணமாக வெள்ளை நிறத்தில் அரிப்புடனும் எரிச்சலுடனும், கடுமையான வலி தோன்றும்.. அப்போது உங்கள் விரல்களுக்கு இடையே உள்ள புண்களில் மருதாணியை தடவி, அது முற்றிலும் காய்ந்து போகும் வரை விட்டு, குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.. பின்னர் அதனை ஒரு காட்டன் துண்டுக் கொண்டு உலர வைக்கவும்.
2. மஞ்சள்
மஞ்சள் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு பண்பை கொண்டது, பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளின் அடிப்படையில் மஞ்சள் மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதையொட்டி, பூஞ்சை தொற்றுகளிலிருந்து விடுபட மஞ்சள் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய முறைப்படி மஞ்சளை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, காய்ந்ததும் கழுவ வேண்டும். விரைவில் நல்ல பலனைக் காணலாம்.
3. எலுமிச்சை சாறு மற்றும் வினிகர்
எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் கலவையை உங்கள் கால்களில் உள்ள அரிப்பு உள்ள இடங்களில் தடவுவது நல்லது.
4. வேப்பம் இலை
நீங்கள் கால்விரல்களுக்கு இடையில் சிறிது வேப்பம் சாற்றை அப்ளை செய்து மசாஜ் செய்யலாம். இந்த முறை அரிப்பு, வெடிப்பை சரிச்செய்யும்.. விளையாட்டு வீரரின் கால் பிரச்சனை முக்கியமாக கால்விரல்களுக்கு இடையில் உள்ள பூஞ்சையை சரிச்செய்யும். முக்கியமாக காலணிகளை அதிகம் அணிபவர்களுக்கு வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக இந்த பூஞ்சை எழுகிறது. இந்த பிரச்சனையை குறைக்க வேப்பம் இலை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
5. புதினா
புதினாவை இயற்கையான டியோடரண்டாகப் பயன்படுத்தலாம். மேலும், இது நல்ல கிருமி நாசினி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இந்த மழைக்காலத்தில், புதினா அடிப்படையிலான கிரீம்கள், ஃபேஸ் வாஷ்கள் அல்லது ஸ்க்ரப்களைப் பயன்படுத்தலாம்..
6. தேங்காய் எண்ணெய்
பாதிக்கப்பட்ட பகுதியை இறுக்கமான ஆடை அல்லது கட்டுகளால் மூட வேண்டாம்.. நல்ல காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது..
உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து கழுவி விட்டு அதில்
பூஞ்சை தொற்றுகளைத் தடுக்க தேங்காய் எண்ணெயை அப்ளை செய்யவும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், மாதம் ஒருமுறையாவது கால்களுக்கு பெடிக்யூர் செய்வது சிறந்தது என்றார். மேலும் உங்கள் கால் தொற்றுக்கு மருத்துவ சிகிச்சை முக்கியம்.. குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது என்றாலும், உங்களுக்கு கால் தொற்று ஏற்பட்டால், விரைவில் சிகிச்சை பெறுவது நல்லது. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடாதீர்கள். உடனே மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்” என்று கூறினார்.



Click it and Unblock the Notifications
