Just In
- 30 min ago
இந்த பொருட்களை தெரியாம கூட தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க... இல்லனா உயிருக்கே ஆபத்தாகிடும்...!
- 7 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- 17 hrs ago
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- 17 hrs ago
உங்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டும் உங்க உதட்டை எவ்வாறு பராமரிக்கணும் தெரியுமா?
Don't Miss
- News
நான் விளம்பரப் பிரியரா.. என்னோட அரசியல் வாழ்க்கை தெரியுமா..? சீறிய முதல்வர் ஸ்டாலின்!
- Finance
சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்.. ஜூன் காலாண்டின் கடைசி நாள்..!
- Movies
கோல்டன் விசா.. நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம்.. டிரெண்டாகும் புகைப்படம்!
- Automobiles
மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு? குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!
- Technology
மீனவர் வலையில் சிக்கிய மர்மமான ஆழ்கடல் உயிரினம்.. இது அதிசய மீனா இல்ல அசிங்கமான மீனா?
- Sports
இப்படி ஒரு சோதனையா.. டிராவிட் எதிரே உள்ள 3 பெரும் பிரச்சினைகள்.. இங்கி, அணியை சமாளிப்பது கடினம்தான்!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பொடுகு தொல்லைய போக்கி உங்க முடிய கருகருன்னு நீளமா வளர வைக்க வீட்டுல செய்யும் இந்த 2 எண்ணெய் போதுமாம்!
பொடுகு இல்லாத கருகருவென அடர்த்தியான பொலிவான கூந்தலை பெற அனைவரும் விரும்பலாம். முடி நம் அழகை மெருகேற்றுவதிலும், தோற்றத்தை அழகாக காட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், தலைமுடி ஆரோக்கியம் உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. பொடுகு நிறைந்த உதிர்ந்த கூந்தல் உங்களை கவலையடைய செய்யலாம். பொடுகு நிறைந்த தலைமுடி உங்களை மற்றவர்களிடம் இருந்து தள்ளி வைக்கும். பொடுகு, உங்கள் உச்சந்தலையில் அரிப்பு, வெள்ளை தோல் செதில்களால் வகைப்படுத்தப்படுகிறது. இது உங்கள் கவனத்தை சிதறடிக்கும் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும். இது உங்கள் உச்சந்தலையில் க்ரீஸ் திட்டுகள் மற்றும் கூச்ச உணர்வு போன்ற பிற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் மிக அவசியம்.
எண்ணெய் தடவுவது மூலிகைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் முடியின் வேர்கள் சரியான ஊட்டச்சத்தை பெறுவதற்கான சிறந்த வழியாகும். அங்கு அவை அதை மேம்படுத்தும். ஆனால், நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் பழைய எண்ணெய் மட்டும் இதற்கு போதாது. உங்களுக்கு முடி எண்ணெய்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களின் கலவை தேவை. இன்று, பொடுகுக்கு சிகிச்சையளிக்க நீங்கள் வீட்டில் செய்ய வேண்டிய இரண்டு எண்ணெய்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தேங்காய் கலவை எண்ணெய்
தேவையான பொருட்கள்
250 மிலி தேங்காய் எண்ணெய்
12 (கையளவு) செம்பருத்தி மலர்கள்
1 கப் கறிவேப்பிலை
1/2 கப் மருதாணி இலைகள்
1 கப் பிராமி இலைகள்
1 டீஸ்பூன் அகஸ்தியா (ஹம்மிங்பேர்ட் மர இலைகள்)
3 நெல்லிக்காய்(சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது; விதைகள் அகற்றப்பட்டது)
4 துண்டுகள் சுரைக்காய்
2 டீஸ்பூன் வெந்தய விதைகள்
1 டீஸ்பூன் கருப்பு எள்

எப்படி செய்வது?
அனைத்து இலைகள் மற்றும் நெல்லிக்காயை நன்கு கழுவி, ஈரப்பதத்தை நீக்க வேண்டும். செம்பருத்தி பூக்களில் உள்ள மகரந்தத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும். குறைந்த மிதமான தீயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். பின்னர், நெல்லிக்காய் துண்டுகள் மற்றும் சுரைக்காய் துண்டுகளை சேர்த்து கிளறவும். வெந்தயம், எள் மற்றும் அனைத்து இலைகளையும், செம்பருத்தி பூவையும் எண்ணெயில் சேர்க்கவும். இடைவிடாமல் கிளறி, 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும். எண்ணெய் ஆலிவ் பச்சை நிறமாக மாறும். அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும். பின்னர், சுத்தமான, உலர்ந்த பாட்டிலில் வடிகட்டவும். மீதமுள்ள திடப்பொருட்களுடன் சாதாரண தேங்காய் எண்ணெயை உட்செலுத்தவும், பின்னர் அதைப் பயன்படுத்தவும். நீங்கள் எதிர்பாரத முடியின் பலன்களை பெறலாம்.

எப்படி உபயோகிப்பது?
எண்ணெயை கைகளில் ஊற்றி வட்ட இயக்கங்களில் தடவி விரல் நுனியை கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். தலைமுடியின் அனைத்து பகுதிகளிலும் எண்ணெய் தடவ வேண்டும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு, பிறகு கழுவவும் அல்லது ஒரே இரவு முழுவதும் அப்படியே விடவும்.
குறிப்பு: இதன் பலன்களை காண குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். உங்கள் இரவு நேர வழக்கத்தில் அதைச் சேர்க்கவும்.

செம்பருத்தி கலவை எண்ணெய்
தேவையான பொருட்கள்
20 செம்பருத்தி மலர்கள்
30 வேப்ப இலைகள்
30 கறிவேப்பிலை
5 சின்ன வெங்காயம்
1 தேக்கரண்டி வெந்தய விதைகள்
1 கற்றாழை இலை
15-20 மல்லிகைப் பூக்கள்
1 லிட்டர் தேங்காய் எண்ணெய்

எப்படி செய்வது?
வெந்தயத்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கற்றாழையை சிறு துண்டுகளாக நறுக்கவும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து, ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும். பச்சை நிறமாக மாறும் வரை 30-45 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கவும். அதை ஆறவைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். பின்னர், உங்களுக்கு தேவைப்படும்போது, உச்சந்தலையில் தடவி, நன்றாக மசாஜ் செய்யவும்.
குறிப்பு: வடிகட்டிய பின் இருக்கும் திடமான பகுதியை பாடி ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தவும்.

இறுதிக் குறிப்பு
பொடுகுக்கு பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் கூடுதல் சிகிச்சை தேவைப்படலாம். பல மருந்து ஷாம்புகள் மற்றும் உச்சந்தலை சிகிச்சைகள் பொடுகை குறைக்க பூஞ்சை காளான் அல்லது பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. 2-3 வாரங்களுக்குப் பிறகு உங்கள் வீட்டு வைத்தியம் அல்லது கடையில் கிடைக்கும் மருந்துகள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் ஒரு தோல் மருத்துவரை அணுக வேண்டும்.