Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்..
நரைமுடி அதிகமா இருக்கா? அப்ப இந்த ஹேர் பேக்கை வாரத்துக்கு 2 முறை போடுங்க...
முன்கூட்டியே முடி நரைப்பதை ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் தடுக்கலாம். இது தவிர ஒருசில ஹேர் பேக்குகளை போடுவதன் மூலமும் நரைமுடி வெளியே தெரிவதைக் குறைக்கலாம்.
ஒருவரின் அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. அப்படிப்பட்ட தலைமுடி வானிலை, மாசுபாடு, போதுமான பராமரிப்பு இல்லாமை மற்றும் மோசமா உணவுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக 30 வயதிலேயே ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் நரை முடி வரத் தொடங்குகிறது. ஒருவருக்கு நரை முடி வருவதற்கும், தலைமுடி அதிகம் உதிர்வதற்கும் இரண்டு முக்கிய காரணங்கள் என்றால், அது மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை தான்.

பொதுவாக வயது அதிகரிக்கும் போது தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் முன்கூட்டியே முடி நரைப்பதை ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் தடுக்கலாம். இது தவிர ஒருசில ஹேர் பேக்குகளை போடுவதன் மூலமும் நரைமுடி வெளியே தெரிவதைக் குறைக்கலாம். இப்போது நரைமுடியைக் குறைக்க உதவும் சில நேச்சுரல் ஹேர் பேக்குகள் குறித்து காண்போம்.

நெல்லிக்காய் ஹேர் பேக்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளது. இவை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைத்து, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நரைமுடிக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றன. எனவே நெல்லிக்காய் ஹேர பேக்கை வாரந்தோறும் போடுவது நல்லது. இந்த ஹேர் பேக்கை போட, ஒரு கையளவு கறிவேப்பிலையை அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 2 டேபிள் ஸ்பூன் வல்லாரை கீரை பொடி சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து, முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

உருளைக்கிழங்கு ஹேர் பேக்
உருளைக்கிழங்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது முடியை கருமையாக்க உதவி புரிகிறது. இந்த ஹேர் பேக்கை போட, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, உருளைக்கிழங்கை நீக்கிவிட்டு, அந்நீரை குளிர வைக்க வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து, அதை தலைமுடியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி முடியை அலச வேண்டும்.

சீகைக்காய் ஹேர் மாஸ்க்
பழங்காலத்தில் ஷாம்பு பயன்படுத்துவதற்கு பதிலாக சீகைக்காய் கொண்டு தான் மக்கள் தங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாத்து வந்தனர். சொல்லப்போனால் சீகைக்காய் ஒரு நேச்சுரல் ஷாம்பு. இது நரைமுடியை குறைக்கும் திறன் கொண்டது. சீகைக்காயைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அதற்கு சீகைக்காய் பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் முடியை குளிர்ந்த நீரில் ஷாம்பு எதுவும் பயன்படுத்தாமல் அலச வேண்டும்.

துளசி ஹேர் பேக்
துளசியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இது பல ஆண்டுகளாக தலைமுடி பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. மறுபுறம் ப்ளாக் டீயல் டானிக் அமிலம் அதிகம் உள்ளது. இது முடியை கருமையாக்கும். இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்தி ஹேர் பேக் போட்டால் நரைமுடியை திறம்பட மறைக்கலாம். அதற்கு 4 டேபிள் ஸ்பூன் டீத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் நீரை ஊற்றி, அத்துடன் 5-6 துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அந்நீரால் தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நரைமுடி கருமையாக காட்சியளிக்கும்.

ஹென்னா ஹேர் பேக்
ஹென்னா ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் நிறமூட்டி. இந்த ஹென்னாவை காபியுடன் சேர்த்து பயன்படுத்தும் போது இன்னும் அற்புதமான பலன் கிடைக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டி ஹென்னா பொடியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் தலைமுடியில் தேங்காய் எண்ணெயை லேசாக தடவிக் கொண்டு, பின் இந்த ஹென்னா பேஸ்ட்டை தலைமுடியில் தடவி சில மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் நன்கு அலசினால், நரைமுடி கருமையாக தென்படும்.

ப்ளாக் டீ மாஸ்க்
ப்ளாக் டீ நரைமுடியை தடுக்க உதவும் ஒரு அற்புதமான பொருள். அதற்கு ப்ளாக் டீ இலைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதை மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 40 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.



Click it and Unblock the Notifications