For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா? அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...

ஒவ்வொரு நாளும் முடியை அழகாகவும், எண்ணெய் பசையின்றியும் வைத்திருப்பது மிகவும் கடினமான பணியாகும். குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவதற்கு மிகவும் சோம்பலாக இருக்கும். இதனால் தலைமுடி பிசுபிசுப்பாக மாறும்.

|

ஒவ்வொரு நாளும் முடியை அழகாகவும், எண்ணெய் பசையின்றியும் வைத்திருப்பது மிகவும் கடினமான பணியாகும். குறிப்பாக குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கடினமான வேலையாகும். குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவதற்கு மிகவும் சோம்பலாக இருக்கும். இதனால் தலைமுடி பிசுபிசுப்பாக மாறும்.

Does Your Hair Become Oily and Sticky In Winter? Here’s How You Can Fix Them Up

சில நேரங்களில் தொடர்ந்து தலைமுடியை அலசினால் பிசுபிசுப்பு போகாமல் அப்படியே இருக்கும். இந்த வகை தலைமுடி பாதிப்பிற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, காலநிலை மாற்றம், அதிகரித்த எண்ணெய் சுரப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன. இக்கட்டுரையில் இதற்கான காரணங்கள் மற்றும் அவற்றுக்கு சிகிச்சையளிக்க சில உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்காலத்தில் தலைமுடி ஏன் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கிறது?

குளிர்காலத்தில் தலைமுடி ஏன் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கிறது?

காரணம் #1

குளிர்காலத்தில் உச்சந்தலையில் ஏற்கனவே மிகவும் அதிகமாக எண்ணெய் இருக்கும். நாம் ஷாம்பு தேய்த்து தலையை அலசாமல் இருந்தால், அதிகப்படியான எண்ணெய் தலைமுடியில் சேர்கிறது. அதுமட்டுமின்றி எண்ணெய் பசையுடனான முடி அழுக்கு, தூசி மற்றும் பூச்சிகளை ஈர்க்கிறது.

காரணம் #2

காரணம் #2

குளிர்காலத்தில் வளிமண்டலத்தில் விசித்திரமான ஈரப்பதம் இருப்பதால், நமது தலைமுடி சற்று ஈரமாகவும், எண்ணெய்த் தன்மையுடனும் இருக்கும்.

காரணம் #3

காரணம் #3

அதிக வறுத்த உணவை சாப்பிடுவதால் கூட முடியில் எண்ணெய்த்தன்மை ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் அதிக எண்ணெய் சாப்பிட்டால், அந்த எண்ணெய் உங்கள் சருமத் துளைகள் மற்றும் உச்சந்தலையில் வழியத் தொடங்குகிறது.

காரணம் #4

காரணம் #4

உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் உங்கள் தலைமுடி எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கும். இதற்காக, உடற்பயிற்சி, ஒட்டப்பயிற்சி அல்லது யோகா செய்த பிறகு உங்கள் தலைமுடியை அலச வேண்டும்.

குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் முடியைப் பாதுகாப்பதற்கான டிப்ஸ்:

குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் முடியைப் பாதுகாப்பதற்கான டிப்ஸ்:

டிப்ஸ் #1

உங்கள் தலைமுடியை அடிக்கடி தொடாதீர்கள். ஏனென்றால் உங்கள் விரல்களிலிருந்து அழுக்கை உங்கள் உச்சந்தலைக்கு கொண்டு செல்வது இதுதான்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

உங்கள் தலைமுடியை சரியான இடைவெளியில் கழுவுங்கள். ஆனால் உடலானது உலர்ந்த உச்சந்தலையை ஈடுசெய்ய முயற்சிக்கும் போது, அதிகப்படியாக தலைமுடியை அலசினால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மறுபுறம், குறைவான முறை தலைமுடியை அலசுவதால் எண்ணெய்கள் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

உங்கள் தலையணைகள் மற்றும் சீப்புகளை சுத்தமாக வைத்திருங்கள் மற்றும் இறுக்கமாக முடியைக் கட்டுவதைத் தவிர்க்கவும். கெமோமில் க்ளென்சரைப் பயன்படுத்துங்கள், இது உங்கள் தலைமுடியை உள்ளே இருந்து வலிமையாக்கும்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

அதிகமான முடி பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மேலும், உங்கள் தலைமுடிக்கு வழக்கமான ஷாம்பூவுடன் எதிர்பார்த்த தீர்வுகள் கிடைக்கவில்லை என்றால், உங்கள் தோல் மருத்துவரை அணுகவும். இல்லையெனில், அதிகப்படியான எண்ணெய் பசையுடனான முடி காரணமாக உங்களுக்கு உச்சந்தலையில் தடிப்புத் தோல் அழற்சி மற்றும் செபொர்ஹெக் டெர்மடிடிஸ் இருக்கலாம், அதன் பிறகு உங்களுக்கு சிகிச்சை தேவைப்படலாம்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறுடன், கற்றாழை ஜெல்லைக் கலந்து ஒரு கண்டிஷனரைத் தயாரிக்கவும். இந்தக் கலவையை கண்டிஷனராகப் பயன்படுத்துங்கள். இந்தக் கலவை கூந்தலில் இருந்து எண்ணெயைக் குறைக்க உதவும்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

குறிப்பாக எண்ணெய் பசை முடிக்கு ஏற்ற ஷாம்பூக்களைத் தேர்ந்தெடுக்கவும். ஷாம்பூவின் சாதாரண pH நிலை 4.5, 6.7 ஆகும். அத்தகைய சூழ்நிலையில், எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளவர்களுக்கு, அதிக பி.எச் கொண்ட ஷாம்பு தேவை. கண்டிஷனர்கள் கூந்தலில் பூசப்படுகின்றன, எனவே எண்ணெய் நிறைந்த முடிக்கு கண்டிஷனர் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கக்கூடிய ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பெர்ரிப் பழங்களை சாப்பிடுங்கள்.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

க்ரீன் டீ மற்றும் மார்ஷ்மெல்லோவை அதிகம் சாப்பிடுங்கள். இது படிப்படியாக உங்கள் உச்சந்தலையில் இருந்து எண்ணெயின் அளவைக் குறைக்கும். முடிந்தவரை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள், வறுத்த அல்லது பொரித்த பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இதைச் செய்வதன் மூலம், இயற்கையான புரதம் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும், நீளமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Your Hair Become Oily and Sticky In Winter? Here’s How You Can Fix Them Up

Does your hair become oily and sticky in winter? Here's how you can fix them up. Read on...
Desktop Bottom Promotion