Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
முடி அதிகமா கொட்டுதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. உடனே நின்னுடும்..
Hair Loss Awareness Month 2025: உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான அழகு தொடர்பான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. ஒருவர் தலைமுடி உதிர்வதை ஆரம்பத்திலேயே கவனித்து அதை தடுக்க முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், பின் நாளடைவில் அது வழுக்கை தலைக்கு வழிவகுத்துவிடும்.
இப்படிப்பட்ட தலைமுடி உதிர்வை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முடி உதிர்தல் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது.

நீங்களும் இப்படி தலைமுடி உதிர்வால் அவதிப்படுகிறீர்களா? தலைமுடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், மருத்துவ நிலைமைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், மன அழுத்தம் மற்றும் தலைமுடி பராமரிப்பு நடவடிக்கைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதில் ஊட்டச்சத்து குறைபாடுகள் மூலம் சந்திக்கும் தலைமுடி உதிர்வை உணவுகளின் மூலம் தடுக்கலாம்.
இந்த தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சில எளிய உணவுகள் குறித்து சரும நிபுணரான டாக்டர் மோனிஷா அரவிந்த் தனது சமூகத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த உணவுகள் எவையென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. கீரை
கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தலைமுடி உதிர்வை சந்திப்பவர்கள், அதை தடுக்கவும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், கீரையை வாரத்திற்கு 3 முறை உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மோனிஷா கூறினார்.
2. முட்டை
முட்டையின் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. எனவே முடி உதிர்வை சந்திப்பவர்கள், தினமும் ஒரு முட்டையை, அதுவும் மஞ்சள் கருவுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
3. எள்ளு விதைகள்
எள்ளு விதைகளில் தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பிற்கு நன்மை விளைவிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. தலைமுடி உதிர்வால் அதிகம் அவதிப்படுபவர்கள், அதைத் தடுக்க, தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை எந்த உணவிலும் சேர்த்தோ அல்லது 1 எள்ளு உருண்டையையோ சாப்பிடலாம் என்று டாக்டர் மோனிஷா கூறினார்.
4. பட்டை
மசாலா பொருட்களுள் ஒன்றான பட்டையும் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். முக்கியமாக இதில் உள்ள சின்னமல்டிஹைடு இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இப்படிப்பட்ட பட்டை பொடியை தினசரி உணவில் சிறிது தூவியோ அல்லது நீரில் பட்டை தூளை கலந்து குடிக்கவோ செய்யலாம் என்று டாக்டர் கூறினார்.
5. ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள்
தலைமுடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால் ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் ஒன்று சாப்பிடலாம். அதுவும் பூசணிக்காய், ஆரஞ்சு, முலாம் பழம் போன்றவற்றை சாப்பிடலாம் என்று டாக்டர் மோனிஷா கூறினார்.
6. நட்ஸ்
முடி உதிர்தல் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் தினமும் ஒரு கையளவு நட்ஸை சாப்பிடுவது நல்லது. அதுவும் ஒரே விதமான நட்ஸாக இல்லாமல், அதாவது வெறும் பாதாமை மட்டும் ஒரு கையளவு சாப்பிடாமல், பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா, முந்திரி என அனைத்தும் கலந்து ஒரு கையளவு நட்ஸை சாப்பிட வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் தலைமுடி உதிர்வால் சிரமப்பட்டு வந்தால், அதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வர முயற்சி செய்யுங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

