For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையில் உள்ள 'இந்த' பொருட்கள் குளிர்காலத்தில் முடி உதிர்வை தடுத்து வேகமாக வளர வைக்க உதவுமாம்..!

குளிர்காலம் குறிப்பாக முடியில் பல பிரச்சனைகளை உருவாக்கலாம். ஏனெனில், குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரையே நாம் குளிக்க பயன்படுத்துகிறோம்.

|

முடி உதிர்தல் என்பது பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது பொதுவாக, குளிர்காலத்தில் சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனை ஏற்படும். வீட்டில் நீங்கள் எங்கு பார்த்தாலும் உங்கள் முடிகளை காண்கிறீர்களா? இது ஏற்கனவே மன அழுத்தத்துடன் இருக்கும் உங்கள் வாழ்க்கையை மேலும் மேலும் மன அழுத்தமாக்குகிறது. குளிர்காலம் குறிப்பாக முடியில் பல பிரச்சனைகளை உருவாக்கலாம். ஏனெனில், குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரையே நாம் குளிக்க பயன்படுத்துகிறோம். வெதுவெதுப்பான நீர் முடியின் அனைத்து ஈரப்பதத்தையும் நீக்கி, உலர்ந்த மற்றும் உடையக்கூடியதாக ஆக்குகிறது.

Kitchen hacks for perfect hair care during winters in tamil

தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்பை நீங்கள் தவிர்க்க குளிர்காலத்தில் சில பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உட்புற வெப்பம், வெளிப்புறம் வீசும் காற்று போன்றவற்றிலிருந்து கூந்தலை பாதுகாக்க நீங்கள் என்ன செய்வது என்பதைப் பற்றியும் உங்கள் கூந்தலின் பொலிவை மீட்டெடுக்கும் சில விரைவான ஹேக்குகளைப் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உதவிக்குறிப்பு #1

உதவிக்குறிப்பு #1

ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் ஷாம்பு, ஆமணக்கு எண்ணெய், கிளிசரின் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். ஈரமான முடி மற்றும் உச்சந்தலையில் இந்த ஹேர் பேக்கை தடவுங்கள். 10-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு லேசான ஷாம்புவை தேய்த்து முடியை அலசுங்கள்.

உதவிக்குறிப்பு #2

உதவிக்குறிப்பு #2

ஒரு வாழைப்பழம், 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றையும் சேர்த்து கெட்டியான பேஸ்டாக அரைக்கவும். இப்போது அதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவவும். 20-30 நிமிடங்களுக்கு பின்னர் தலைமுடியை நன்றாக அலசவும்.

உதவிக்குறிப்பு #3

உதவிக்குறிப்பு #3

குளிர்காலம் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியை உலர்த்தும் என்பதால், உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தொடர்ந்து எண்ணெய் தடவ வேண்டும். சூடான ஆர்கானிக் ஆமணக்கு எண்ணெயுடன் 2 துளிகள் லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்களை சேர்த்து பயன்படுத்தவும். மேலும், சிறந்த ஊட்டச்சத்திற்காக உங்கள் தலைமுடியின் வேர்களில் இந்த எண்ணெயை மசாஜ் செய்யவும். எண்ணெய் ஊறவைக்க உங்கள் தலைமுடியை துண்டால் மூடவும்.

உதவிக்குறிப்பு #4

உதவிக்குறிப்பு #4

உங்கள் முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க தீர்வு உள்ளது. அந்த எளிய தீர்வு அரிசி தண்ணீர். அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் சி, பி & இ ஆகியவை முடியின் தண்டுகளை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் அதை வலிமையாக்குகிறது. அரிசியை முதலில் தண்ணீரில் நன்கு கழுவவும். பின்னர், அரிசியை தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி கிண்ணத்தில் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். இது அரிசியின் இயற்கையான நொதித்தல் செயல்முறையைத் தூண்டும். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அரிசியை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். பின்னர், உங்கள் தலைமுடியை இந்த தண்ணீரில் அலசவும்.

உதவிக்குறிப்பு #5

உதவிக்குறிப்பு #5

பொடுகை சமாளிக்க, உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை அடிக்கடி கழுவ வேண்டும். பொடுகு எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அது தினசரி அல்லது ஒவ்வொரு நாளும் இருக்கலாம். இரண்டு ஸ்பூன் வெந்தய (மேத்தி) விதைகளை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில், விதைகளை பேஸ்ட் செய்து, எலுமிச்சை சாறு பிழிந்து தலையில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விடவும். பின்னர் தலைமுடியை சோப்நட் (ரீத்தா) அல்லது ஷிகாகாய் போட்டு அலசி தண்ணீரில் கழுவவும். உங்கள் தலைமுடிக்கு மூலிகை ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். இந்த வழக்கத்தை வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.

உதவிக்குறிப்பு #6

உதவிக்குறிப்பு #6

தேங்காய் பால் ஆரோக்கியமான கூந்தலுக்கு ஆரோக்கியமான இயற்கை மூலப்பொருள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய தீர்வு, புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட தேங்காய் பால் ஒரு பிழிந்த எலுமிச்சை மற்றும் 4-5 சொட்டு லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்களுடன் சேர்த்து கலக்கவும். 4-5 மணி நேரம் அப்படியே விட்டு, பின் தலைமுடியை அலசவும்.

உதவிக்குறிப்பு #7

உதவிக்குறிப்பு #7

வெங்காய சாற்றின் வாசனையை நீங்கள் தாங்க முடிந்தால், இந்த முயற்சி உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும். நீங்கள் செய்ய வேண்டியது வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி அதன் சாற்றை கசக்கி தனியாக எடுங்கள். அந்த சாற்றை உங்கள் உச்சந்தலையில் 20 நிமிடங்கள் சமமாக தடவி லேசான ஷாம்பூவுடன் கழுவ வேண்டும். வெங்காய சாறு உங்கள் திசுக்களில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் கந்தகத்தால் நிறைந்துள்ளது. மேலும், இது உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

தினமும் தலைக்குளியல் குளிர்காலத்தில் அவசியமற்றது. இது முடியை ஈரப்பதமாகவும் பாதுகாக்கவும் உதவும் இயற்கை எண்ணெய்களை அகற்றும். இந்த எண்ணெய் தேவைப்படும் காலத்தில் இது மோசமான முறை. அதனால் தலைமுடியை தினசரி கழுவ வேண்டாம். இல்லையெனில் உங்கள் முடி இன்னும் மிகவும் வறண்டு வலுவிழந்து போகும். அதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் உங்கள் தலைமுடியை அலசலாம். இந்த சின்ன விஷயங்கள் உங்கள் கூந்தலை குளிர்கால பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kitchen hacks for perfect hair care during winters in tamil

Here we are talking about the Kitchen hacks for perfect hair care during winters in tamil.
Desktop Bottom Promotion