For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரட்டை தலை மாதிரி உங்க முடி இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை யூஸ் பண்ணுங்க சரியாகிடும்!

முட்டையின் வெள்ளை நிற ஹேர் மாஸ்க்குகள் உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்யவும், உங்கள் முடியை வலுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு தொல்லையை போக்கவும் உதவுகிறது.

|

தலைமுடி நாம் அழகாக தோற்றமளிக்க உதவுவதோடு, நம் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அனைவரும் நம் தலைமுடிக்கு சிறந்த பராமரிப்பை வழங்க விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலான நாட்களில் அதற்கான நேரம் யாருக்கும் கிடைப்பதில்லை. பல பொருட்களைக் கலந்து, தடவி, அது காய்ந்து போகும் வரை காத்திருந்து, கழுவி வருவது உங்களுக்கு சரியான பலனை கொடுத்திருக்காது. எனவே, நீங்கள் நிறைய கலவை மற்றும் தயாரிப்புகளை செய்ய வேண்டாம். சில மூலப் பொருட்களை உங்கள் முடியில் பயன்படுத்தினால் போதும்.

one ingredient hair masks for frizzy dull hair in tamil

அந்த மூலப்பொருள் மூலம் எளிதான மற்றும் விரைவான ஹேர் மாஸ்க்குகளை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். உதிரும் முடி மற்றும் மந்தமான கூந்தலுக்கான ஒற்றை மூலப்பொருள் ஹேர் மாஸ்க்குகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மயோனைஸ்

மயோனைஸ்

சாண்ட்விச், க்ரில் மற்றும் தந்தூரியோடு சாப்பிடுவதற்கு மயோனைஸ் பாட்டிலை வைத்திருப்போம். எனவே, கண்டிஷனிங் செய்ய வேண்டிய கூந்தல் உதிர்ந்திருந்தால், மயோனைஸ் உங்களுக்கு உதவும். குறிப்பாக உங்களுக்கு சுருள் அல்லது அலை அலையான முடி இருந்தால், மயோனைஸை ஈரப்பதமூட்டும் ஃப்ரிஸ்-டேமராகப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

முடிக்கு மயோனைஸை பயன்படுத்துவது எப்படி?

முடிக்கு மயோனைஸை பயன்படுத்துவது எப்படி?

உங்கள் தலைமுடி ஈரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உச்சந்தலையில் இருந்து தொடங்கி, ஒரு கப் மயோனைஸை உங்கள் முடியில் தடவுங்கள். தேவைப்பட்டால், உங்கள் தலைமுடி சமமாக மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அதிக மயோனைஸைப் பயன்படுத்துங்கள்.20 நிமிடங்கள் காத்திருக்கவும், பின்னர் நன்கு முடியை அலச வேண்டும்.

புதிய கிரீம்

புதிய கிரீம்

ஃப்ரெஷ் கிரீம் உலர்ந்த கூந்தலுக்கு மற்றொரு சிறந்த மாய்ஸ்சரைசர். வெயிலால் மற்றும் ரசாயனப் பொருட்களால் சேதமடையும் முடியை ப்ரெஷ் க்ரீம் மூலம் காப்பாற்றலாம். ஃப்ரெஷ் கிரீம் நீரேற்றத்தை அதிகரிப்பதுடன், உங்கள் முடி உடைவதையும் தடுக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற இயற்கை மூலப்பொருளை உங்கள் தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு வழக்கத்தில் எப்படி எளிதாக இணைத்துக் கொள்ளலாம் என்பது இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

முடிக்கு ஃப்ரெஷ் க்ரீம் பயன்படுத்துவது எப்படி?

முடிக்கு ஃப்ரெஷ் க்ரீம் பயன்படுத்துவது எப்படி?

ஹேர் மாஸ்க் தயாரிக்க, 1/2 கப் ஃப்ரெஷ் மலாய் அல்லது ஃப்ரெஷ் க்ரீமை எடுத்து, அதை தாராளமாக உங்கள் தலைமுடியில் தடவவும். அதை ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து, பின்னர் மெதுவாக கழுவவும்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முட்டை பிடிக்கும். இது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. முட்டையின் வெள்ளைக்கரு முடி உதிர்வை தடுக்கவும், சேதத்தை சரிசெய்யவும் ஹேர் மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம். கூடுதலாக, முட்டையின் வெள்ளை நிற ஹேர் மாஸ்க்குகள் உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்யவும், உங்கள் முடியை வலுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு தொல்லையை போக்கவும் உதவுகிறது.

முட்டையின் வெள்ளைக்கருவை எவ்வாறு பயன்படுத்துவது?

முட்டையின் வெள்ளைக்கருவை எவ்வாறு பயன்படுத்துவது?

இரண்டு முட்டையை உடைத்து வெள்ளைக்கருவை தனியாக பிரித்து எடுக்கவும். வெள்ளைக்கருவில் இருந்து நுரை கலந்த கலவையை செய்து, தேவைக்கேற்ப முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். அதை 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், முடியை நன்கு அலச வேண்டும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் உங்கள் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மிகவும் மென்மையாகவும், மெல்லும் தன்மையுடனும் இருக்கும் வாழைப்பழம் உங்கள் தலைமுடியை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுவதற்கு காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே பொடுகு மற்றும் உலர்ந்த கூந்தலுக்கு வாழைப்பழம் ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும்.

வாழைப்பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

வாழைப்பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

ஒரு கிண்ணத்தில், உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு பழுத்த வாழைப்பழங்களை ஒன்றாக பிசைந்து கொள்ளவும். உங்கள் தலைமுடியில் தடவுவதற்கு முன், அது ஒரு பேஸ்ட் கலவையில் இருக்க வேண்டும். இல்லையெனில், அதை அகற்றுவது கடினமாக இருக்கலாம். மென்மையாக்கப்பட்ட பிறகு உங்கள் தலைமுடி முழுவதும் பயன்படுத்துங்கள். 20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பூ மற்றும் டவலில் உலர வைக்கவும். பின்னர் உங்கள் முடியை அலசவும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பால் சேதமடைந்த முடிகள் உடைவதிலிருந்து இருந்து ஊட்டமளித்து பாதுகாக்கும். ஆனால் அது உங்கள் முடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும். ஏனெனில் தேங்காய்ப் பாலில் உள்ள லாரிக் அமிலம் முடியின் வேர்களில் ஊடுருவி உள்ளே இருந்து ஊட்டச்சத்தை அளிக்கிறது.

தலைமுடிக்கு தேங்காய் பாலை எப்படி பயன்படுத்துவது?

தலைமுடிக்கு தேங்காய் பாலை எப்படி பயன்படுத்துவது?

தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் புதிய தேங்காய் பாலை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் தடவுங்கள். இந்த ஹேர் மாஸ்க்கை இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து, காலையில் உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பூ போட்டு கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

one ingredient hair masks for frizzy dull hair in tamil

Here are we are talking about the one ingredient hair masks for frizzy dull hair in tamil.
Desktop Bottom Promotion