Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
ரோஜா இதழ் போன்ற அழகான மற்றும் மென்மையான உதடுகள் வேண்டுமா? இதில் ஒன்றை தினமும் உதட்டில் தடவுங்க...!
இயற்கையாகவே, நம் உதடுகள் சிவப்பு நிறத்தில் தோன்றும். இத்தகைய வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில், மென்மையான மற்றும் முழுமையான தோற்றமுடைய உதடுகள் ஆரோக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மரபியல் முதல் வாழ்க்கை முறை மாற்றங்கள் வரை பல்வேறு காரணிகளால் நமது உதடுகளின் தோற்றமும் நிறமும் மாறுகிறது என்பதே உண்மை.
காரணம் எதுவாக இருந்தாலும், சூரிய ஒளி, நிகோடின் கறைகள் (புகைபிடிப்பதால்), ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மருத்துவக் காரணிகளால் நிறம் மாறிய உதடுகள் எப்போதும் அழகாக இருக்காது. உங்கள் உதடுகளில் தோன்றும் இத்தகைய கருமையான திட்டுகள் அல்லது கோடுகளால் நீங்கள் சங்கடமாக உணர்ந்தால், அதனை சரிசெய்து மென்மையான மற்றும் இளஞ்சிவப்பான உதடுகளை பெற உதவும் வீட்டு வைத்தியங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

எலுமிச்சை
சிட்ரஸ் பழத்தோல் மெலனின் தடுப்பானாக செயல்படலாம். தினமும் இரவு ஒரு எலுமிச்சையை எடுத்து இரண்டாக வெட்டி உங்கள் உதடுகளின் மேல் சாறு நிறைந்த பகுதியை மெதுவாக தேய்க்கவும். மறுநாள் காலையில், உங்கள் உதடுகளை குளிர்ந்த நீரில் கழுவவும். நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறும் வரை இதனை தினமும் செய்யவும். ஒரே மாதத்தில் உங்கள் அடர் நிற உதடுகள் இளஞ்சிவப்பாக மாறிவிடும்.
எலுமிச்சை மற்றும் சர்க்கரை
உறங்கச் செல்வதற்கு முன், எலுமிச்சை பழத்தை வெட்டி சர்க்கரையில் தடவவும். இப்போது, இந்த சர்க்கரை கலந்த எலுமிச்சைப் பழத்தைக் கொண்டு உங்கள் உதடுகளில் நன்றாக தேய்க்கவும். மறுநாள் காலையில், உங்கள் உதடுகளை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பார்க்கும் வரை ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இதை மீண்டும் மீண்டும் செய்யவும்.
மஞ்சள்
ஆய்வுகளின் படி, மஞ்சள் ஒரு மெலனின் தடுப்பானாக செயல்படலாம். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து, அதில் 1 தேக்கரண்டி பால் மற்றும் போதுமான மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். உங்கள் விரல்களைப் பயன்படுத்தி உங்கள் உதடுகளில் இந்த பேஸ்டைத் தேய்க்கவும். அதனை நன்றாக ஊறவைத்து அதன்பின் குளிர்ந்த நீரில் கழுவவும். பின்னர் உங்கள் உதடுகளை உலர்த்தி மாய்ஸ்சரைசர் தடவவும்.
கற்றாழை
ஆய்வுகளின் படி, கற்றாழையில் மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் ஒரு கலவை உள்ளது. கற்றாழை ஜெல்லின் மெல்லிய அடுக்கை தினமும் ஒரு முறை உங்கள் உதடுகளில் தடவவும். அது காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது நீங்கள் விரும்பிய முடிவுகளை விரைவில் அளிக்கும்.
மாதுளை
மாதுளை சாறு சருமத்தின் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஒளிரச் செய்யும் திறன் கொண்டது. ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து, அதில் 1 தேக்கரண்டி மாதுளை விதைகள், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 1 தேக்கரண்டி புதிய பால் கிரீம் கலந்து பேஸ்ட்டைத் தயாரிக்கவும். இந்த பேஸ்ட்டை எடுத்து உங்கள் உதடுகளில் மூன்று நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து, பின்னர் உங்கள் உதடுகளை குளிர்ந்த நீரில் கழுவவும்.
தேங்காய் எண்ணெய்
உங்கள் விரல் நுனியில் மிகச் சிறிய அளவு தேங்காய் எண்ணெயை எடுத்து உங்கள் உதடுகளின் மேல் சமமாக தடவவும். இதை ஒரு நாளைக்கு பல முறை செய்யலாம் மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு செய்வது கூடுதல் பலன்களை அளிக்கும்.
ஸ்ட்ராபெர்ரி
நடுத்தர அளவிலான ஐந்து ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்தி அரைத்து மற்றும் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை உறங்கும் போது உதடுகளில் தடவி, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவவும்.
பாதாம்
ஒரு சிறிய கிண்ணத்தில், 1 டேபிள் ஸ்பூன் பால் கிரீம் மற்றும் போதுமான பாதாம் தூள் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டை உங்கள் உதடுகளில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். சுமார் ஐந்து நிமிடங்கள் உலர விடவும். உங்கள் உதடுகளை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை அடையும் வரை தினமும் இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.
பீட்ரூட்
பீட்ரூட்டை நன்றாக பேஸ்டாக அரைத்து, இந்த கலவையை வாரத்திற்கு இரண்டு முறை உதடுகளில் தடவவும். அதை 5 முதல் 10 நிமிடங்கள் உலர வைக்கவும், பின்னர் தண்ணீரில் கழுவவும். உங்கள் உதடுகள் சுத்தமாகவும் உலர்ந்ததும், பெட்ரோலியம் ஜெல்லியின் மெல்லிய அடுக்கைப் உதட்டின் மேல் பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
