For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கேப்சியூல் மட்டும் இப்படி தடவினா போதும்... பொடுகு முழுசா நீங்கி முடி வேகமா வளரும்

வைட்டமின் ஈ ஊட்டச்சத்தும் வைட்டமின் ஈ எண்ணெயும் தலைமுடியை எப்படி வளரச் செய்கிறது என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அதை எப்படி பயன்படுத்தலாம்.

|

எல்லாருக்கும் நீளமான அடர்த்தியான கூந்தல் என்றால் பிடிக்காமல் இருக்காது. அதுவே இருக்கின்ற முடியும் உதிரத் தொடங்கி விட்டால் என்னவாகும். கண்டிப்பாக அதை எண்ணியே ஃபீல் பண்ண ஆரம்பித்து விடுவோம்.

Vitamin-E

ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் குறைபாடுகள் தான் கூந்தல் உதிர்விற்கு காரணம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். அதிலும் குறிப்பாக விட்டமின் ஈ குறைபாடு கூந்தல் உதிர்வை அதிகரிக்க கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் ஈ பற்றாக்குறை அறிகுறிகள்

வைட்டமின் ஈ பற்றாக்குறை அறிகுறிகள்

வைட்டமின் ஈ பற்றாக்குறை நம்முடைய உடலில் ஏற்படுகின்ற பொழுது. நமக்குப் பல்வேறு வகையான அறிகுறிகள் நம்முடைய உடலில் வெளிப்படும். அது பற்றி மிக விரிவாக கீழே பார்க்கலாம்.

MOST READ: நம்ம பாரிக்கர் வந்த கணைய புற்றுநோய்க்கு அறிகுறி என்ன? என்ன சிகிச்சை செஞ்சா தப்பிச்சிக்கலாம்?

தசைகள் பலவீனம்

தசைகள் பலவீனம்

மத்திய நரம்பு மண்டல வலிமைக்கு விட்டமின் ஈ என்பது மிக முக்கியமானது. எனவே விட்டமின் ஈ பற்றாக்குறை இருந்தால் தசைகள் வீக்கமடைய வாய்ப்புள்ளது

கவனம் மற்றும் நடத்தலில் சிரமம். விட்டமின் ஈ பற்றாக்குறையால் சமநிலை இழப்பு, மோசமான ஒருங்கிணைப்பு ஏற்படும்.

உணர்ச்சியற்ற தன்மை

உணர்ச்சியற்ற தன்மை

நரம்புகள் தான் சிக்னலை கடத்துகிறது. விட்டமின் ஈ பற்றாக்குறையால் இந்த சிக்னல் கடத்தலில் பிரச்சினை ஏற்படலாம்.

கண்பார்வை குறைபாடு

கண்பார்வை குறைபாடு

விட்டமின் ஈ பற்றாக்குறையால் மெக்குலார் டிஜெனரேசன் போன்ற கண் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும். இது கண்பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு

நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு

விட்டமின் ஈ பற்றாக்குறை இருந்தால் நோயெதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே இதனால் நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

MOST READ: கருப்பை நீர்க்கட்டியால குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? வெறும் பட்டை போதும் இத சரிபண்ண...

விட்டமின் ஈ பயன்கள்

விட்டமின் ஈ பயன்கள்

விட்டமின் ஈ ல் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது செல் பாதிப்பு மற்றும் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இது தலை மற்றும் சருமத்தின் pH அளவை சமநிலையில் வைத்தல், எண்ணெய் உற்பத்தியை சரி செய்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், மயிர்க்கால்களின் ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. இந்த விட்டமின் ஈ சத்து அடங்கிய உணவுகளாவன :நட்ஸ், காய்கறிகள், அவகேடா, அஸ்பாரகஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவை உள்ளன.

முடி உதிர்வே இனி கிடையாது

முடி உதிர்வே இனி கிடையாது

டிராபிகல் லைஃப் சைன்சஸ் ரிசர்ச் குழு நடத்திய ஆய்வில், விட்டமின் ஈ கூந்தல் உதிர்வை தடுக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் மன அழுத்தத்தை குறைத்து கூந்தல் உதிர்வை முற்றிலும் தவிர்க்கிறது.

pH அளவு சமநிலை மற்றும் எண்ணெய் உற்பத்தி

pH அளவு சமநிலை மற்றும் எண்ணெய் உற்பத்தி

pH சமநிலையின்மை மற்றும் எண்ணெய் உற்பத்தி போன்றவை கூந்தல் உதிர்விற்கு காரணமாக அமைகிறது. இந்த அதிகமான எண்ணெய் பிசுக்கு மயிர்க்கால்களை அடைத்து, அரிப்பு மற்றும் பொடுகை ஏற்படுத்துகிறது. விட்டமின் ஈ மயிர்க்கால்க்களுக்கு மாய்ஸ்சரைசர் கொடுத்து pH அளவை சமநிலையில் வைத்தல் மற்றும் எண்ணெய் பிசுக்கை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

விட்டமின் ஈ இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைக்கும் கூந்தலுக்கும் நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே இந்த விட்டமின் ஈ எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலுக்கு ஈரப்பதம் ஏற்பட்டு ஆரோக்கியமாக வளரும். இதன் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் குறைந்து கூந்தல் வளர்ச்சி இயற்கையாகவே தூண்ட ஆரம்பித்து விடும். இது நல்ல கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

MOST READ: அதிகமா டூத்பேஸ்ட் யூஸ் பண்ணினா இப்படி பல் அழுகிடுமாம்... அப்போ எவ்ளோ யூஸ் பண்ணணும்?

ஹேர் கண்டிஷனிங்

ஹேர் கண்டிஷனிங்

விட்டமின் ஈ முடி வளர்ச்சிக்கு ஈரப்பதத்தை கொடுத்து ஹேர் கண்டிஷனிங் செய்கிறது. வறண்ட மற்றும் சிக்கலான கூந்தலை சரி செய்கிறது. அப்படியே உங்கள் கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும். அதே மாதிரி உணவில் கூட விட்டமின் ஈ ஊட்டச்சத்துக்களை சேர்த்து கொள்ளுங்கள்.

எனவே இனி உங்கள் கூந்தல் அலைபாய இந்த விட்டமின் ஈ சத்தே போதும். உங்கள் கூந்தலும் அழகாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This is How Vitamin-E Helps Hair Growth

Vitamin E is a fat-soluble nutrient that is available from several food sources as well as in supplement form. Some people believe that vitamin E has a positive impact on hair health, although more research is necessary to support this theory.
Story first published: Wednesday, March 27, 2019, 11:51 [IST]
Desktop Bottom Promotion