வெள்ளை முடி அதிகமா இருக்கா? அதை போக்கும் சில எளிய இயற்கை வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் நீண்ட நாட்கள் இளமையைத் தக்க வைப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி வந்து பலருக்கும் முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது. இந்த வெள்ளை முடியை மறைப்பதற்கு பலர் ஹேர் டைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஹேர் டை பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்களால் ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மயிர்கால்கள் வலுவிழந்து முடி உதிர ஆரம்பித்துவிடும். பின் வழுக்கைத் தலையுடன் தான் சுற்ற வேண்டியிருக்கும்.

Top Best Home Remedies For White Hair

எனவே நரைத்த தலைமுடி சரிசெய்வதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மிகவும் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்கலாம். முக்கியமாக இயற்கை வழிகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. அதோடு தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.

உங்களுக்கு நரைத்த தலைமுடியை சரிசெய்ய வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். கீழே வெள்ளை முடியை சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய்

எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த நெல்லிக்காய், பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யவல்லது. இது உடல் பருமன், வயிற்று பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், தலைமுடி பிரச்சனைகள் போன்ற பலவற்றையும் சரிசெய்யவல்லது. மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடியது. கடைகளில் இது பவுடர் வடிவிலும் கிடைக்கிறது. இத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பயன்படுத்தினால், நரைமுடியை சரிசெய்யலாம்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.

* இறுதியில் நீரால் தலையை அலசுங்கள். இந்த செயலை தினமும் என சில நாட்கள் செய்து வருவதன் மூலம், வெள்ளை முடியைப் போக்கலாம்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தால் கண்களில் எரிச்சல் ஏற்படலாம். ஆனால் இதன் பேஸ்ட் வெள்ளை முடியைப் போக்கும். அதற்கு வெங்காயத்தை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். ஸ்கால்ப் நன்கு காய்ந்த பின் ஷாம்பு கொண்டு நீரால் தலைமுடியை அலசுங்கள் இந்த முறையை தினமும் செய்தால், எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம். ஒருவேளை வாரத்திற்கு ஒருமுறை செய்தால், எவ்வித மாற்றத்தையும் காண முடியாது. ஆகவே தினந்தோறும் தவறாமல் செய்யுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பின் அந்த வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* அதன் பின் அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

* வெங்காயம் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். ஆகவே ஷாம்பு எதையாவது பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்

எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்

வெள்ளை முடி பல நேரங்களில் நமக்கு எரிச்சலையும், நம் அழகைக் கெடுக்கும் வகையிலும் இருக்கும். இத்தகைய வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டுமானால், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை ஒரு நல்ல எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொடுக்கும். நிச்சயம் இந்த இயற்கை வழியால் நம் தலைமுடியில் மாயம் ஏற்படுவதைக் காணலாம்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

* பின்பு 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

* இப்படி ஒருவர் தினந்தோறும் செய்து வந்தால், நிச்சயம் வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு வெள்ளை முடி போக வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடியுங்கள். இதனால் உங்கள் முடி வெள்ளையாக மாறாமல் இருக்கும். மேலும் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும். கேரட் ஜூஸை தலைமுடியில் தடவ வேண்டிய அவசியமில்லை, குடித்தால் மட்டும் போதும். கேரட் ஜூஸைக் குடிப்பதால், வெள்ளை முடி வருவது தடுக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். ஆகவே தினமும் தவறாமல் கேரட் ஜூஸைக் குடியுங்கள்.

எள்ளு விதைகள் மற்றும் பாதாம் எண்ணெய்

எள்ளு விதைகள் மற்றும் பாதாம் எண்ணெய்

எள்ளு விதைகளை அரைத்து, பாதாம் எண்ணெயுடன் கலந்து, சில வாரங்கள் ஸ்கால்ப்பில் தடவி வருவதன் மூலம், நரைமுடியைத் தடுக்கலாம். இந்த முறையால் வெள்ளை முடி கருமையாக மாறும் என நிபுணர்களும் கூறுகின்றனர். எனவே உங்களது வெள்ளை முடியை கருமையாக்க நினைத்தால், இந்த முறையைப் பின்பற்றுங்கள். இந்த கலவை நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தைத் தரும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* எள்ளு விதைகளை அரைத்து பாதாம் எண்ணெயில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த எண்ணெயை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நீரால் அலச வேண்டும்.

* முக்கியமாக இளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கு மன அழுத்தமும் ஓர் காரணம். எனவே மன அழுத்தத்தைக் குறைத்து, சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடியும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலை நரைமுடியை சரிசெய்ய உதவும். அதற்கு கறிவேப்பிலையை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடவோ அல்லது ஹேர் டானிக் போன்று தயாரித்து தலைமுடிக்கு பயன்படுத்தியோ வரலாம். கறிவேப்பிலையில் உள்ள பண்புகள், தலைமுடிக்கு வலிமையளிப்பதோடு, தலைமுடியின் வளர்ச்சியையும் மேம்படுத்தும். கறிவேப்பிலை கொண்டு ஹேர் டானிக் தயாரிப்பது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் நற்பதமான கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் முதல் அந்த எண்ணெயை தினந்தோறும் தலைமுடிக்கு தேய்த்து வாருங்கள்.

வெண்ணெய்

வெண்ணெய்

பசு மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்வதோடு, நரைமுடி பிரச்சனையையும் தடுக்கும். நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபட, வெண்ணெயை அன்றாட டயட்டில் சேர்ப்பதோடு, வாரத்திற்கு 2-3 முறை மயிர்கால்களில் வெண்ணெயைத் தடவி ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலசுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Best Home Remedies For White Hair

Having grey or white hair can be an embarrassment. You can treat white hair by following some simple and inexpensive ways. Take a look at the best home home remedies for white hair.
Story first published: Wednesday, February 28, 2018, 9:00 [IST]