Latest Updates
-
Diwali 2026: தீபாவளிக்கு ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எங்கு வைக்க வேண்டும்? காரணம் என்ன? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்க தலைமுடி நீளமாவும் பளபளப்பாவும் இருக்க தேங்காய் பாலை இப்படி யூஸ் பண்ணா போதுமாம்...!
தேங்காய் பாலில் வைட்டமின்கள், புரதங்கள், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துகளும் நிறைந்துள்ளன. இவை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையை பராமரிப்பதில் வேலை செய்கிறது, அத்துடன் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
பிரபலமான கலாச்சாரம், குறிப்பாக திரைப்படங்கள் மூலம் தலைமுடி பெரிதும் ரொமாண்டிஸ் செய்யப்பட்டுள்ளது. நம் தோற்றத்தில் நம் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களை அழகாக காட்ட, உங்கள் தலைமுடியும் அழகாக பளபளப்பாக நீளமாக இருக்க வேண்டும் அல்லாவா? ஆதலால், உங்கள் சிக்கலான கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற நீங்கள் சில இயற்கை வழிகளை தேர்வு செய்யலாம். பொதுவாக தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் உங்கள் கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பல தயாரிப்புகள் சந்தை அலமாரிகளில் இடம்பிடித்தாலும், இயற்கையான பொருட்களே நமக்கு நல்லது. அந்த வகையில், கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேங்காய் பாலை பயன்படுத்துவதும் அப்படிப்பட்ட ஒரு தந்திரம் தான். தலைமுடிக்கு தேங்காய் பாலை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் முடிக்கு அதன் நன்மைகள் என்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

தலைமுடிக்கு தேங்காய் பால் நன்மைகள்
தேங்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளை கொண்டிருந்தாலும், தேங்காய் தண்ணீரை உட்கொள்வது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இயற்கையாகவே, தேங்காய் பால் ஒரு பணக்கார கொழுப்பு அமிலமாகும். இது ஈரப்பதமூட்டும் பண்புகளை அளிக்கிறது. இது உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. தேங்காய் பாலில் வைட்டமின்கள், புரதங்கள், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துகளும் நிறைந்துள்ளன. இவை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையை பராமரிப்பதில் வேலை செய்கிறது, அத்துடன் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

தேங்காய் பால் மற்றும் தயிர் கலவை
தேவையான பொருட்கள்
5 ஸ்பூன் தேங்காய் பால்
1 ஸ்பூன் தயிர்
1/4 ஸ்பூன் கற்பூர பொடி
செயல்முறை
ஒரு பாத்திரத்தில் 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலவையாக மாற்றவும். இந்தக் கலவையை முடியின் வேர்களில் நன்றாகப் பயன்படுத்துங்கள். ஒரு மணி நேரம் அப்படியே வைத்து, ஷாம்பூ கொண்டு முடியை நன்றாக அலசவும்

தேங்காய் பால் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவை
தேவையான பொருட்கள்
4 தேக்கரண்டி தேங்காய் பால்
1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
தேன் 1 டீஸ்பூன்
செயல்முறை
ஒரு கிண்ணத்தில் 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலவையாக தயாரிக்கவும். அதை மந்தமான வெப்பநிலையில் சூடு செய்து கொள்ளுங்கள். இதனை உச்சந்தலையில் மற்றும் முடியில் நன்கு தடவவும். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து, வழக்கமான ஷாம்பு கொண்டு முடியை கழுவவும்

தேங்காய் பால் மற்றும் தேன் மாஸ்க்
தேவையான பொருட்கள்
4 ஸ்பூன் தேங்காய் பால்
தேன் 2 ஸ்பூன்
செயல்முறை
2 பொருட்களை ஒன்றாக சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் மற்றும் முடி இழைகளில் நன்றாக மசாஜ் செய்யவும். பின்னர், 1-2 மணி நேரம் கழித்து முடியை அலசவும்.

சாதாரண தேங்காய் பால்
உங்களுக்கு 1/4 கப் தேங்காய் பால் தேவை. அதை சிறிது சூடாக்கவும். உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தேங்காய்ப்பாலைக் கொண்டு சுமார் 15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர், ஷவர் கேப் மூலம் தலையை மூடிக்கொள்ளவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, உங்கள் தலைமுடியை நன்றாக கழுவவும்.



Click it and Unblock the Notifications
