Just In
- 1 hr ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 9 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- 9 hrs ago
பாதாம் எண்ணெயை உங்க தலை முடியில இப்படி யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளர்ந்து பளபளன்னு மின்னுமாம்!
- 11 hrs ago
வாஸ்துப்படி, இவற்றை வீட்டின் மாடிப்படிக்கு கீழே வெக்காதீங்க... இல்லன்னா அது உங்க முன்னேற்றத்தை தடுக்கும்...
Don't Miss
- News
அன்புமணின்னா டீசன்ட்னு நினைச்சீங்களா.. வேட்டிய மடிச்சு கட்டுனா தெரியும்.. ஆவேசம்! கையில் புது ஆயுதம்
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- Movies
வலியால் அவதிப்பட்ட குஷ்பு.. விமானநிலையத்தில் இதுகூடவா இல்லை.. மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கொத்து..கொத்தா உங்களுக்கு முடி கொட்டுதா? அப்ப இந்த எண்ணெய்களை ஒன்னா சேர்த்து யூஸ் பண்ணுங்க!
நம் உடலைப் போலவே, நம் தலைமுடியும் வலுவிழந்து உதிர்ந்து மற்றும் உடைந்து போகும். காலப்போக்கில், சுற்றுச்சூழல் பாதிப்பு, மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற கெட்ட பழக்கங்கள் மற்றும் மோசமான தண்ணீர் ஆகியவை உங்கள் தலைமுடியை பாதிக்கின்றன. முடி உதிர்தல் எல்லாரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது மற்றும் ஒவ்வொரு நாளும் நாம் அதிகளவு முடியை இழக்கிறோம். ஒரு நாளைக்கு 100 முடி இழைகளை இழப்பது இயல்பானது என்றாலும், ஒவ்வொரு முறையும் உங்கள் விரல்களை முடி வழியாக இயக்கும்போது கொத்து கொத்தாக முடியை இழப்பது ஒரு பெரிய சிக்கலைக் குறிக்கிறது.
இதுபோன்ற முடி உதிர்வு நிலைமைகளைச் சமாளிக்க, 5 முடி எண்ணெய்களை சேர்த்து செய்யப்பட்ட கலவை உள்ளது. இது விரைவில் சிறப்பாக அதை எதிர்த்துப் போராட உதவும். நீங்கள் செய்ய வேண்டியது அனைத்து எண்ணெய்களையும் சம அளவு எண்ணெய் விநியோகி பாட்டிலில் கலந்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். அவை என்னென்ன எண்ணெய் என்றும், அவற்றின் பயன்கள் என்னவென்றும் இக்கட்டுரையில் காணலாம்.

தேங்காய் எண்ணெய்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முடியில் புரத இழப்பைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயை கொண்டு உச்சந்தலையில் தவறாமல் மசாஜ் செய்வது, முடி உதிர்வதையும், உலர்ந்த மற்றும் உடையக்கூடிய தன்மையையும் தடுக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சங்கிலிகள் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் முடியை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது. மேலும், இது உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ஆமணக்கு எண்ணெய்
மற்ற எண்ணெய்களைப் போலல்லாமல், ஆமணக்கு எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. எனவே, ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது மற்றும் முடியின் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது முடியை வலுப்படுத்துவதோடு, முடி உதிர்வதைத் தடுக்கிறது. இதனால் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

இனிப்பு பாதாம் எண்ணெய்
உலர்ந்த கூந்தல் முனைகளின் மேலோட்டமான தோற்றத்தை நீங்கள் வெறுக்கிறீர்களா? இந்த பிரச்சனையை தீர்க்க பாதம் எண்ணெய் உங்களுக்கு உதவும். ஆம், பாதாம் எண்ணெய் உங்கள் தலைமுடியை பிளவுபடுவதை குறைக்கும். பாதாம் எண்ணெயில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது, இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் முடி சேதத்தின் எந்த அறிகுறிகளையும் குணப்படுத்த உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய்
கூடுதல் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் அல்லது டிஹெச்டி என்ற ஹார்மோனை உச்சந்தலையில் பிணைப்பதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இது முடி உதிர்வைக் குறைத்து, முடி வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது. உங்கள் தலைமுடியில் பொடுகு பிரச்சனை இருந்தால், ஆலிவ் எண்ணெயின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதை அழிக்க உதவும். ஆலிவ் எண்ணெயின் ஈரப்பதமூட்டும் விளைவுகள் முடி உற்பத்தியையும் தூண்டுகிறது.

ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் மினாக்ஸிடிலைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆண்களின் வழுக்கைக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு விருப்பமாகவும் இது கருதப்படுகிறது. நீண்ட, பளபளப்பான மற்றும் மிகப்பெரிய முடியைப் பெற, மேலே உள்ள 4 எண்ணெய்களின் கலவையில் 10 சொட்டு ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்து தலையில் பயன்படுத்தவும்.