For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்லர் போகாமலேயே அழகான தலைமுடி வேண்டுமா? அப்ப வீட்லயே இந்த ஹேர் மாஸ்க் போடுங்க..

தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்க விரும்பினால், பார்லருக்கு செல்வதற்கு பதிலாக இயற்கை பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள்.

|

தற்போது நமது சுற்றுச்சூழல் மாசடைந்து உள்ளதால், சருமம் மட்டுமின்றி தலைமுடியும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தலைமுடி அதிகளவில் பாதிக்கப்படுகிறது. எனவே தலைமுடிக்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். பலர் தங்கள் தலைமுடியைப் பராமரிக்க பார்லருக்கு செல்வார்கள். ஆனால் பார்லரில் கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த கெமிக்கல் தலைமுடிக்கு ஊட்டத்தை அளிப்பதற்கு பதிலாக அழிக்கவே செய்யும்.

Try These Hair Masks At Home To Avoid Going To The Salon

எனவே தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்க விரும்பினால், பார்லருக்கு செல்வதற்கு பதிலாக இயற்கை பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் மாஸ்க்குகள் தலைமுடிக்கு வேண்டிய சத்துக்களை வழங்குவதோடு, அதன் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை-தயிர் மாஸ்க்

முட்டை-தயிர் மாஸ்க்

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. மறுபுறம் தயிர் தலைமுடியின் வளர்ச்சியைப் போக்கி, மென்மையாக பட்டுப் போன்று வைத்துக் கொள்ள உதவும். இப்படிப்பட்ட இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து பயன்படுத்தும் போது, முடி ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு ஒரு முட்டையை பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும் படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

ஜெலட்டின்-ஆப்பிள் சீடர் வினிகர் மாஸ்க்

ஜெலட்டின்-ஆப்பிள் சீடர் வினிகர் மாஸ்க்

ஜெலட்டினில் கெரட்டின் என்னும் புரோட்டீன் உள்ளது. இது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இந்த ஜெலட்டின் பவுடரை நீரில் கலந்து பேனில் போட்டு நன்கு கலந்து அடுப்பில் வைத்து 5-10 நிமிடம் சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். ஜெலட்டின் நன்கு குளிர்ந்ததும், அதில் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து, பின் அதை தலையில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

மயோனைஸ்-முட்டை மாஸ்க்

மயோனைஸ்-முட்டை மாஸ்க்

மயோனைஸ் மற்றும் முட்டை ஆகிய இரண்டிலுமே புரோட்டின் அதிகம் உள்ளது. இந்த ஹேர் மாஸ்க் சேதமடைந்த தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த மாஸ்க் போடுவதற்கு ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன், 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் தடவி 30-40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பாலில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன. இது ஒரு நல்ல முடிக்கு கண்டிஷனராக இருப்பதோடு மட்டுமின்றி, முடியின் புரோட்டீனை தக்க வைக்கவும் உதவுகின்றன. கூமுதலாக, இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவிக்கிறது. அதற்கு தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் சுடுநீரில் நனைத்த துணியால் தலைமுடியை சுற்றி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

வாழைப்பழ-அவகேடோ மாஸ்க்

வாழைப்பழ-அவகேடோ மாஸ்க்

வாழைப்பழத்தில் நேச்சுரல் ஆயில், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் நிரம்பியுள்ளன. இவை அனைத்துமே ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் அவகேடோவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளன. இவை தலைமுடியின் தரம் மற்றும் அமைப்பை மேம்படுத்துகின்றன. எனவே வாழைப்பழத்தையும், அவகேடோ பழத்தின் தசைப்பகுதியையும் நன்கு அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Try These Hair Masks At Home To Avoid Going To The Salon

Here are some hair masks you can try at home to avoid going to the salon. Read on to know more...
Story first published: Friday, December 2, 2022, 19:46 [IST]
Desktop Bottom Promotion