Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கணுமா? இந்த சிம்புள் வீட்டு டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்..!
சருமத்தில் அழுக்கு வருவது இயற்கையான விஷயம்... சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு, நீர் பாதிப்பு, வெயிலின் தாக்கம், புகை என பல்வேறு காரணங்களால் உங்க சருமம் அழுக்காகிறது. குறிப்பாக நாம் பார்க்க முடியாத சில இடங்களில், அதாவது கழுத்து, தொண்டை, மூட்டு, அக்குள், முழங்கை, முழங்கால், முதுகு போன்ற இடங்களில் அழுக்கு வியர்வையாக படிந்து இருக்கும்..
இவற்றை முறையாக சுத்தம் செய்யாவிட்டால், அப்பகுதிகள் கரடுமுரடானதாகவும், அழுக்காகவும் காட்சியளிக்கும். நாம் தினமும் குளிக்கும்போது இந்த பகுதிகளையும் சேர்த்து சுத்தமாக தேய்த்து குளிக்க வேண்டும்.

மேலும் ஸ்க்ரப்பிங், எக்ஸ்ஃபோலியேட்டிங் மற்றும் க்ளென்சிங் ஆகியவை சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக அனைத்து விதமான கிளீனிங் புராடட்டுகள், ஸ்க்ரப்பிங்ஸ் என பல்வேறு பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால்,அந்த ரசாயனப் பொருட்களுக்குப் பணத்தைச் செலவழிக்காமல், நம் வீட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பக்கவிளைவுகள் இல்லாத, பொருட்களைக் கொண்டு சருமத்தை சுத்தம் செய்யலாம்..
சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் இயற்கையான வைத்தியங்கள்..
1. எண்ணெய் மசாஜ்
எண்ணெய்யில் மசாஜ் செய்வது சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை மிக எளிதாக நீக்குகிறது. முதலில் நல்லெண்னெய் அல்லது ஆலிவ் எண்ணெய் மூலம் உங்கள் சருமத்தை மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பின் 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க வேண்டும். விரல்களால் நன்றாக தேய்ப்பதன் மூலம், சருமத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் எளிதில் வெளியேறும்.
2. பாடி லோஷன்
முதலில் கைகளை தண்ணீரில் கழுவவும், பின்னர் கைகள் மற்றும் அழுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடி லோஷனைப் பயன்படுத்தவும். நகங்களைப் பயன்படுத்தி அழுக்கை நன்கு தேய்க்கவும். பின்னர் குளித்துவிட்டு வந்தால் அழுக்குகள் போய்விடும்..
3. ஈரமான துண்டு
சருமத்தில் உள்ள அழுக்குகளை இயற்கையான முறையில் அகற்ற இது ஒரு எளிய வழி. முதலில் டவலை நனைத்து, பின் தண்ணீர் முழுவதையும் பிழிந்து, அந்த டவலால் உடல் முழுவதும் துடைக்க வேண்டும்.. அப்போது லேசாக அழுத்தி, தோலில் துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறும். அதிகமாக தேய்க்க வேண்டாம். இல்லையெனில் சருமம் வீக்கமடையும். கிராமங்களில் இன்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் கூட இந்த முறையில்தான் உடலை துடைப்பார்கள்..
4. எலுமிச்சை சாறுடன் ஸ்க்ரப் செய்தல்
எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் பொருளாகும் . இது சருமத்தை சுத்தப்படுத்துகிறது, மேலும் தெளிவாகவும் பளப்பளப்பாகவும் வைக்கிறது. எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பின்னர் தோலில் மசாஜ் செய்யவும். சருமத்தை வெண்மையாக்குவது மட்டுமின்றி அழுக்குகளையும் நீக்குகிறது.
5. சூடான நீரில் குளிப்பது
சூடான நீரில் குளிப்பது தோலின் துளைகளைத் திறக்கும். அப்போது, சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவது எளிதாகும். அதற்கு குளித்த பின் தரமான ஸ்க்ரப்பிங் செய்வதன் மூலம் தெளிவான சருமத்தைப் பெறலாம்.
6. ஓட்ஸ்
ஓட்ஸ் ஸ்க்ரப்பிங் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. ஓட்மீலுடன் சிறிது பாலைக் கலந்து தோலில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து மெதுவாக ஸ்க்ரப் செய்து வெந்நீரில் கழுவவும்.
7. சர்க்கரை பாகு
சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற மற்றொரு வழி சர்க்கரை ஸ்க்ரப் ஆகும். ஈரமான சருமத்தில் சிறிது சர்க்கரையை தடவினால் சருமம் தெளிவாகும்..



Click it and Unblock the Notifications
