Just In
- 47 min ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 1 hr ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 11 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 12 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா? அப்ப 'இந்த' ஐந்து விஷயங்கள மட்டும் செஞ்சா... முடி வேகமாக வளருமாம்!
முடி உதிர்தல் என்பது மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு வாழ்க்கை முறைப் பிரச்சனையாகும். இது மழைகாலம், கோடைகாலம், நோயுற்ற நிலைமைகள் மற்றும் குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லைக்கு வழிவகுக்கும். இந்த காரணிகளுக்கு மேலதிகமாக, கோவிட்-19 தொற்றுநோய் தற்போதைய காலங்களில் அனைத்து வயதினருக்கும் முடி உதிர்தலின் அளவை அதிகரிக்க வழிவகுத்தது. பிந்தைய கோவிட் விளைவுகளில் அதிகப்படியான முடி உதிர்தல் மற்றும் முடியின் தரம் குறைதல் பிரச்சனைகள் உள்ளன. வைட்டமின் ஏ, புரதம், துத்தநாகம், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உள்ளடக்கிய ஒரு நல்ல உணவு ஆரோக்கியமான முடிக்கான முதல் படியாகும்.
இது தவிர, சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்கியமான முடியையும் சருமத்தையும் பெறலாம். யோகா ஒரு சக்திவாய்ந்த செயலாகும். இது முடி ஆரோக்கியம் உட்பட பல நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் தினசரி அடிப்படையில் பயிற்சி செய்வது முடி மற்றும் தோலுக்கு அதிசயங்களைச் செய்யும். முடி உதிர்வைக் குறைத்து ஆரோக்கியமான முடியைப் பெற உதவும் ஐந்து யோகா ஆசனங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வஜ்ராசனம்
செரிமானம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, வஜ்ராசனம் பரிந்துரைக்கப்படுகிறது. இரைப்பை பிரச்சினைகள் மற்றும் பிற செரிமான கோளாறுகள் இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதன் மூலம் தீர்க்கப்படுகின்றன. இது முடி வளர்ச்சியை பெரிதும் ஊக்குவிக்க உதவுகிறது மற்றும் உணவுக்குப் பிறகு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இந்த ஆசனம் செய்வது செரிமானத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது. அப்படியே இது படிப்படியாக முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

அதோ முக ஸ்வனாசனா
பன்னிரண்டு போஸ் கொண்ட சூரிய நமஸ்காரம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான சிறந்த யோகா ஆசனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதோ முக ஸ்வனாசனா இரத்த ஓட்டம் மற்றும் உச்சந்தலையில் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது முடி வளர்ச்சியை நன்கு ஊக்குவிக்க உதவுகிறது. இந்த ஆசனத்தை தினமும் சிறிது நேரம் செய்து வந்தால் முடி உதிர்வை வெகுவாக குறைக்கலாம்.

சிரசாசனம்
சிரசாசனம் அல்லது ஹெட்ஸ்டாண்ட் ஆசனம் ஒரு தந்திரமான போஸ். இந்த நிலைப்பாடு தலைக்கு இரத்த ஓட்டத்தை அனுமதிக்கிறது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வழுக்கையை குறைக்கவும் உதவுகிறது. சிரசாசனம் செய்வதால் முடி உதிர்வதும் குறைகிறது மற்றும் முடியின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆரம்பத்தில், இந்த ஆசனத்தைச் செய்ய உங்களுக்கு வேறொருவரின் ஆதரவு தேவைப்படலாம்.

மத்ஸ்யாசனம்
மீன் போஸ் என்றும் அழைக்கப்படும் இந்த ஆசனம் நீண்ட, வலுவான மற்றும் பளபளப்பான மேனியுடன் இருக்க விரும்புபவர்கள் தராளமாக முயற்சி செய்யலாம். மீன் போஸ் தலையை பின்னோக்கி இழுப்பதை உள்ளடக்கியது. இது மீண்டும் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கிறது. இந்த ஆசன பயிற்சி தினமும் செய்வதன் மூலம், முடி உதிர்தல் மட்டுமின்றி, பெரும்பாலான முடி பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.

பலாசனா
இந்த ஆசனம் மன அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இந்த பிரச்சனை இரண்டும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். பலாசனத்தில் உட்கார்ந்துகொள்வதன் மூலம், தலை மற்றும் முழு உடலிலும் சிறந்த இரத்த ஓட்டம் காரணமாக வயிற்றை சுருக்கி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் ஏழு முதல் பத்து முறை பலாசனாவை குறைந்தது எட்டு வினாடிகள் பயிற்சி செய்வது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.