Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வழுக்கையில் மீண்டும் முடிவளர சுண்டெலியை அரைத்து தேய்க்கும் விநோதம்... வேற என்னலாம் செய்றாங்க?
வழுக்கை தலையில் முடி வளரச் செய்வதற்காக அருவருக்கத்தக்க சில வழிமுறைகளை சில இடங்களில் மக்கள் பின்பற்றுகின்றனர். அதுபற்றிய ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு தான் இது.
இன்று தலை முடி வழுக்கை என்பது ஆண்களைப் பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனைப் போக்க பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் பண்டைய கால எகிப்தியர்கள் மற்றும் பழங்கால மக்கள் கடைப்பிடித்து வந்த சில பழக்கங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும்போது அதிர்ச்சியில் உறைந்து விடுவோம். நல்ல வேளையாக இந்த பழக்கங்கள் இப்போது நடைமுறையில் இல்லை.

வழுக்கையைப் போக்க பின்பற்றப்பட்ட சில வித்தியாசமான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. புறாவின் எச்சம்
தலை முடி வழுக்கைக்கான சிகிச்சையில் புறாவின் எச்சம் பயன்படுத்தப்பட்டதை உங்களால் நம்ப முடிகிறதா? நவீன மருத்துவத்தின் தந்தையாக கருதப்படுகின்ற ஹிப்போகிராட்ஸ் புறாவின் எச்சம், அபின், பீட்ரூட், குதிரைமுள்ளங்கி, மற்றும் மசாலாக்களின் கலவை ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்ட ஒரு மருந்தை வழுக்கைக்கான சிகிச்சையாக பரிந்துரைத்திருக்கின்றனர்.

2. காளை மாட்டின் விந்து
முடி வளர்ச்சியைப் பொறுத்தவரை, காளை மாட்டின் விந்துக்கள் புரதத்தில் நம்பமுடியாத அளவிற்கு வளமானதாக நம்பப்படுகிறது, இது முடி வளர்ச்சியை ஊட்டி வளர்க்க உதவுகிறது என்று முடி சிகிச்சைக்கான நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதும் யு.எஸ் மற்றும் யு.கேவில் முடி திருத்தகங்களில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

3. பசுமாட்டின் சிறுநீர்
பசுமாட்டின் சிறுநீர் கோமியம் என்று அழைக்கப்பட்டு இந்தியாவில் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுநீர் தலை முடிக்கான சிகிச்சையில் மிகவும் பயனளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த வகை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறுநீர் கன்னி மாட்டின் சிறுநீராக இருக்க வேண்டும் என்பது நியதியாகும். இந்த சிறுநீரை எடுத்து, சூரிய உதயத்திற்கு முன் அருந்த வேண்டும். இந்த செயலை எளிதாக்க, ஒரு இந்திய நிறுவனம் ஒரு குளிர்பானத்தை அறிமுகம் செய்தது . இந்த பானத்தில் 5% பசுவின் சிறுநீர் சேர்க்கப்பட்டுள்ளது.

4. ஹாட் சாஸ் ட்ரிக்
கொரிய ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு 2003 கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், எலிகள் மீது வேகமான விகிதத்தில் முடி வளர மிளகாயில் இருக்கும் காப்சைசின் என்னும் கூறு எப்படி உதவியது என்பதை விஞ்ஞானிகள் விவரித்தனர். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த பரிசோதனை மனிதர்களுக்கு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நேர்மறை பலனைக் கொடுக்கவில்லை.

5. மிருகங்களின் கொழுப்பை பயன்படுத்திய எகிப்தியர்கள்
வழுக்கையைப் போக்க பண்டைய கால எகிப்தியர்கள் ஒரு விசித்திர முறையைக் கையாண்டனர். சிங்கம், காண்டாமிருகம் , முதலை , புனை, பாம்பு, மலையாடு, ஆகிய மிருகங்களின் கொழுப்பை ஒன்றாகக் கலந்து ஒரு மருந்து தயாரித்து அதனை தடவுவதால் வழுக்கை குணமாகிறது என்று ஒரு வித்தியாசமான சிகிச்ச்சை முறையை கடைப்பிடித்து வந்தனர்.

6. குதிரை பற்கள் மற்றும் அரைத்த சுண்டெலி
இந்த மிக விசித்திர முறையை பின்பற்றி வழுக்கையை போக்க நினைத்தது நம் அனைவருக்கும் தெரிந்த கிளியோபட்ரா . தன் காதலர் ஜூலியஸ் சீசரின் வழுக்கையைப் போக்க அவர் சுண்டெலியை அரைத்து அதனுடன் குதிரை பற்களை சேர்த்து ஒரு மருந்து தயாரித்தார். ஆனால் அந்த மருந்து தகுந்த பலனை அளிக்கவில்லை. அதனால் ஜூலியஸ் தனது வழுக்கையை மறைக்க இலைகளால் செய்த மாலையை தனது தலையில் கிரீடம் போல் வைத்துக் கொள்ளத் தொடங்கினார்..

7. தலைகீழாக நிற்பது
வழுக்கையைப் போக்க முயற்சிப்பவர்களுக்கு யோகா தரும் நிவாரணம், தலைகீழாக நிற்பது. தலை கீழாக நிற்பதால், தலைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து இதன் காரணமாக முடி உதிர்தல் தடுத்து நிறுத்தப்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கிறது என்று யோகா செய்பவர்கள் நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications