For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகு தொல்லையா? அப்ப இதை கொண்டு முடியை அலசுங்க...சும்மா பளபளன்னு உங்க முடி இருக்குமாம்!

முல்தானி மட்டி உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கும் மற்றும் ஊட்டமளிக்கும். மேலும், இது உங்கள் ரசாயன உட்செலுத்தப்பட்ட ஷாம்புகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.

|

முல்தானி மட்டி பல ஆண்டுகளாக இந்திய குடும்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் பிரபலமாக அறியப்பட்ட, முல்தானி மட்டி அதன் குளிர்ச்சி விளைவுக்காகவும், நமது சருமத்தை அழகுபடுத்த அல்லது ஊட்டமளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகம் அறியப்படாத உண்மை என்னவென்றால், முல்தானி மட்டி நம் தலைமுடிக்கும் சிறந்தது மற்றும் ஷாம்பூவாக செயல்படக்கூடியது. முல்தானி மட்டி, புல்லர்ஸ் எர்த் என்றும் அழைக்கப்படுகிறது. இது களிமண் போன்ற ஒரு பொருளாகும். இது அழுக்கு மற்றும் எண்ணெயை நன்றாக உறிஞ்சுவதாக அறியப்படுகிறது. இது எண்ணெய் தலைமுடி உள்ளவர்களுக்கு சிறந்த சுத்தப்படுத்தியாக அமைகிறது.

how to wash hair with multani mitti for a scalp free of oil and dandruff in tamil

ஆனால் உலர்ந்த உச்சந்தலை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அடிக்கடி பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது உங்கள் உச்சந்தலையை இன்னும் வறண்டுபோக வைக்கலாம். முல்தானி மட்டியுடன் உங்கள் தலைமுடியை அலசுவதன் மூலம் என்னென்ன பிரச்சனைகளை எப்படி நீக்கலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைமுடிக்கு தரும் நன்மைகள்

தலைமுடிக்கு தரும் நன்மைகள்

முல்தானி மட்டி உங்கள் உச்சந்தலையில் ஹைட்ரேட் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இது நம் உச்சந்தலையில் இருந்து இயற்கையான எண்ணெய்கள் சுரப்பதை நிறுத்துகிறது, மேலும் இது எந்த பாக்டீரியா வளர்ச்சியையும் அல்லது பொடுகுத் தொல்லையையும் அழிக்க சிறந்தது. முல்தானி மட்டி உங்கள் தலைமுடியில் உள்ள ரசாயனங்களை நீக்கி சுத்திகரிக்கும் முகவராக செயல்படுகிறது என்றும் 2015 ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது.

படி 1

படி 1

உங்கள் உள்ளூர் ஸ்டோர் அல்லது ஆன்லைனில் சிறந்த முல்தானி மட்டிகளை வாங்கவும். ஒரு பாத்திரத்தில் 2-3 டீஸ்பூன் முல்தானி மட்டியை எடுத்துக் கொள்ளவும்.

படி 2

படி 2

முல்தானி மிட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ளவும். நீங்கள் அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவும். ஏனெனில், அதிகமாக தண்ணீர் சேர்த்தால், பயன்படுத்த கடினமாக இருக்கும். மேலும், எந்த கட்டிகளும் இல்லாமல், மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும்.

படி 3

படி 3

இப்போது, இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையிலும், முடி முழுவதும் தடவ வேண்டும். நீங்கள் அதை உங்கள் கைகளால் பயன்படுத்தி தடவலாம்.

படி 4

படி 4

முல்தானி மட்டி பேஸ்ட்டைப் பயன்படுத்திய பிறகு, உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் உச்சந்தலையில் குறைந்தது 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.

படி 5

படி 5

உங்கள் தலைமுடியை மசாஜ் செய்த பிறகு, பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் 10-20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் அலச வேண்டும். ஷாம்பு அல்லது கண்டிஷனர் எதுவும் பயன்படுத்த தேவையில்லை. முல்தானி மட்டி உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கும் மற்றும் ஊட்டமளிக்கும். மேலும், இது உங்கள் ரசாயன உட்செலுத்தப்பட்ட ஷாம்புகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to wash hair with multani mitti for a scalp free of oil and dandruff in tamil

how to wash hair with multani mitti for a scalp free of oil and dandruff in tamil.
Story first published: Wednesday, October 12, 2022, 17:45 [IST]
Desktop Bottom Promotion