Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
முக அழகை பராமரிக்கனுமா? தேனை இப்படி பயன்படுத்துங்கள் போதும்..!
முக அழகை பராமரிப்பது இன்றைய வாழ்க்கை முறையில் மிகவும் கடினமான ஒன்றாக மாறி விட்டது. அதிக காற்று மாசு, தவறான உணவு பழக்கம், இரவு நேரத்தில் தாமதமாக உறங்குதல், அதிக கெமிக்கல் கொண்ட கிரீம்களை பயன்படுத்துதல் இப்படிபட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் முகத்தின் ஆரோக்கியம் கெட்டு பல வித பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கரு வளையங்கள், தழும்புகள் ஆகியவை உண்டாகுகின்றன. இது போன்ற பாதிப்புகள் அனைத்தையும் எளிதில் குணமாக்க ஆயுர்வேத மருத்துவ குணம் கொண்ட தேன் உதவுகிறது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..
சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது. இதில் உள்ள என்சைம்கள், தாவரங்களின் மூலப்பொருட்கள் மற்றும் இதிலுள்ள நல்ல பாக்டீரியா ஆகியவை ஒன்று சேர்ந்து உங்களுக்கு சிறந்த முக அழகை தரும். தூய்மையான, பதப்படுத்தப்படாத தேன் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகளை நீக்கி பளபளப்பான சரும அழகை உண்டாக்கும். மேலும் இதன் இயற்கை தன்மை தோல் நோய்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுத்து உங்களை எப்போதும் இளமையாக வைக்கும்.

தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே முகத்திற்கு தேனை பயன்படுத்தினால் மிக விரைவிலே மங்கலான உங்கள் முக அழகு பொலிவாக மாறிவிடும். சிறிது எலுமிச்சை சாற்றுடன் தேனை கலந்து முகத்தில் தடவி வருவதால் கரும்புள்ளிகளை எளிதில் விரட்டலாம். அத்துடன் உங்கள் சருமத்தின் நிறத்தை கூட்டும், முகத்தை மென்மையாக்கும், முகத்தின் நிறத்தை பளபளப்பாக்கும், என்றென்றும் இளமையான தோற்றத்தை தரும். தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைட் முகத்தில் உள்ள தழும்புகளை மறைய வைக்க உதவும் என அழகியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் அதிகமான பருக்களால் அவதிப்பட்டு வருகின்றனர். பருக்கள் உருவாகி மறைந்து விடாமல், அந்த இடத்தில் பெரிய தழும்புகளையும் உருவாக்கி விடுகிறது. பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் மிக சுலபமாக நீக்க சிறிது நெய்யுடன் தேன் கலந்து தடவி வாருங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள புண்கள், வீக்கம், வடுக்கள் போன்றவை எளிதில் குணமாகும்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் அதிகமான பருக்களால் அவதிப்பட்டு வருகின்றனர். பருக்கள் உருவாகி மறைந்து விடாமல், அந்த இடத்தில் பெரிய தழும்புகளையும் உருவாக்கி விடுகிறது. பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் மிக சுலபமாக நீக்க சிறிது நெய்யுடன் தேன் கலந்து தடவி வாருங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள புண்கள், வீக்கம், வடுக்கள் போன்றவை எளிதில் குணமாகும்.
தினமும் 1 ஸ்பூன் தேன் குடித்து வருவதால் உடலில் இன்சுலின் அளவு சீராகி செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய ஹார்மோன்கள் நன்றாக சுரக்கும். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். ஒப்பற்ற முக அழகை பெற தினமும் நல்ல தூக்கம் அவசியம் வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை நிறைவேற்ற இயற்கையான முறையில் கிடைக்கும் தேன் உங்களுக்கு உதவும்.



Click it and Unblock the Notifications